(Reading time: 14 - 27 minutes)

08. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ன்று முதல் நாள் முதலே ப்ரயு மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.. முதல் நாள் ஆதி காதலர் தின வாழ்த்துக்களோடு பரிசும் அனுப்பியது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது..

பொதுவாக அவளுக்கு காதலர் தினத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும், தனக்கே உரிய தன் கணவன் பரிசளிப்பது அவளை மகிழ்சிக்குள் ஆழ்த்தியது. ஒரு வேளை அவர்களுக்கு முதலில் நிச்சயம், பிறகு சில மாதங்கள் கழித்து திருமணம் என்று நடந்து இருந்தால் அப்போது அவளுக்கும் சில பல எதிர் பார்ப்புகள் இருந்திருக்கலாம். நேரடியாக திருமணம் நடைபெற்றதால் அவள் ஆதி இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை..

பரிசு என்பது யார் கொடுத்தாலும் மகிழ்ச்சியே ... அதிலும் எதிர்பாரதபோது கொடுத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சி வரும்.. பிறந்த நாள், திருமண நாள் என்று வரும் போது தங்கள் துணைகள் பரிசு கொடுத்தாலும், மற்றவர்களும் கொடுக்க வாய்ப்பு உள்ளது.. ஆனால் காதலர் தினம் தங்கள் துணைகள் மட்டுமே பரிசளிக்கக முடியும். அன்று ஆதி கொடுத்தது அவளுக்கு சந்தோஷத்தின் அளவு பல மடங்காக இருந்தது.

அவன் பரிசளித்த புடவை கட்டி photo எடுத்து அனுப்ப எண்ணிய போது, அவன் ரசிக்கும் படி full சைஸ் photo அவள் மொபைலில் எடுக்க முடிய வில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது, தன் தோழி ப்ரியாவை அழைத்தாள்.

ஒரு எட்டு மணி போல் ப்ரியாவின் எண்ணிற்கு கூபிட்டாள்.

தூக்க கலக்கத்தில் பிரியா “ஹலோ ..” என,

“ஹே.. சோம்பேறி.. இன்னும் எழுந்துக்கலையா?”

யாருடா அது நம்மள இப்படி பேசுறது என்று நம்பரை பார்த்தவள்

“அட .. நம்ம உஷா மேடம்.. ஏய்.. ஏண்டி .. என்னை இப்படி நடுராத்திரியிலே எழுப்பறே ?”

“அடியேய்.. மணியை பாரு .. எட்டு மணி.. விடிஞ்சு .. ரெண்டு மணி நேரம் ஆச்சு”

“உனக்குதாண்டி அது எல்லாம்... நீங்க குடும்ப இஸ்த்ரி... நாங்க எல்லாம் யூத்... எங்களுக்கு இப்போ அதுவும் சண்டே விடிகாலை என்பது.. 12 மணிதான்... “

“சரி சரி.. உன் யூத் புராணம் போதும்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் ..இப்போ நீ எங்க வீட்டுக்கு வர முடியுமா..?”

“அதானே.. பார்த்தேன்.. எலி.. என்னடா .. ஏரோப்ளேன் ஒட்டுதேன்னு.. சொல்லு .. என்ன விஷயம்.. ?”

“நீ நேர்ல வா.. நான் சொல்றேன்..”

“சரி சரி.. வரேன்..” என்றவள் அடுத்த அரை மணி நேரத்தில் .. பிரயுவின் வீட்டில் இருந்தாள்.

அவள் கதவை தட்டிய போது திறந்த பிரயுவின் மாமியார், ப்ரியாவை யார் என்பது போல் பார்க்க,

“ஆண்டி .. நான் பிரத்யாவின் பிரெண்ட்.. அவள கொஞ்சம் பார்க்கணும்..” என்றாள்.

அவர் வா என்பது போல் தலையசைத்து அவள் ரூமிற்கு அனுப்பி வைத்தார்,, உள்ளே சென்ற பிரியா .. அசந்து நின்றாள்.. தேவதை போல் நின்றிருந்த பிரயுவை பார்த்த பிரியா,

“அட... இது யாரு? நான் அழுமூஞ்சி பிரத்யாவ தேடி வந்தா , இங்கே ஒரு கடல் தேவதை இருக்கு ..?”

“ஏய்.. வாயாடி போதும்.. ஓவரா ஒட்டாதே..”

“மேடம் இன்னிக்கு கலக்கலா இருக்கீங்க.. என்ன விஷயம்.. ? உங்க பர்த்டே கூட இல்லியே? “

“அது.. “ என்று அவள் முகம் சிவக்க,

“ஓஹோ.. இது .. உங்களவர் கொடுத்ததா.. ஆனால் என்ன தீடிர் என்று .. “ என்று யோசித்தவள் , “ஹே.. valetines dayக்கா.. .. அண்ணா கலக்கிட்டார் டி.. “ என்று அவளை சந்தோஷமாக அணைத்தாள்.

“சொல்லு .. இப்போ நான் என்ன செய்யணும்..”

“அது .. அவர் இந்த கெட் up லே உடனே photo எடுத்து அனுப்ப சொல்றார். செல்பி.. ட்ரை பண்ணேன்.. செட் ஆகல.. வேற யார்கிட்ட ஹெல்ப் கேட்க முடியும் ... தங்கச்சிக்கிட்டயோ இல்ல மத்தவங்க கிட்டேயோ .. valentines day gift னு சொல்ல கூச்சமா இருக்கு.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. சாரி டா... உன்னை disturb பண்ணிட்டேனா?”

“சீ.. லூசு.. இதுலே என்னடி இருக்கு ? “ என்றவள் அவளை அழகாக photo எடுத்து அனுப்பினாள்.

அதை உடனே ஆதிக்கு அனுப்பி அவன் அவளை கூப்பிட்டு பேசினான்.. அப்போது பிரியா ஹாலில் பொறுமையாக காத்திருந்தாள். ஆதியின் பேச்சில் முகம் சிவக்க கனவோடு இருந்தவள், அவள் மாமியாரின் குரலில் வெளியே வந்தாள்.

அவள் அலங்காரத்தை பார்த்த அவள் மாமியார் ஆச்சரியமாக பார்த்தார். அவரின் வியப்பை உணர்ந்த ப்ரத்யா கொஞ்சம் தயக்கத்தோடு “ உங்கள் மகன் அனுப்பிய புடவை .. இன்னிக்கு வெளியே போறதால் அதை கட்டினேன். “ என்று கூறவும்,

சிரித்த படி .. “நல்லா இருக்கு ..சீக்கிரம் வா.. சாப்பிட்டு கிளம்பலாம்” என்றார்.

மீண்டும் ப்ரியாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

பிரியா “ஏய்.. என்னடி.. அதிசயமா இருக்கு ... உன் மாமியார் உன்னை பாராட்டிட்டாங்க ?’ என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.