(Reading time: 27 - 54 minutes)

ங்கிள் சொல்லி இருந்தேன் இல்லையா…..ஸ்விசர்லாந்து விசா வாங்கனும்னு…….அதுக்கு இன்னைக்கே மனு மும்பை போகனும்…அங்க உள்ள ஸ்விஸ் எம்பஸில தான் தமிழ்நாட்டு பீபுள் விசா வாங்க முடியும்….ஏற்கனவே இந்த ப்ராஜக்டுக்கு லீகல் க்ளியரன்ஸ் வேற தேவைப் படுது….அதனால ஒன் வீக் கிட்ட ஆகிடும் அவ ரிட்டர்ன் ஆக….ஃபுல் செக்யூரிடி அரேஞ்ச் செய்திருக்கேன்……நீங்க எதுக்கும் பயப்படாதீங்க…..அதோட அவ கூட உங்க யாரையும் அனுப்ப முடியாது….சாரி…. கூட வர்றவங்க சேஃப்டி பத்தியும் பார்க்கனும்ன்றது ஒரு பெரிய  ரிஸ்க்….இன்னைக்கு நைட் 9 மணிக்கு ஃப்ளைட்…அதுக்கு முன்ன வெட்டிங் ட்ரெஸ் வாங்கனும்….அதோட மனு மும்பை போய்ருக்கானு யார்ட்டயும் காமிச்சுகாதீங்க அங்கிள்….அவ சேஃப்டிகாக சொல்றேன்”

ஆக சின்ன குறை கூட இல்லாமல் இவன் திட்டம் தீட்டி விட்டான்….இவளை இவள் சம்மதத்தோடேயே மும்பைக்கு கடத்தப் போகிறான்….அதுவும் இவள் அம்மா அப்பா கண் முன்னாலேயே………

டுத்து எல்லாம் சிறுதளவு கூட பிசிறின்றி நடந்தது……விசா அப்ளை செய்ய தேவையான டாகுமென்ட்ஸ் என சொல்லி இவளது அத்தனை ஒருஜினல் சர்டிஃபிகேட்டுகளையும் வாங்கிக் கொண்டான்…….பெருசா லக்கேஜ் எதுவும் வேண்டாம்….அவனது வார்த்தையில் இவளது சில உடைகளுடன் மாத்திரம் தயாரானது இவளது சூட்கேஸ்.

இவளது அம்மாவுடன் திருமண புடவை எடுக்க கிளம்பி நின்ற நேரம், அதாவது இப்பொழுது கிளம்புகிற இவள் இனி மித்ரன் சொல்கின்ற திருமண நாளில்தான் திரும்பி வருவாள்…..அதுவரை விசா என காரணம் காட்டி எங்கு அடைத்து வைக்க போகிறானோ? அதற்காக கிளம்பும் நேரத்தில் இறங்கி வந்தாள் விஜிலா. “மனோ உன்ட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றபடி

இவள் திரும்பி மித்ரனைப் பார்க்க அவனோ ஏற்கனவே விஜிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விஜிலா இவள் பார்வையைப் பின் பற்றி, ஒரு கணம் அவனைப் பார்த்தவள் மீண்டும் மனோகரியின் புறமே திரும்பிக் கொண்டாள்.. அடுத்து சற்று உறுத்தலாக தோன்ற மீண்டுமாய் மித்ரன் புறம் திரும்பியவள் சின்ன தலையசைப்புடன் “ஹலோ மித்ரன்…. நான் மனோவோட ஃப்ரெண்ட் விஜிலா….முக்கியமான விஷயமா கிளம்புறீங்கன்னு தெரியுது…ஒரு ஃப்யூ மினிட்ஸ் மனோட்ட பேசிக்றேனே “ என அனுமதி கேட்டாள்.

மனோகரிக்கு மனம் ஒன்றும் அந்த நேரம் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருக்கவில்லைதான்.

மனம் எங்கும் கோபமும் எரிச்சலும் இயலாமையும் புரியாமையும்தான்….அதுவும் குறிப்பாக அவை அனைத்தும்  மித்ரன் மீது தான் எரிமலையாய்….. இடி முகிலாய்…..புயல் மையமாய் எரிந்து கனன்று சுழன்று கொண்டிருக்கிறதுதான்…

ஆனாலும் இந்த நேரத்திலும் விஜிலா அவனை பேசிய விதமும் தன்னை அவனிடம் அறிமுகபடுத்திய முறையும் சுத்தமாக பிடிக்காமல் மனதிற்குள் நருச் என்கிறது இவளுக்கு.

மித்ரனை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று விஜிலா குறிப்பிட்டிருக்கிறாள். கணவனின் தம்பியையே பார்க்காத வாழ்க்கை முறை….அது என்ன மாதிரியான வாழ்க்கை முறையோ…… எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்…..எல்லாவற்றிற்கும் எளிதாக மித்ரனை குறை சொல்கிறர்கள் மித்ரனை சார்ந்த அனைவரும்….அவன் இவர்களை விலக்கி வைத்ததாகவே இருக்கட்டுமே……ஆனால் இவர்கள் ஏன் அவனைத் தேடி போகவில்லையாம்?...

இப்பொழுதும் ஆயிரம் ப்ரச்சனை அவர்களுக்குள் இருக்கட்டுமே…..அடுத்த வீட்டில் வைத்து….இவள் வீடு அவர்களுக்கு எப்படியும் அடுத்த வீடுதானே……அடுத்த வீட்டில் வைத்து தன் கொழுந்தனை முதன் முதலாக பார்க்கும் போது…….நான் மனோவோட ஃப்ரெண்டாம்….இதான் அறிமுகம் செய்துக்கிற விதமா….? ஏன் நான் உங்க அண்ணினு சொன்னா என்னவாம்? விரும்பினாலும் விரும்பாட்டாலும் அதானே முறை….. அவன் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்…… மித்ரன் விஜிலாவுக்கு இதுவரை என்ன கெடுதல் செய்துவிட்டானாம்?

இப்படியாக மனோவின் மனம் ஓட சட்டென “மித்ரன் இது விஜிலா உங்க அண்ணி…. உங்க வர்ஷன் அண்ணாவோட வைஃப்” என அவனிடம் அறிமுகம் செய்தவள் “விஜிலா இது தான் மித்ரன் உங்க ஹஸ்பண்டோட தம்பி “ என்றாள்.

இந்த நொடிக்கு முந்திய நேரம் வரை ஒரு காலமும் மனோ, விஜிலா மனதிற்கு பிடிக்காத எதையுமே பேசியதில்லை……அதோடு மித்ரனைப் பற்றி இன்று காலை அத்தனை மோசமாய் விஜிலா சொல்லும் போதும் அமைதியாய் கேட்டு நின்றிருந்தாளே தவிர, பதிலுக்கு எதுவும் உணர்ச்சி வசப்பட்டு மனோ பேசி இருக்கவில்லை…….

விஜிலா வெறும் கையோடு மனோ வீட்டில் வந்து தங்கி, ஒவ்வொன்றுக்கும் இவள் குடும்பத்தை சார்ந்திருக்கும் போது…. இவள் சின்னதாய் முகம் சுளித்தால் கூட அது கடுமையாய் வலிக்கும் என்ற உணர்வில் மனோ எப்போதும் விஜிலாவிடம் படு சாஃப்டாகத்தான்…. பார்த்து பார்த்துதான் நடந்து கொள்வது. ஆக மனோகரியிடம் இருந்து இப்படி ஒரு செயலை விஜிலா இந்த நேரம் சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை.

ஒரு கணம் விக்கித்துப் போனாள் விஜிலா. ஆனால் மித்ரனோ ஒரு நட்புப் புன்னகையுடன் கை குவித்தான். “வணக்கம் அண்ணி…. உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்…. உங்க ஹெல்த் இப்ப எப்டி இருக்குது? பாய் பேபின்னு கேள்விப் பட்டேன்…. குட்டிப் பையன் எப்டி இருக்கான்?” வெகு இயல்பாய் பேசிக் கொண்டு போனான் அவன்.

சூழ்நிலையை உணர்ந்து மெல்ல இயல்புக்கு வந்த விஜிலா “அது….நான் ஹெல்த்லாம் இப்ப ஓகே….குழந்தை நல்லா இருக்கான்….” மித்ரனுக்கு இப்படி யோசித்து யோசித்து அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் முன், மாடிக்குப் போயிருந்த மனோ குழந்தையை கையில் ஏந்தியபடி இறங்கி வந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.