(Reading time: 18 - 36 minutes)

11. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai manohari

ங்க என்ன நடக்குது மித்ரன்?‘ என்ற கேள்வி தாங்கிய ஒரு பார்வையால் எதிரில் நின்ற மித்ரனைப் பார்த்த மனோகரி….

“சொல்ல  வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்கல்ல….இடத்த காலி பண்ணுங்க….” என்றபடி அங்கிருந்த தன் சூட்கேஸை எடுத்து கட்டில் மீது வைத்து திறக்கப் போனாள்.

அவள் வார்த்தைக்குப் பின் மித்ரன் நடந்தான் தான். ஆனால் அவள் பார்வை வளைவுக்குள் இருந்த அறைக் கதவை நோக்கிப் போகவில்லை அவன்.  பின் சில க்ச் கர் கட ஷ்க் சத்தம். என்ன பண்றான் இவன்?

சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தாள். அந்த பெரிய அறையின் ஒரு புறத்தில் முழு சுவர் உயரத்திற்கும் மிக மிக அகலமாகவும் இருந்த வெண்ணிற ஜன்னல் தொகுப்பில் எதையோ கழட்டிக் கொண்டிருந்தான் அவன்.

இதை இவள் பார்த்தும் ஒன்னுதான் பார்க்காமலும் ஒன்னுதான். மீண்டும் தன் சூட்கேஸிற்குள் பார்வையை நுழைத்துக் கொண்டாள்.

இப்போது அவன் அறையின் வாசலைப் பார்த்துப் போனான். “ட்ரெஸ் மாத்றதுக்கு பாத்ரூமையே யூஸ் செய்துக்கோ….. இப்ப கதவை பூட்டிக்கோ மனு.”  இவள் கதவை பூட்டும் வரையும் அறைக்கு வெளியில் காத்து நின்றான் அவன்.

அவன் முகம் பார்த்தபடி இவள் கதவை மூட……இவள் கண் பார்த்தபடி அவன். அவனை அவன் பார்வையின் வழியாய் இவளுக்குள் கடத்தும் முயற்சியா?

‘போடா உன்னை நீயே வச்சுக்கோ’ மனதிற்குள் முனங்கியபடி கதவை மூடினாள் இவள்.

உள்ளே சாவியால் பூட்டி கதவில் இருந்த இரண்டு லாட்சுகளையும் போட்டு, இவள் திரும்பும் வரை அவன் அந்த பக்கம் அசையவில்லை என்பது அவனது காலடி சத்தத்தில் புரிந்தது.

தூக்கம் வரும் என்று தோன்றவில்லை எனினும்….படுக்கும் முன் குளித்து விட்டு படுக்க வேண்டும் என்று ஒரு நினைவு….உடை மாற்ற தேவையானவைகளை ஏற்கனவே எடுத்து கட்டிலின் மேல் வைத்திருந்தாள்…..கட்டிலைப் பார்த்து போனவள் மனதில் ஆயிரம் நினைவுகள்…

போய் அப்படியே கட்டிலிலே உட்கார்ந்துவிட்டாள் சிறிது நேரம். பின் மெல்ல இயல்புக்கு வந்தவள் கண்ணில் படுகிறது அந்த ஜன்னல் தொகுப்பு…. முழுவதும் வெள்ளை திரைகள் இடப் பட்டிருந்தாலும்….அது ஒரே திரை சீலையாய் இல்லாமல்…..ஆறேழு பீசாக இருக்கும் போலும். அதில் நடுவில் இருப்பது மட்டும் மெல்லத்தான் எனினும் காற்றில் அசைந்து கொண்டிருக்கிறது…..அப்படியானால் ???

மெல்ல அதை நோக்கிப் போனாள். அந்த இடத்தில் ஜன்னல் சிறிதளவு திறந்து இருந்தால் தானே இப்படி கர்டய்ன் ஆட முடியும்???

மித்ரன் வேற இங்கதானே என்னமோ செய்தான்?

அந்த கர்டனை திறந்தாள். அந்த ஜன்னல் தொகுப்பின் நடுவில் ஒரு வாசலும் இருக்கிறது என்பதே அப்போதுதான் புரிகிறது அவளுக்கு. அதன் கதவு முழுவதுமாக பூட்டப்படாமல் சின்னதே சின்னதாய் ஒரு கீற்று போன்ற இடைவெளியுடன் திறந்திருப்பது தெரிகிறது.

மெதுவாக சத்தமின்றி அந்த கதவை தள்ளினாள். முகத்தில் பட்டு….. முடியினை கலைத்து….முன் நெற்றியில் முன்னூறு முத்தமிடுகிறது கடல் காற்று….ஓ பால்கனிப் போல…. அந்த வாசலின் வழியாக ஒரு எட்டு வெளியே எடுத்து வைத்தாள். இப்போது அந்த பால்கனியின் தரையில் உட்கார்ந்திருக்கும் மித்ரன் கண்ணில் தெரிகிறான்.

‘அதான பார்த்தேன்……எப்டி இவன் நம்மள தனியா விட்டுட்டுப் போனான்னு? ‘ அந்த பால்கனி அடுத்த அறைக்கும் இவளிருக்கும் அறைக்கும் பொதுவானதாக இருக்கிறது என்பது பார்த்தவுடன் புரிகிறது.

ஆக அடுத்த அறையிலிருந்து இவன் இது வழியாக இவள் அறைக்கு வந்துவிட முடியும்…

இந்த வாசல் கதவின் பூட்டைப் பார்த்தாள். அதைக் காணவில்லை….அதைத்தான் கழட்டி எடுத்துருப்பான் போல அப்ப…. இன்ஸ்டென்டாய் சுர் என கோபம் ஏறினாலும்…..ட்ரெஸ் மாத்த அவன் குடுத்த இன்ஸ்ட்ரெக்க்ஷன் ஞாபகம் வரவும்……

அவள் பார்வை மீண்டுமாய் அவனை நோக்கிப் போகிறது….

தரையில் அமர்ந்து…. பால்கனி சுவரில் சாய்ந்து……இரு கால்களையும் நீட்டி…. எதிரிலிருந்த ஒரு அரையடி உயர குட்டி ஸ்டூலின் மீது ஒன்றன் மீது ஒன்றாக கால்களை வைத்தபடி அவன்… வழக்கமான ஃபார்மல்ஸில் இல்லாமல் முட்டு நீள காக்கி நிற கார்கோ ஷாட்ஸ்….கறுப்பு நிற நெக்லெஸ் டி ஷர்ட்…...

வழக்கமாக அவன் அருகில் நின்றாலே அவனது ஆளுமை இவள் எல்லையை ஆளுவது போல் ஒரு உணர்வு வரும் இவளுள்….அவன் எதையும் ஏன் இவளையும் பிசிறில்லாமல் கையாளும் கம்பீரம் காரணமோ….?

 ஆனால் இப்போது ஏனோ அவன் இவளைப் போன்றவனாக…..இவளுக்கு இணையானவனாக…. அவனது ஆல் நோயிங் அப்ரோச் அது இப்ப இல்லையோ….. முகத்தில் இழையோடும் ஆர்வமும்...ரசனையுமாய்…அப்படி என்ன செய்துகிட்டு இருக்கான்…?

 மடியிலிருந்த லேப்டாப்பிற்குள் பார்வையை நுழைத்திருந்தான் அவன்….

“சைட் அடிச்சது போதும்….வீட்டுக்கு பேசனும்னா மனுப் பொண்னு இங்க வரட்டும்….” இவளை நிமிர்ந்தே பார்க்காமல் தன் அருகில் வைத்திருந்த மொபைலை இடக்கையால் எடுத்து இவள் நின்றிருந்த திசையை நோக்கி நீட்டினான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.