(Reading time: 18 - 36 minutes)

வளை அவன் தோளோடு அணைத்து தன்னோடு சேர்த்து பிடித்திருப்பது போல் ஒரு ப்ரம்மையை அந்நேரம் மனதில் கண்டாள் மனோ அவன் சொல்லில்.

அந்த இன்பா இப்போழுது இவள் கன்னத்தை மெல்லமாய் தட்டினாள். “மனுவா…?” என்றபடி…

பின் இவள் மீதிருந்து கையை எடுத்துக் கொண்ட இன்பா “மனு வெர்சஸ் மனு… பேர்ல கூட ஒன்னா இருக்கனும்னு பார்த்தியா என்ன?” சின்னதாய் கேலியும் முழு சந்தோஷமும் அவள் குரலில்…

நீள புன்னகை பதிலாக மித்ரனிடமிருந்து.

இப்பொழுது அந்த இன்பாவின் முகம் சட்டென முழு தவிப்பிற்குப் போய் “ நான் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன் மித்ரா…சாரிபா….” எனும் போது மொத்தமாய் அழ ஆரம்பித்திருந்தாள்…

“ஹேய்…என்ன…என்ன நீங்க….? நீங்க இதுக்கு என்ன செய்ய முடியும்….?” மித்ரன் தவிப்பதை மனோவால் உணரமுடிந்தது. நடப்பதற்கும் நடந்ததற்கும் தலைவால் புரியவில்லை என்றாலும் மனோவிற்குமே ஒருவிதமாய் தவிப்பும் என்ன செய்ய என்று புரியாத நிலையும்தான்.

“வர்ஷன் என்னவிட மூனு வயசு பெரியவன் தெரியுமா….அவன நீ போன்னு தான் பேசுவேன்…. நான் உனக்கு ஒரு வயசு தான் மூத்த பொண்ணு….நீ என்னை எப்டி பேசுற பார்த்தியா…? நான் என்ன செய்திருக்க முடியும்னு உனக்கு புரியுதா…?” அந்த இன்பா கேட்க

‘ஓ இது இவனுக்கு அக்காவா?....அக்காவுக்கே இன்னும் மேரேஜ் ஆகலை…இவன் ஏன் இவ்ளவு வேகமா கல்யாணம் பண்றானாம்… ‘ என்று மனோவால் இப்போது யோசிக்க முடியவில்லை…… ‘யாருக்குமே இவனை தெரியலைனா…..இவன் யார் கூட இருந்தான்?..... இவனுக்குன்னு யாராவது இருக்காங்களா இல்லையா???’ என்று அவனுக்காக இரங்கத்தான் எண்ணுகிறது அவள் மனது.

“இவ்ளவு தானா? நானும் என்னமோன்னு நினச்சுட்டேன்…. உன் வயசு அதிகமா தெரிஞ்சிரும்னா இப்டி ஒரு அழுகை….இனி நீ கேட்டாலும் உன்னை மரியாதையா பேசமாட்டேன் ஓகேவா?.... எதிர்ல நின்னு அழுதா பார்க்க எவ்ளவு பயமா இருக்கு……” மித்ரனோ இன்பாவை வாரினான்…. சூழலை இலகுவாக்க அவன் முயல்வது மனோவுக்கு புரிகிறது.

இன்பாவுமே சிரித்தாள்......ஆனால் ஒரு நொடிதான்…. ஒரே நொடிதான்…. பின் திரும்பவும் முகம் இருள… விழி வழிய….கெஞ்சலாய் அவள் ஏதோ சொல்ல தொடங்க….அந்த நேரத்தில் அங்கு வந்தாள் ஒரு பெண்…

“இன்பா உன் பட்ஜட்டுக்குள்ள ஒன்னும் வேலைக்கு ஆகாது போலடி…” என்றபடி…அருகில் வந்த பின்தான் இவர்களுடன் இன்பா பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள் போலும்….பேச்சை பாதியில் நிறுத்துவது போல் நிறுத்திவிட்டாள் அவள்.

அவள் வரவும் இன்பாவுமே வெகு இயல்பாய் இருப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டாள்….

வந்தவள்  “ஹாய்….நான் ரோஷினி….இன்பாவோட ஃப்ரெண்ட்….சாரி நான் இடையில வந்துட்டேன் போல “ என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவள் திரும்பியும் சென்றுவிட்டாள்.

அடுத்து இன்பாவும் “சரி அப்ப நாங்க கிளம்புறோம்…யூ ப்ரொசீட் “ என்றபடி கிளம்ப தயாரானாள். “வர்ஷன் வரவும் அவன் வீட்டுக்கு வா மித்ரா….அங்க நாம அடிக்கடி மீட் பண்ணலாம்…அவனும் சந்தோஷப் படுவான்….…” என்றபடி தன் மொபைலில் இவர்கள் இருவரையும் அவசரமாக பதிந்தாள்.

மித்ரனோ அவள் சொன்ன எதற்கும் பதில் சொல்லாமல் “என்ன விஷயம் இன்பா….அதென்னது பட்ஜெட்டுக்கு ஒத்துவரலை….?” என்று பேச்சை முடியவிடாமல் நீட்டினான்….

அவன் இன்பாவுக்கும் அதை வாங்கிதர எண்ணுகிறான் என்பது மனோவுக்கு புரியாமலில்லை….அகதன் இந்த இடத்தில் இருந்தாலும் நிச்சயம் இதைத்தான் செய்வான்…..

இன்பா “அதெல்லாம்…” என மறுப்பாக தொடங்கியவள்

இவன் பார்வையில் என்ன கண்டாளோ….. “உன்ட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல…என் செயின் ட்ரிப் வந்த இடத்துல மிஸ்ஸாயிட்டு….அதே மாதிரி ஒன்னு வாங்கிட்டு போய்டலாம்னு பார்க்கிறேன்….. அப்பதான் வீட்ல ப்ரச்சனை ஆகாது….பட் என் கைல அதே மாதிரி வாங்க பணம் பத்தலை…..வர்ஷன் தான் என் செலவுக்கு சாங்க்ஷன் பண்ணனும்…..அவன் ஊர்ல இல்லையா…..அந்த நேரம் பார்த்து இப்டி ஒரு செலவு………” என்று விளக்கம் அளித்தவள்

பின் அவசரமாக “வீட்ல ப்ரச்சனைனதும் அம்மா திட்டுவாங்கன்னு நினச்சுடாத மித்ரா…..அம்மா ரொம்ப புரிஞ்சு நடந்துப்பாங்க….ப்ரச்சனையே வீட்ல ஒரு சூனியகார கிழவிய கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்களே அதுதான்….. அது கன்னா பின்னானு பேசும்….அதுவும் உலகத்துல நடக்கிற அத்தனை தப்புக்கும் காரணம் அம்மாதான்னு பேசும்…..அத வீட்டைவிட்டு துரத்தினாதான் நம்ம வீடு உறுப்படும்……அம்மாட்ட ஆயிரம் தடவை சொல்லிட்டேன்….இவங்க ஈகோ விடமாட்டேங்குது….” அவள் முகம் அந்த கிழவி எனப்பட்ட பெண்ணின் நினைவில் எரிச்சல் பொங்கும் ஏனம் ஆனது.

மித்ரன்  இன்பாவை ஒரு பார்வை பார்த்தவன் “அப்ப அம்மாட்ட பணம் வாங்கி செயின் வாங்கிட்டு போயிட வேண்டியதானே..?”  என்றான். அவன் தன் அம்மாவை நம்பாமல் இதை சொல்கிறானா இல்லை உண்மையிலேயே ப்ரச்சனைக்கு தீர்வு சொல்லத்தான் இந்த பேச்சா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.