" ஒண்ணும் ஆகி இருக்காது .. இதென்ன புதுசா ? உங்கப்பா, எங்களுக்கு கல்யாணம் ஆகின முதல் வருஷமே தேதியை மறந்துட்டு தோப்பு கரணம் போட்டவர் தான் " என்று குரல் கொடுத்தார் பாக்கியம் ..
" அப்படியா அப்பா ?"
" அட நீ வேற ஏன்மா ? " என்றவர் தன்னருகில் இருந்த அலமாரியில் இருந்து ஒரு நகைபெட்டியை எடுத்தார் .. மனைவியிடம் அதை கொடுத்தவர் " அதெல்லாம் நான் மறக்கவில்லை .. அப்போ எனக்கு இளம்வயது , என் உலகத்துல மனைவின்னு ஒருத்தி இருந்தாள் ..அதனால் மறந்தேன் ... ஆனா முதுமையான பிறகு உலகமே மனைவிதானே ? அப்படி இருக்கும்போது என்னால் எப்படி மறக்க முடியும் ?" என்றார் உர்ச்சி பெருக்கோடு .. கணவனின் விழியோடு விழி கலந்தவருக்கு பேச வார்த்தைகள் ஏதும் தோன்றவில்லை ..
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
தனது செல்போனில் பழைய பாடல்களின் தொகுப்பை கடகடவென ஆராய்ந்து அந்த பாட்டை போட்டாள் தேன்நிலா .. மகளை குறும்புடன் பார்த்த பாக்கியம்
" நல்லவேளை நிலா நீ இதை பாடல .. பாடி இருந்தால் நான் இந்த பாட்டையே வெறுத்திருப்பேன் " என்றார் .. மகளின் குரல் வளம் அப்படி என்றுணர்ந்த மனோவும் இணைந்து சிரிக்க இருவர் மீதும் தலையணையை வீசிவிட்டு அங்கிருந்து ஓடினாள் நிலா ..
" ம்ம்ம் சரி நான் குளிச்சிட்டு வரேன் "
" ஏதாச்சும் உதவி வேணுமா பாக்கியம் ?" என்றார் மனோ காதலுடன் ..
" ஒ வேணுமே " என்றவர் கண்களில் சிரிப்புடன்
" நிலா வாங்கி தந்த புடவையை அயர்ன் பண்ணி வைங்க " என்று கூறிவிட்டு ஓடினார் ..
" வாய் நீளம் டீ உனக்கு " என்று குரல் கொடுத்த மனோவும் " ஹும்கும் இருக்காதா பின்னே .. என் மனைவி ஆச்சே " என்று சிலாகித்து கொண்டார் ..
அதே நேரம் காலையில் காபி குடித்து கொண்டே வீட்டை நோட்டமிட்டான் ஷக்தி .. " வீடு இவ்வளவு அமைதியா இருக்கே .. எங்க போச்சு இந்த குட்டி குரங்கு ? " என்று மனதிற்குள் கேள்வி எழுப்பியபடி பார்வையை சுழலவிட்டான் .. அவள் இருப்பதற்காக அறிகுறி இல்லாமல் போகவும் வேறு வழியின்றி " மிது .. மிது " என்று குரல் கொடுத்தான் ..
" எங்க டீ இருக்க " என்று குரல் கொடுத்தவன் தங்களது அறைக்கு அருகில் இருந்த குட்டி அறைகதவை திறக்க , அவளும் அதே நேரம் கதவை உள்ளிருந்து திறக்க இருவரும் ஒரு கணம் மோதிக்கொள்ள , வழக்கம் போலவே அவன் அவளை பிடித்து நிறுத்த , வழக்கம் போலவே அவனை சைட் அடிக்க தொடங்கினாள் மித்ரா .. இந்த முறை அவளுக்கு சளைக்காமல் அவனும் பார்வையால் ஊடுருவினான் .. இத்தனை நாட்கள் தள்ளியே இருந்தவள் , தனக்கு மிக அருகில் இருப்பதினாலா? இப்போதுதான் பூத்த புதுமலர் போலவே அவள் முகத்தில் தெரிந்த புத்துணர்ச்சியா ? அல்லது அவள் புடவை அணிந்திருந்தனாலா ? ஏதோ ஒரு காரணம் அவனது கண்கள் இரண்டையும் அவள் வசம் இழுத்து வைத்திருந்தது ..
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
" இந்த பாட்டு இப்போ தேவையா ? " என்று ஷக்தியின் மூளை சலித்து கொள்ள " ப்பாஆ ... செம்ம பாட்டு " என்று சிலிர்த்து நின்றாள் அவனின் மனைவி .. அவளது குறும்பு பார்வையில் தன்னிலை பெற்றவன் " என்ன " என்பது போல விழிகளை உயர்த்த " ஒன்னும் இல்லையே " என்று தோளை உலுக்கி கொண்டாள் சங்கமித்ரா ..
" திமிரை பாரு " என்று முணுமுணுத்து அவன் விடுவிக்க " உன் பொண்டாட்டியாச்சே " என்று பதில் வந்தது அவளிடம் ..
" ஏய் என்னடீ ?" என்று மீண்டும் புருவம் உயர்த்தி பார்வையால் மிரட்டினான் ஷக்தி..இவன் ஒருத்தன் ஆ ஊன்னா என்னடீன்னு லுக்கு விடுவான்…ஆளையும் மூஞ்சியையும் பாரேன்…எப்போ பார்த்தாலும் ஸ்மார்ட்டா இருந்து தொலையுறதேபொழப்பாபோச்சு… எங்கயாச்சும் கோபப்பட முடியுதா? அவன் என்ன டீ ன்னு கேட்கும்போதெல்லாம் அவன் சுருள் கேசத்தில் விரல்களை தொலைத்து விளையாடி “ஒன்னும் இல்லை மாமா” என்று கொஞ்சத்தான் தோன்றும் அவளுக்கு… இதுவரை தனக்குள் கேட்ட, மனசாட்சியின் குரலை ஒதுக்கிவிட்டு,
" ஒண்ணுமில்ல .. தோசை சுட போறேன் .. உனக்கும் வேணுமா ? இல்ல நேத்து உப்புமாவை கொட்டின மாதிரி அதையும் கீழ கொட்டனுமா ?" என்று கேட்டாள் அவள் .. நேற்று அவளது சமையலை சாப்பிடாமலே போயிருந்தான் ஷக்தி .. அதை கூறி அவள் குறைபட்டு கொள்ள அவள் முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது ..