(Reading time: 27 - 54 minutes)

கார் பயணத்தில் இடையில் அவ்வப்போது  மித்ரன் பார்வை தன் மீது அமர்வதை உணர்ந்தாலும் அவன் புறம் திரும்பவே இல்லை இவள்…… மனமெல்லாம் தன் வீட்டார் மீதே….

மித்ரன் முதலில் இவளைக் கூட்டிப் போனது ஒரு ப்ரபல தமிழ் நியூஸ் பேப்பர் ஆஃபீஸிற்கு…. இவள் கண் முன்பாக இவர்களது புகைப் படத்தையும் கொடுத்து, அந்த பத்திரிக்கையில் திருமண அறிவிப்பு எப்படி வர வேண்டும் என விளக்கமும் சொல்லி அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வந்தான் அவன்.

ஆக நாளை முழு பக்க அளவில் இவள் திருமணம் அறிவிக்கப் பட்டுவிடும்…..

அம்மா அப்பா இதையெல்லாம் எப்படி எடுத்துக்கப் போறாங்க……??? அவங்கட்ட ஒரு வார்த்தை கேட்காம இவன் என்னல்லாம் செய்றான்….வீட்ல போய் இவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலையில இவள நிறுத்தி வச்சிருக்கானே…..அங்க போய் இவன் சொல்றதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டா இவளும் சேர்ந்துதான் இப்டியெல்லாம் செய்து வச்சுறுக்கான்னு தான வீட்ல நினைப்பாங்க……? எவ்ளவு வருத்தப் படுவாங்க….எதுலயும் எல்லாத்திலயும் என்னை நம்பி…என் முடிவுகள மதிச்சு நடந்தவங்கள ஒரு துளி அளவு கூட நான் மதிக்காம இப்படி செய்துட்டதாதான தோணும்…? அப்பாக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கும்….அதவிட அம்மா?....... அம்மா எப்பவுமே சாஃப்ட்….பிள்ளைங்களையும் அப்பாவையும் தவிர அவங்களுக்கு உலகம்னே எதுவும் கிடையாது…..அவங்களால இதை எப்டி தாங்க முடியும்…?? மனோ இப்படியாக தவிப்பும் வேதனையாகவும் வீட்டிற்கு போனால்…..

வீட்டிலோ இவள் நினைத்தபடி எதுவும் இல்லை…….அப்படி இயல்பாய் இருக்கும் படி பக்காவா ப்ளான் செய்து வைத்திருந்தான் மித்ரன்.

வர்கள் உள்ளே நுழையும் போதே அப்பா சந்தோஷமாக மித்ரனை வரவேற்றார். “வாங்க மாப்ள” என்றபடி.

அப்பாவின் சத்ததில் அம்மா உள்ளே இருந்து வெளியே வந்தார்…..வரும் போதே கையில் ஸ்வீட்….

முறையாய் வரவேற்று பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்

“அகதன் சொன்னான்….. மனோவ ஸ்விசர்லாந் ப்ராஜக்ட்க்கு செலக்ட் செய்திருக்காங்க….அந்த ப்ராஜக்ட் ரொம்ப யுனிக்…. நம்ம மகி அதை மிஸ் செய்துட கூடாது….. ஆனா அவள தனியா அனுப்ப மித்ரன் யோசிக்றார்….. மேரேஜ் செய்து கூட்டிப் போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறார்னு…… ” அப்பா சொன்ன விதத்திலேயே அவருக்கு அதில் பூரண சம்மதம் என்பது புரிகிறது மனோவுக்கு.

‘டேய் எப்படில்லாம் கதவிட்றுக்கடா நீ…..பாவம் அகி அவன் எதுக்காகவும் பொய் சொல்ல மாட்டான்…..அவனை இப்படி சொல்ல வைக்க இந்த மித்ரன் என்னல்லாம் செய்தானோ….கிரிமினல்….கேடி….’ மனோவிற்கு கோபம் கோபமாக வருகிறது…. ஆனால் என்ன செய்ய முடியும் இப்போது?

வீட்டிற்குள் சென்றதும் அப்பாவின் வரவேற்பில் தங்க மாப்பிள்ளையாய், சத்புத்திரனாய் அவர் காட்டிய சோஃபாவில் போய் இந்த மித்ரன் உட்கார்ந்திருந்தான்…. ஆனால் இவளால் இன்னும் சூழ்நிலைக்குள் வர முடியவில்லை…. வீட்டிற்குள் நுழைந்ததும் ஹால் தான் என்றபடியான அமைப்பு உள்ள வீடு அது.. அதில் தான் மித்திரன் வாசல் புறமாக உட்கார்ந்திருந்தான். இவளோ நுழைந்த நிலையிலேயே அங்கேயே நின்றிருந்தாள். அதாவது அவன் உட்கார்ந்திருக்க, அவனுக்கு அடுத்து இவள் நின்றபடி மனதிற்குள் அவனை கோப பந்தாடிக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது அருகில் நின்றவளை தன் கையால் மிக மெல்ல பிறர் கவனிக்கா வண்ணம் தட்டினான் மித்ரன்.

‘ஓ இவ முகத்தை பார்த்து வீட்ல உள்ளவங்க டென்ஷன் ஆகிடக் கூடாதுன்னு  சொல்றான் போல…’ வேறு வழி இன்றி மித்ரனுக்கு அடுத்து போய் சோஃபாவில் அமர்ந்தாள்.

“நீ ஏன் மனோ இப்டி இருக்க….? எப்டியும் உங்களுக்கு மேரேஜ்னு முடிவு பண்ணதுதானே…. இப்ப எதிர்பாராவிதமா கொஞ்சம் ப்ரிபோன் ஆகுது….அதுக்கு ஏன் இவ்ளவு ஃபீல் பண்ற….. மாப்ள நினைக்கிறதும் சரி தானே….. எங்களுக்கும் அந்த கிட்நாப் இன்சிடென்டுக்கு பிறகு மனசுக்குள்ள ஒரு பயம்தான்……இப்ப நீ மாப்ள கூட ஃபாரின் போய்டுவன்றது ஒரு வகையில ரொம்பவே நிம்மதியாதான் இருக்கு….” அப்பாவிற்கு இவள் சந்தோஷமாயில்லை என புரியாமல் இருந்தால் தான் அதிசயம்.…. ஆக அவர் இப்படியாய் இவளை தேற்றினார்.

மனோவிற்கோ ஒரே சிந்தனை. மித்ரன் அம்மா நேத்து தான் வந்து அவ்ளவு சொல்லிட்டு போயிருக்காங்க……அப்டி இருக்கப்ப மித்ரன் தன் அம்மா பத்தி  இவள் வீட்டில் என்ன சொல்லி சமாளித்திருக்கிறான்? அப்படி சமாளிக்கவில்லை எனில் இவள் வீட்டில் இந்த அளவுக்கு சந்தோஷமா மேரேஜுக்கு சம்மதிச்சிருக்க வாய்ப்பு இல்லை….அதை கேட்க நினைத்து வாய் வரை வந்தே விட்டது வார்த்தை.

ஆனால் அப்பொழுதுதான் அவளுக்கு தோன்றுகிறது….. இவளோட அப்பா அம்மா இந்த அளவு சந்தோஷமாக கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் மித்ரன் நிச்சயமாய் அதற்கு ஏற்ற மாதிரி எதாவது சொல்லி வைத்திருப்பான்……ஆனால் அவள் இதை மித்ரனை வைத்துக் கொண்டு பேசுவதை இவளோட அப்பா அம்மா விரும்பமாட்டாங்க…..ஏனெனில் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் அது மித்ரனின் அம்மாவைப் பத்தி குறை படும் வகையில் இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.