(Reading time: 27 - 54 minutes)

து மித்ரனுக்கு மாமனார் வீடு என்று ஆகிறதே…… அப்றம் இங்கு இவள் எப்படி தங்க??

“ஒன்னுமில்ல மனோ நான் என்ன சொல்ல நினச்சிருப்பேன்னு உனக்கே தெரிஞ்சிருக்கும்…..சரி அதை விடு…..உன் லைஃப் நல்லா அமைய வாழ்த்துக்கள்…..ஒன் வீக் கழிச்சுதான் வருவ போல…..அது வரைக்கு நான் இங்க இருந்துக்க மாட்டேன்…. நான் கிளம்புறேன்…..நீ என்னை தப்பா எடுத்துக்காத…..இப்ப வரைக்கும் நீ செய்த எல்லா ஹெல்புக்கும் ரொம்பவே நன்றி….” தவிப்பும் ஆதங்கமும் வேதனையுமாய் விஜிலா சொல்லிக் கொண்டு போக

காதில் விழுகிறது ஒரு சிறு குரல்….. மித்ரனின் குரல்….பின்னாலேயே வந்திருக்கிறான்….“அண்ணி அகதன் என் பாதுக்காப்புல ரொம்ப பத்ரமா இருக்கான்…..அதே மாதிரி உங்களுக்கு நான் அரேஞ்ச் பண்ணிருக்றது ஹவுஸ் அரெஸ்ட்….. இந்த வீட்ட விட்டு வெளிய காலை வச்சீங்கன்னா என்ன செய்து வச்சுறுக்கேன்னு உங்களுக்கே புரியும்….இங்க ஆன்டி அங்கிள் கூட வசதியா இருக்கனுமா…..இல்லை அங்க நான் ஏற்பாடு செய்திருக்க ரூம்ல வந்து தனியா அடஞ்சு கிடக்கனுமான்றது உங்க சாய்ஸ் தான்….அதோட இந்த மேரேஜ் எப்டி நடக்குதுன்னு ஆன்டி அங்கிள்ட்ட போய் சொல்ல ட்ரை பண்ணீங்கன்னா….இப்ப சந்தோஷமா இருக்ற அவங்க சந்தோஷம் மட்டும் தான் காணம போகுமே தவிர, வேற எந்த ப்ரயோஜனமும் கிடையாது……எந்த காரணத்தைக் கொண்டும் நான் இந்த மேரேஜ போஸ்ட்போன் செய்றதா கூட இல்லை….. புரியும்னு நினைக்கிறேன்….” ஏதோ ரொம்ப சாதாரண விஷயத்தை சொல்பவன் போல் சொன்ன மித்ரன்  

“பைதவே குட்டிப் பையன் படு க்யூட்…. என்ன நேம் வச்சிருக்கீங்க?” என்றான் வெகு இயல்பாய்.

விஜிலா மிரண்டு போய் பார்த்தாள் எனில்….. மனோவோ “மித்ரன்ன்ன்….” என கோபத்தை வாய்க்குள் அடக்கியபடி சீறினாள்….”அவங்களுக்கு இப்பதான் டெலிவரி ஆகிருக்குது… அவங்களை போய் மிரட்டிட்டு இருக்கீங்க…. நான் தான் உங்க ட்யூன்க்கு ஆடுறேன்ல போதாதா? அப்றம் என்ன?” தன் குரல் கீழ இருக்ற அம்மா அப்பாக்கு கேட்டுவிடக் கூடாதென்ற கவனம் பின் மனதில், ஓட சற்று தாழ்வான குரலிலேயே தன் கோபத்தை வெளியிட்டாள் மனோ.

அவள் பேசியது  கீழே உள்ளவர்களுக்கு கேட்கவில்லைதான்….. ஆனால் மித்ரன் கையில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் தானே….சத்ததில் குட்டி சிணுங்க ஆரம்பிக்க…..

“இதுக்குத்தான் நான் மெதுவா பேசுனேன் மனு…..ஆனாலும் நீ கத்தி அவனை அழவச்சுட்ட பாரு…..அண்ணி இந்தாங்க உங்க ஜூனியர்….” படு பாசகார சித்தப்பாவாக மித்ரன் குழந்தையை விஜிலாவிடம் நீட்ட, நடக்கும் எதின் தலைவாலும் புரியாமல் படு குழப்பத்தோடு அவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

டுத்து சொல்லிக் கொள்ளும்படியாய் எதுவும் நடக்கவில்லை….. மித்ரனுடன்  மனோகரியும் அவளது அம்மாவும் கிளம்பிச் சென்றனர் கல்யாண புடவை எடுக்கவென. ஒரு ப்ரபல ஷோரூமிற்கு அழைத்துப் போனான் அவன். வழியிலேயே ப்ரிண்ட் ஆகி இருந்த கல்யாண பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டான்.

ஷோரூமில் புடவையை எடுத்துக் காண்பிக்க காண்பிக்க ஆயிரம் கேள்வி கேட்டது அவன் தான்…….மனோகரியின் அம்மாவும் அவனும்தான் கண்ணும் கருத்துமாக சேலை செலக்க்ஷனில் ஈடுபட்டிருந்தனர். இவளது அனலிஸ்ட் மைன்டில் ஆயிரம் ஆராய்ச்சி….

ஆனால் மித்ரனோ “மனு நாங்களே பார்த்துட்டுருக்கோம்…..நீ வந்து உனக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லு” என கவனத்தை கலைத்தான்.

“எனக்கு சேரியே பிடிக்காது…..செலக்ட் செய்யவும் வராது…அம்மா பார்த்து எது எடுத்தாலும் ஓகே தான்…” என்றபடி போய் அம்மாவின் தோளில் மெல்ல சாய்ந்து கொண்டாள் இவள். இதெல்லாம் வழக்கமாக செய்கிறவள் இல்லை மனோ. அகதன் தான் எப்பவும் அம்மாவிடம் இழைந்து கொண்டு கிடப்பான். ஆனால் இன்று இருக்கும் மனநிலைக்கு இப்படியாய் தோன்றுகிறது.

“ஹேய் உன் ஹைட்டுக்கு சேரி ரொம்ப அழகா இருக்கும் மனு…..” என்றபடி அப்பொழுதுதான் இவள் புறம் திரும்பியவன் இவள் முகத்தில் என்ன கண்டானோ அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அடுத்து ஒரு வழியாய் இவள் ஒரு புடவையை முடிவு பண்ண,  அம்மா, அப்பா, அகதன், விஜிலா என அனைவருக்கும் உடைகள் வாங்கிக் கொண்டு, சேரி ப்ளவ்ஸ் தைக்க கொடுத்துவிட்டு….. ஒரு ஹோட்டலுக்கு கூட்டிப் போனான்.

அங்கு சாப்பாடு ஆர்டர் கொடுத்து வந்து சேரும் முன் கண்ணும் கருத்துமாய் கொரியரில் அனுப்ப வேண்டிய பத்திரிக்கைகளில் அட்ரெஸ் எழுதியது அவன். எதிரில் எரிச்சலோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவள்.

அடுத்தும் கொரியரில்  சென்று அனுப்ப வேண்டிய பத்திரிக்கைகளை கொடுத்துவிட்டு, வாங்கிய சமான்கள் மற்றும்  மற்ற பத்திரிக்கையுடன் அம்மாவை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு….மித்ரனுடன் காரில் தனியாய் இவள் ஏர்போர்ட் நோக்கி கிளம்பும் போது இருட்டி இருந்தது.

ப்படி உணர வேண்டும் என்றே புரியாத ஒரு உணர்வு நிலையில் இவள்….ஏதோ இயலாமை என்னவென்று சொல்ல முடியாத ஒரு வித தனிமை….இழப்பின் உணர்வு எல்லாமும் இவளுக்குள் பிசைந்து கொண்டிருந்தது அம்மாவை வழி அனுப்பிய நேரத்திலிருந்தே…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.