(Reading time: 18 - 36 minutes)

னக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன் மித்ரன்….. அப்பா உயில் படி அம்மாவுக்கு வந்ததில்  கொஞ்ச பணத்தை மட்டும் கைல வச்சுகிட்டு அம்மா மீதி எல்லாத்தையும் எங்க ரெண்டு பேருக்கும்னு ட்ரான்ஸ்ஃபர் செய்துடாங்க….நானும் வர்ஷனும் எவ்ளவு சொல்லியும் அவங்க கேட்கலை…. இப்பவும் அம்மா கைல இருக்க பணத்திலதான் தன் செலவ பார்த்துப்பாங்க…..அதையும் நான்  எப்டி இதுக்கெல்லாம் செலவு செய்யுங்கன்னு கேட்க முடியும்….?

எனக்குள்ள ஷேரை நான் மேரேஜுக்கு பிறகுதான் நானே ஹேண்டில் பண்ண முடியும்…….பட் அதுவரைக்கும் அம்மா பெர்மிஷனோடு நான்  பணம் எடுக்கலாம்னுதான்  அப்பா ஏற்பாடு செய்திருந்தாங்க…..ஆனா அதையும் அம்மா வர்ஷன் மேரேஜுக்கு பிறகு வர்ஷன் பெர்மிஷனோட நான் செய்யலாம்னு மாத்திட்டாங்க….அவனோடத அவன் பார்த்துகலாம்னு ஆன பின்ன….உன்னோடதையும் அவனே பார்க்கட்டும்னுடாங்க அம்மா…..

வர்ஷன் இப்ப டூ மந்த்ஸா ரொம்பவே பிஸி….அவனை டைரக்டா கான்டாக்ட் செய்யவே முடியலையா…..எனக்கு அப்டி ஒன்னும் செலவு இல்லை….அவன் வர வரைக்கும் இப்ப என்னனு விட்டுடேன்….இதுல இங்க ஒரு ஃப்ரெண்ட் மேரேஜுக்கு வந்தேன்…வந்த இடத்துல இப்டி ஆகிட்டு……20,000 க்கு மேல நான்  செலவு செய்யனும்னாலே வர்ஷன் சைன் வேணும்…..அதான்….

அம்மாவ பொதுவா தப்பா நினைக்காத மித்ரா…உன் விஷயத்துல அவங்க மார்க்கை மிஸ் செய்துட்டாங்கதான்….. பட் மத்தபடி ரொம்ப நல்லவங்க….” எப்படியும் தன் அம்மாவை தம்பிக்கு புரிய வைத்துவிடும் வேகம் இன்பாவுக்கு…

கேட்டிருந்த மித்ரன் முகத்திலோ ஒரு விதமான புன்னகை. “ஆமா உங்க ரெண்டு பேர் வகையில் ரொம்பவே நல்லவங்கதான்….” குத்தலாக எதுவும் அவன் சொல்லவில்லைதான்……ஆனால் அறை வாங்கியவள் போல் நின்றாள் இன்பா…

“சாரி உங்க ரெண்டு பேரையும் நான் எதுவும் சொல்லலை….. உங்கட்டயாவது அவங்க நல்லா இருந்தா சரிதான்….. பைதவே எங்களுக்கு வர்ற ஃப்ரெய்டே மேரேஜ்…. நீ  கண்டிப்பா வா…..அப்டியே முடிஞ்சா அம்மாவையும் கூட்டிட்டு வா…உன் மெயில் ஐ டி குடு இன்விடேஷன் அனுப்பி வைக்கேன்….“ இயல்பான தொனிக்கு இவன் வந்திருக்க இன்பாவின் முகத்திலுமே பரவசம்.

‘தம்பி அம்மாவையும் கூட்டிட்டு வான்னு சொல்லிட்டானே….’ தன் ஹேண்ட் பேக்கிலிருந்து தன் கார்டை எடுத்து கொடுத்துக் கொண்டே “கண்டிப்பா…கண்டிப்பா வரேன்…அம்மா நிச்சயமா வருவாங்க…. ” அவள் சந்தோஷ ஊற்றாக சொல்லிக் கொண்டு போக….

“ஆனா வந்த இடத்துல பொண்ண மாத்த சொல்லக் கூடாது பார்த்துகோ….” கிண்டல் தொனியில் தான் மித்ரன் சொன்னான்….. இன்பாவின் பதிலை வைத்து எதையும் கண்டுபிடிக்க முனைகிறானோ என்று இருந்தது மனோவுக்கு….

“சே….அம்மா ஏன் அப்டி சொல்லப் போறாங்க….அவங்க எப்பவும் நம்ம மனசுக்கு பிடிச்சு கல்யாணம் செய்யனும்னு நினைக்கிறவங்க…..வர்ஷன் மேரேஜை எவ்ளவு சந்தோஷமா செய்து வச்சாங்க தெரியுமா?” இப்படியாய் ஒரு பதில் இன்பாவிடமிருந்து…

இந்த பதிலில் மனோவின் முகம் மாறிக்கொண்டு போனாலும் மித்ரன் இயல்பாகவே எடுத்துக்கொண்டான் போலும்… அது சம்பந்தமாக எதுவும் சொல்லாமல்….”அப்ப நீ ஏன் இன்னும் மேரேஜ் செய்யாம இருக்க? உன் மேரேஜ் எப்போ?” என கேள்வியை திருப்பினான்…

“ப்ச்…பெருசா ஒரு காரணமும் இல்லை….எனக்கு அம்மாவை தனியாவிட்டுட்டு …அதுவும் அந்த கிழவிட்ட விட்டுட்டு போக மனசில்லை அவ்ளவுதான்….நீ இப்ப போய் இதெல்லாம் நினைக்காத….வீட்ல முதல்ல மேரேஜாக வேண்டியது உனக்குத்தான்….” என்றவள் மனோவிடமாக திரும்பி…..

”நாங்கல்லாம் ….” என ஏதோ சொல்ல தொடங்கியவள்…. பின் அதை அப்படியேவிட்டு….. “நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா ரொம்ப நல்லா இருப்பீங்க” என்றாள். அவள் முழு இருதயத்தில் இருந்து இதை சொல்கிறாள் என்பது மனோவுக்கும் புரியாமல் இல்லை.

அடுத்து அவள் என்ன சொல்ல வந்தாளோ…சட்டென யாரையோ பார்த்தவள் “மித்ரா நான் கிளம்புறேன்….நான் உன்னைப் பார்த்த விஷயம் இப்ப வீட்டுக்கு போயிடக் கூடாது…..பை…… உங்க வெட்டிங்க்ல பார்ப்போம்…. மனோவ நல்லா பார்த்துக்கோ….பை மனோ…” இவர்கள் பதில் சொல்லும் முன்னும் கிட்டதட்ட அந்த இடத்தைவிட்டு ஓடி இருந்தாள் அவள்.

மித்ரன் சுற்றும் முற்றும் பார்க்க மனோவும் அதைத்தான் செய்தாள். ஆனால் இன்பா யாரைப் பார்த்து இப்படி ஓடினாள் என்று இவளுக்கு புரியவில்லை….மித்ரனுக்கு தெரிந்ததா என்றும் தெரியவில்லை…

அடுத்து இருந்த மனநிலையில் அவனிடம் எதற்கும் மல்லுக்கு நிற்க தோணாமல் அவன் செலக்ட் செய்தவைகளில் ஒரு நெக்லஸை ஃபைனலைஸ் செய்து…..அதே மாடலில் அவன் இரண்டு பீஸ் வாங்கும் போது அதற்காக ஒரு வகையில் மனதிற்குள் திருப்தியும் பட்டபடி அன்று வீடு வந்து சேர்ந்தாள் மனோ.

அதற்காக அவனிடம் முழுதாக இளகிவிட்டாள் என்று இல்லை…. அவனிடம் எரிந்து விழுவதை நிறுத்திவிட்டு மௌனம் காத்தாள்…. எதுவும் பேசவில்லை….. மறு நாள் காலை இவள் விழிக்கும் போது எதிரிலிருந்த சோஃபாவில் ஒரு உருவம். கண்ணை கசக்கி பார்க்கும் காட்சியை உறுதிப் படுத்த வேண்டியதாயிருந்தது இவளுக்கு…..

Friends MKM  உங்கள் பார்வையில் எப்படி இருக்குது? எப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்? உங்கள் கருத்துக்களை பகிருங்களேன்……நன்றி

Episode # 10

Episode # 12

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.