(Reading time: 18 - 36 minutes)

தில் எப்பொழுது மித்ரன் வந்தான்…. அவன் சொல்லும் ஒவ்வொன்றையும் எப்பொழுது அந்த சேல்ஸ் கேர்ள் இவளுக்கு காண்பிக்க ஆரம்பித்தாள் என்பதை மனோ உணரவே இல்லை…… அத்தனை இயல்பாய் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தான் அவன்….

இயல்பாய்  இவள் நகைகளை பார்த்துக் கொண்டிருக்க….அப்போதுதான் கவனித்தாள்….. மித்ரன் இவளுக்கு இடபுறமாக புறமாக நின்று கொண்டு ஷோ கேஸில் அவனை கவர்ந்த நகைகளை சுட்டிக் கண்பித்துக் கொண்டிருக்க……இவள் அது தன் கையில் தரப் பட, தரப்பட ஒவ்வொன்றாய் கைகளில் வாங்கிப் பார்த்து……

 அவைகளில் “இது உண்மையிலே நல்லா இருக்கு…ட்ரை திஸ்….” என அவன் சொல்வதை கழுத்தில் வைத்து பார்த்துவிட்டு முன்னிருந்த டேபிளில் வைக்க….அதில் இது உண்மையிலேயே நல்லாருக்கு என மித்ரன் சொன்ன நகைகளை மட்டும்….இவளுக்கு வலபுறமாக வந்து நின்ற  ஒரு பெண் மிக அக்கறையாய் எடுத்துப் பார்ப்பதும் தன் மொபைலில் அவைகளை ஃபோட்டோ எடுப்பதுமாய் இருந்தாள்.

அவள் அதை வெளிப்படையாக செய்திருந்தால் கூட மனோவுக்கு ஒன்றும் வித்யாசமாக தோன்றி இருக்காது….ஆனால் அவள் அதை பிறர் கவனிக்கா வண்ணம் …… தான் ஷோ கேஸில் வேறு எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போல் நின்று கொண்டு…..டேபிள் மேல் இயல்பாய் கை ஊன்றி இருப்பது போல் கை வைத்துக் கொண்டு….அந்த ஊன்றி இருந்த கையிலிருந்த கேமிராவினால் அருகிலிருந்த நகைகளை…..அதுவும் மித்ரன் ஓகே சொன்ன நகைகளை மட்டுமாய்…..போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்….

ஏன்???????

மனோ திரும்பி அந்தப் பெண்ணைப் பார்க்க முயன்றாள்…. ப்ளாக் கலர் த்ரீ ஃபோர்த் நீள லெக்கின்ஸ்…..அதற்கு ப்ளாக்கும் அக்வா ப்ளூவுமாக ஒரு தொடை நீள டாப்ஸ்…..காதில் கையளவு இயர் ரிங் அசைவாடியது…. முதுகு நீள பார்லர் ட்ரீட்டட் முடியை ஃப்ரீஹேர் விட்டிருந்தாள்….இடத் தோளிலிருந்து வலது இடை வரை ஓடும் ஒரு குட்டி ஹேண்ட் பவுச்…..அவள் கையிலிருந்த மொபைலிலிருந்து எல்லாமே அடித்து பறைசாற்றின அவளது செல்வ செழுமையை…..

 மனோ பார்க்க முயல்வதை அவளும் உணர்ந்தாள் போலும்…..அவள் இயல்பாய் தூரத்திலிருக்கும் யாரையோ தேடுவது போல் முகம் திருப்பிக் கொண்டாள்….இவள் ஒவ்வொரு முறை அவள் முகம் பார்க்க முயலும் போதும் அவள் அதையே செய்தாள்….

‘இது தப்பாச்சே…..எந்த ஷாப்லயும் இப்படி ஜுவல்ஸை  ஃபோட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டாங்களே….’

 மித்ரன் வேற ஏதோ ஜுவல் பிக்சரோட நேத்து ஆராய்ச்சி செய்துட்டு இருந்தான்….இன்னைக்கு ஜுவல்  ஷாப்ல வச்சு இப்டி ஒரு பொண்ணு….

இதை மித்ரானிடம் சொன்னால் என்ன?

இவள் அதற்காக மித்ரன் புறம் திரும்பி மெல்ல கூப்பிட்டாள்.

ஆனால் அப்போதுதான் தெரிகிறது மித்ரன் ஏற்கனவே அந்த பெண்ணைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான்…. அவன் பார்வையையும் தவிர்க்க அந்தப் பெண் அதே முகம் திருப்பல்….யாரையோ தேடல்…..

மித்ரன் முகத்திலிருந்த  பாவத்தை என்னவென்று சொல்ல??

நிச்சயம் இந்தப் பெண் இவனுக்கு தெரிந்தவளாகத் தான் இருக்க வேண்டும்…. “யாரது? இதுதான் அந்த மகிபாவா?” மெல்ல அவனிடமாக கிசு கிசுத்தாள் மனோ. இப்பொழுது அவன் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு…இவள் தலையை சின்னதாய் தட்டினான்… “இது இன்பான்னு நினைக்கிறேன்….”

‘ஆன்…..இன்பானா உன் அம்மா சொன்ன உன் சிஸ்டரா?... அக்காவா தங்கையா? இன்பான்னு நினைக்கிறேன்னா….இது என்ன மாதிரியான அண்டர்ஸ்டாண்டிங் அண்ட் ஃபேமிலி பாண்டிங்…??’ மனோ ஷாக்காகி முடிக்கும் முன் அருகிலிருந்த அந்தப் பெண்

“என்னை உனக்கு தெரியுமா மித்ரா…..?” என்றபடி இவன் இரு கைகளைப் பிடித்தாளே பார்க்கலாம்…..அதிர்ந்து போய் பார்த்தாள் மனோ….

“ம்….அப்பா இருக்கப்ப உங்க ஃபோட்டோலாம் காமிச்சுருக்காங்க…..ரீசண்ட்டா அண்ணாவ மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது….உங்களைப் பார்க்க முடியலை….” அவனுமே தன்னைப் பற்றி இருந்த தன் சகோதரியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

இவன் முகத்தில் பாசம் தெரிகிறது என்றால் அந்த இன்பா கண்ணில் இதற்குள் நீர் முத்துக்கள்…. “இனிமேலாவது நாம எல்லாம் நல்லபடியா இருக்கனும் மித்ரா….அம்மாக்குமே இப்பல்லாம் உன்னப் பத்தி ரொம்ப கன்சர்ன்….கில்டிகான்ஷியன்ஸ்…அதை வெளில காமிச்சுக்க அவங்களுக்கு முடியலை….” என ஆரம்பித்தவள்….” நான் உன்னை தப்பாவே நினைக்கலை மித்ரா….கண்டிப்பா உன் பக்கம் எந்த தப்பும் இல்லைனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு “ என்று உறுதி சொன்னாள்.

இப்பொழுது இவள் புறமாக திரும்பி “இவங்களத்தான் நீ மேரேஜ் செய்யப் போறியா மித்ரா….? ரொம்ப க்யூட் பேர் நீங்க… உன்னை  இப்டி சேர்ந்து  பார்க்கவே சந்தோஷமா இருக்கு….” அந்த இன்பாவின் கண்ணில் இருந்து இன்னும் இன்னுமாய் நீர்….அவள் முகத்தில் உண்மையான சந்தோஷம்…

“ம்…இது மனு….மனோ” சொல்லியபடி இவளை இன்னுமாய் நெருங்கி நின்றான் மித்ரன். மகிழ்ச்சியும் பெருமிதமும்…இவள் என்னவள் என்று சத்தமின்றி சொல்லப்பட்ட நிறைந்த அறிவிப்பும் அதில்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.