" பிரபு சிரி .. சிரி " என்று சற்றுமுன் அவன் செய்தது போலவே அவனுக்கு குறுகுறுப்பு மூட்டினாள் . இருவரையும் மாறி மாறி பார்த்த நளினிக்குள் ஏதோ ஒரு அசையாத நம்பிக்கை இருந்தது .. எங்கே போய்விட போகிறது இவர்களின் உறவு ? இவனுக்கு இவள் தான் என்று இறைவன் முடிச்சு போட்டிருந்தால் அதை மருத்துவமோ, உறவுகளோ அல்லது எந்த சக்தியும் என்ன செய்துவிட முடியும் ? என்று தோன்றியது அவருக்கு! மறுநாளே விதி அவர்களை பிரித்துவிடும் என்று அறியாமல் ..
திருமண மண்டபதிற்கு அனைவரும் தயாராகி செல்ல, அந்த பெரிய வீட்டை பூட்டிவிட்டு காரில் ஏறினார் நளினி..காரில் நந்து சந்துருவின் மழலை பேச்சை ரசித்து கொண்டே மனைவிக்காக ட்ரைவர் சீட்டில் காத்திருந்தார் ப்ரகாஷ்..
“ போகலாம்ங்க”
“ என்ன நளினி நீ,கல்யாண பொண்ணுடைய தங்கை நீ, சீக்கிரமே அங்க இருக்க வேணாமா ? கடைசி ஆளாய் கிளம்பி வர்ரியே..” என்ற கணவரை பார்த்து சோர்வுடன் சிரித்தார் நளினி.. என்ன சொல்ல முடியும் அவரால்? “ சும்மா குட்டி போட்ட பூனை மாதிரி என் பின்னாலேயே சுத்தாதே,என் மாமியார் வீட்டாரின் முன்னால் நல்ல பேரு எடுக்க முயற்சி பண்ணாதே” என்று சுடுச்சொல்லை கொட்டியவளின் பேச்சை கணவரிடம் எப்படி சொல்லுவார் அவர்..
“ இல்லைங்க, வீட்டையும் பத்திரமா பார்த்துக்கணும்ல?அண்ணாவும் அண்ணியும் நேற்றே மண்டபதிற்கு போயிட்டாங்களே ,அதான் எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டேன்” என்றார்..
“சரி வா போகலாம்” என்று அவர் காரை ஸ்டார்ட் செய்ய, வீட்டின் கொத்து சாவியை ஹென்பேக்கில் வைக்க முனைந்தார் நளினி.. அதற்குள் நந்திதா
“அத்தை எனக்கு தா”என்று சாவியை கேட்டாள்..
“ வேணாம் குட்டிம்மா “என்று அவர்சாவியை எடுக்க முயல
“ அம்மா அம்மு பாவம்..சாவியை கொடும்மா “என்றான் சந்துரு..மெல்லமெல்ல நந்திதாவின் கெஞ்சல் விசும்பலாய் மாறிட, சாவியை அவளிடம் தந்துவிட்டு சிறிதுநேரம் கண் அயர்ந்தார் நளினி..
திருமண மண்டபம்..!
பெரிய வீட்டாரின் திருமணம் என்பதினால்கூட்டம் அதிகமாகவே இருந்தது..என்னத்தான் தனது அக்கா தன்னை வெறுத்தாலும் தங்கையாய் தனது கடமைகளை விட்டு கொடுக்காமல் அனைத்து வேலையையும் இழுத்து போட்டு கொண்டு செய்தார் நளினி..
நந்துவும் சந்துருவும் வீட்டுச்சாவியை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். பெரியவர்கள் அனைவரும் தத்தம் வேலையில் இருக்க, மீண்டும் சுபாங்கினியின் கண்களில் பட்டனர் இருவரும்..
“ சந்துரு”
“என்ன பெரியம்மா”
“ கையில என்னடா ?”
“ஒன்னும் இல்லையே” என்றான் சந்துரு சுபாங்கினியின் மிரட்டல்குரலுக்கு பயந்து..
“ஹேய் கைய நீட்டு” என்று அவள் அவன் கைகளை இழுக்க சாவி பொத்தென தரையில் விழுந்தது..
“ இந்த வயசுலேயே திருட்டுத்தனமா ?” என்றவள், சந்துருவின் கன்னத்தில் பளாரென அறைய, அடுத்த நொடி, அங்கு வந்த ப்ரகாஷ் சுபாங்கினியை அறைந்திருந்தார்..நடந்தது என்ன என்று தெரியாமல் அப்போது தான் அங்கு வந்த பாஸ்கரன் “மாப்பிளை “ என்றபடி அவரின் சட்டையை பிடித்தார்..
அவ்வளவுதான் “ நளினி” என்று கர்ஜித்தார் ப்ரகாஷ்..
“ என்னங்க என்னாச்சு ?”
“ புள்ளைய தூக்கிட்டு வா “
“என்ன ஆச்சுங்க ?”
“ உனக்கு தாய்வீடுன்னு ஒன்னு கிடையவே கிடையாது … வரப்போரியா இல்லையா ?” என்றார் அவர்..கண்களில் மிடுக்குடன் நின்றாள் சுபாங்கினி… “மாப்பிள்ளை” என்று பாஸ்கரன் ஏதோ சொல்லவர “ உன் தங்கச்சி செத்துட்டா… நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.. அதன்பின் அங்கிருந்தவர்களின் மூலமாய் நடந்ததை அறிந்துகொண்ட பாஸ்கரன் வெட்கி தலை குனிந்தார்..தனது மகள் பிரிந்து போன அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார் ரங்கன்… இந்த சூழ்நிலையால் எந்த பங்கமும் விளையாமல்சுபாங்கினியின் திருமணம் நடந்தே முடிந்தது.. ஆனால் திருமணம்முடிந்த சில மாதங்களிலேயே ஒரு விபத்தில் உயிரிழந்தாள்சுபாங்கினி… அவளுடைய இறுதி காரியங்களுக்கு கூட தங்கையும் தங்கையின் கணவரும் வராததை வைத்தே அவர்களின் கோபத்தை புரிந்து கொண்ட பாஸ்கரனுக்கு என்றாவது இதெல்லாம் சரியாகிவிடாதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது..
கலங்கிய விழிகளுடன் நடந்ததை நினைத்து பார்த்தார் ஞானப்ரகாஷ். அதே நேரம் அன்னையின் கதையை கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தான் சந்துரு..
“ விடு சந்துரு, எல்லாம் சரியாகிடும் “ என்றார் நளினி தனக்கு தானே ஆறுதல்கூறி கொள்வதை போல.
“ இதை எங்கிட்ட விடு அம்மு…நான் பார்த்துக்குறேன்” என்றான் சந்துரு. அடுத்து சந்துருவின் திட்டம் என்ன ? அடுத்த எபிசோட்ல சொல்றேன்.
ஹாய் ப்ரன்ட்ஸ்… நேரம் பற்றாகுறைன்னால இந்த எபிசொட் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.. அடுத்த எபிசொட் கண்டிப்பா, நீளமாக இருக்கும்..ஆதரவுக்கு மிக்க நன்றி.
Go to நினைத்தாலே இனிக்கும் episode # 27
Go to நினைத்தாலே இனிக்கும் episode # 29
நினைவுகள் தொடரும்...
Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...
{kunena_discuss:677}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.