(Reading time: 18 - 36 minutes)

ப்பாட்ட பேசனும்…..’ என்ற உந்துதலில் நேராக சென்று அவன் கையிலிருந்து மொபைலை வாங்கினாள். அவன் லேப்டாப்பில் ஏதோ நகையின் போட்டோ கண்ணில் படுகிறது…..எதுவும் ஜ்வெல் தெஃப்ட் பத்தி இன்வெஸ்டிகேட் செய்றானோ????

“என்னை ஸ்பை அவ்ட் செய்றதவிட்டுட்டு அப்பாக்கு கால் பண்ணு….” அவனருகில் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்க்காமலே அவன் அருகில் தரையை தட்டிக் காண்பித்தான்….அங்கே உட்கார சொல்கிறான்…

அங்கே உட்கார்ந்து விட்டாள் தான்…..ஆனால் இதுவரை அவன் அருகில் எப்போதும் சேரில் தான் உட்கார்ந்து வழக்கம்……இப்படி தரையில் இல்லை……அவன் பார்க்க காலை நீட்டி உட்கார ஒருமாதிரி இருக்கிறது…..ஆக  காலை சம்மணமிட்டு இவள்  உட்கார….

“மரியாதை மனசுல இருந்தா போதும்……நான் இருக்கப்ப காலை நீட்டி உட்காரலாம்….தப்பு இல்ல “ என்றான் அவன்.

“ஆமா இதுக்கொன்னும் குறச்சல் இல்லை…..” முனங்கியபடி காலை நீட்டிக் கொண்டாள்….. கால் கணுக்காலில் கொலுசு பதம் பார்க்கிறதே…..அதுக்காகவாவது நீட்டனும்…

அவன் தந்த மொபைலில் அப்பா எண்ணை அழைக்க……முதலில் அப்பா எடுத்தவர் “மனோ அம்மாட்ட பேசிட்டு வாம்மா…” என அம்மாவிடம் கொடுத்தார்.

அம்மாவோ லைனில் வரவும்….” பத்ரமா போய் சேர்ந்திட்டியா மகி….? அங்க நீ தங்க போற இடத்துக்கு போய் சேர்ந்தாச்சா? அது மாப்ளயோட அப்பா வீடாம்….சேஃபா இருக்கும்னு சொன்னாங்க…” அம்மா வரிசையாய் சொல்லிக் கொண்டு போக இதக் கூட என்ட்ட சொல்லலை அவன் என்று ஓடுகிறது இவள் மனம்.

அம்மாவிடம் பின் அப்பாவிடம் எனப் பேசி முடித்தவள் ஏதோ உறைக்க அனிச்சையாய் திரும்பிப் பார்க்கிறாள். அவன் கண்கள் இவள் கணுக்காலில் சல்வார் பாட்டத்திற்கு வெளியாக கிடந்த கொலுசின் மேல்….

காலை சட்டென மடக்கிக் கொண்டு அவனுக்கு ஒரு முறை….

“கொலுசு போடுவியா மனு…? அது உனக்கு ரொம்ப க்யூட்டா இருக்கு….” அவன் சொல்ல பதிலின்றி முறைப்பை தொடர்ந்தாள்.

“இன்னும் 7 டேஸ் என்னை நீ தாராளமா நம்பலாம்….” குரலிலும் அது வெளிப்படும் இதழிலும் குறும்பு கொண்டாட சொல்லியபடி அவன் லேப்டாப்பில் செய்து கொண்டிருந்த செயலை தொடர…

பால்கனி முழுவதும் இரும்பு க்ரிலால் மூடப் பட்டிருந்தாலும்……தரையில் உட்கார்ந்திருக்கும் இவள் முடியைக் கலைக்கும் அளவிற்கு காற்று இவள் மீது வீசிக் கொண்டிருக்கிறதுதான்…. அந்த காத்து செய்யாத சிலீரை.. இவள் முதுகு தண்டிலா? இல்லை முன் உடலிலா? இவனது இந்த வார்த்தைகள் செய்கிறன….

மொபைலை வைத்துவிட்டு விசுக்கென எழுந்து கொண்டவள் “நான் உங்க மண்டய உடைக்க இன்னும் 7டேஸ் இருக்குன்னு தெரியுது….” வெடுக்கென சொல்லிவிட்டு  தன்  அறைக்குள் வந்துவிட்டாள் மனோகரி.   

று நாள் காலை இவள் கிளம்பி தயாராக, அவளை அவன் கூட்டி சென்றது ஸ்விஸர்லாந்து எம்பஸி. மதியம் வரை அங்கேயே நேரம் போயிற்று.

‘கண்டிப்பா இப்ப எதுக்கு இவ ஸ்விசர்லாந்து போகனும்???’ பெரு மூச்சுவிட்டுக் கொண்டாள் மனோ. யாரு இவளுக்கு பதில் சொல்லப் போறதாம்?

“அது பெஸ்ட் ஹனிமூன் ப்ளேஸ் …..” அதே நேரம் இவள் காதுக்குள் கிசுகிசுத்தான் அருகிலிருந்து காரை டரைவ் செய்து கொண்டிருந்த மித்ரன்.

“மண்டைய உடைக்கிறதுக்கு கண்டிப்பா ஸ்விஸ் போகனுமா என்ன?” இவள்தான்.

இப்படி ஒரு மூடில் இருந்தவளை அடுத்து அவன் அழைத்து சென்ற இடம் ஒரு ஜுவெல்லரி ஷாப்…. அங்குள்ள பார்க்கிங்கில் சென்று காரை அவன் நிறுத்த இவளுக்கு இறங்கவே மனமில்லை. ஆனால் அவன் பிடிவாதம் இதற்குள் நன்றாக புரிந்திருக்கிறதே….

அவள் போய் அவன் எதிர் பார்ப்பதை செய்து முடிக்கும் வரையும் அவன் அசைந்து கொடுக்கப் போவதில்லை….

“எனக்கு இந்த ஜுவல் செலக்க்ஷன்லாம் வராது மித்ரன்…..பாடா படுத்தாம விடுங்களேன்….”

“உன்னை இப்ப ஏதாவது  செய்யுன்னு சொன்னனா?”

ஆக அடுத்து அவனோடு உள்ளே சென்றவள் கண்கள் அங்கிருந்த நகைகள் மேல் சுற்றி திரிந்தனவே தவிர…. எதன் மீதும் நிற்கவே இல்லை…

அவன்தான் அங்கு யாரிடமோ எதையோ பேசிக் கொண்டிருந்தான். அதுவும் ஹிந்தியில்….

அது கடையின் செகண்ட் ஃப்ளோர். எத்தனை நேரம் அவனது புரியாத ஹிந்தி சம்பாஷனையை கேட்க….வேறு வழி இன்றி அங்கிருந்த நகைகளை பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தாள் அவள். அது நெக்லெஸ் செக்க்ஷன்….

இவள் பொழுது போகாமல் பார்க்க….அங்கு நின்றிருந்த சேல்ஸ் கேர்ள் நகைகளை ஒன்றொன்றாக எடுத்து இவள் கையில் தந்து “சும்மா பாருங்க…..இதப் பாருங்க உங்களுக்கு நல்லா இருக்கும் “ என ஆரம்பிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.