" என்ன சிரிக்கிற ?"
" ஒன்னுமில்ல "
" நீ ஒன்னும் இல்லன்னு சொன்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கும் "
" ஆஹான் .. அப்போ ஐநூத்தி நாற்பத்தி ரெண்டாவது காரணம் என்னனு சொல்லு ?" என்றான் அவனும் வம்படியாய் .. பாவம் ரெண்டு மூன்று நாட்களாய் அவளின் சீண்டல் பேச்சுக்களுக்கும் "ம்ம்ம்ம் , ஆமா , இல்லை " என்று மூன்று வார்த்தைகளில் சமாளித்து கொண்டு வந்தான் ஷக்தி .. " போனா போகுது சின்ன பொண்ணு " என்று மனதிற்குள் விட்டு தந்தவன் , அவளுடன் பேச்சை வளர்த்தான் ..
" கடுப்படிக்காத ஷக்தி "
" நான் யாரையும் அடிக்கலப்பா .. "
" கோபம் வந்தா அதை சாப்பாடு மேல காட்ட கூடாதுன்னு எனக்கு சொல்லி தந்தவனே நீதான் .. எத்தனை தடவை நான் நம்ம வீட்டுல கோபத்தில் சாப்பிடாமல் இருக்கும்போது நீ சமாதானம் பண்ணி சாப்பிட வெச்ச ? ஆனா , இப்போ நீ மட்டும் இதை மீறலாமா ? " என்று குறை பட்டு கொண்டாள் அவள் ..
" ஓ மீறலாமே "
" .."
" ஏன் னா "
" .."
" ஏன்னு கேளேன் "
" பச்ச்ச்.. ஏன் ?"
" எனக்கு பிடிக்காத உப்பும்மாவை செஞ்சு என்னை கொல்ல பார்த்தால் சிக்குவேன் நினைச்சியா " என்றவனின் பதிலை கேட்டு விழிகளை உருட்டினாள் மிது ..
" ஆமா மாமா , உனக்கு உப்புமா பிடிக்காதே .. மறந்தே போச்சு "
" ம்ம்ம் சிக்குவேன் நினைச்சியா ? "
" அதான் மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு கிளம்பிட்டியா ?"
" பின்ன நீ பாட்டுக்கு பழைய அஞ்சு காசு மூஞ்சிய காட்டி அந்த உப்புமாவை என் தலையில கட்டலாம் பார்த்தியா ? "
" ஐயோ அது உப்புமா இல்ல மாமா , ரவா பிரியாணி "
" பூவை புய்ப்பம்னு சொல்லலாம் இந்த ஜோக் நானும் கேட்டுக்குறேன் அத்தை பொண்ணே " என்று அவன் அவள் கன்னம் கிள்ளவும், அத்தை பொண்ணே என்ற வார்த்தையில் அவள் உள்ளம் குளிர்ந்தது ..இத்தனை நாட்கள் பிடித்த வைத்த வைராக்கியம் நொடிபொழுதில் பறந்துவிட,
"நான்தான் தப்பா பேசிட்டேனோ .. சாரி மாமா " என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ..
"..."
" நீயே வேலையா இருக்க அதை புரிஞ்சுக்காம இப்படி பேசிட்டேன் பாரேன் .. உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நேத்தே நினைச்சேன் .. ஆனா இனியா அப்பாவை மீட் பண்ணிட்டு அதை உன்கிட்ட சொல்லலாம் நினைச்சேன் .. பட் உன்கிட்ட சொல்லாமல் எப்படி ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பிப்பேன் சொல்லு ?"
" நீ இனியா வீட்டுக்கு போவன்னு எனக்கு எப்பவோ தெரியும் " என்று சிரித்தான் ஷக்தி ..
" எப்படி ?"
" ஏன் நீங்க மட்டும் தான் எங்களை புரிஞ்சு வெச்சு இருப்பீங்களா ? நாங்க உங்களை புரிஞ்சிக்க கூடாதா ?"
" என் மேல உனக்கு கோபம் இல்லையா ?"
" இல்லன்னு சொல்ல மாட்டேன் .. பட் அது கோபம்ன்னும் சொல்ல மாட்டேன் "
" நீ ஒன்னும் சொல்ல வேணாம் போ "
" ஹா ஹா "
" ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ மிது "
" சொல்லு "
" எப்பவுமே ஸ்வீட்டா பேசுறது எல்லாம் சினிமால நடக்கும் "
" .."
" ரியல் லைப் ல சண்டை , வீண்பேச்சு, சமாதானம் இது எல்லாமே இருக்கும் "
" .."
" நான் ஒன்னும் ஹீரோ இல்ல .. சராசரி மனுஷன் அண்ட் உன் புருஷன் .. நீ தப்பு பண்ணா அதை நான்தான் சொல்லுவேன் "
" .."
" அதை உனக்கு புடிச்ச மாதிரி ஸ்வீட்டா சொல்ல முடியாது ... என் ஸ்டைல்ல தான் சொல்லுவேன் "
" .."