(Reading time: 14 - 27 minutes)

தோடு விடாமல், “ஹ்ம்ம்.. அந்த காலத்திலே நாங்கள் எல்லாம் ... பிறந்த நாளுக்கு புதுசு கேட்டாலே என் புகுந்த வீட்டில் கேலி செய்வார்கள்.. ஏதோ தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தான் புதுசு.. இப்போ எல்லாம் நின்னா பரிசு, தும்மினா பரிசுன்னு கொண்டாடுறாங்க..” என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள்.

அதோடு “தம்பி .. சரவணா .. நீயும் இப்படி ஏதாவது உன் பொண்டாடிக்கு வாங்கி கொடுத்துருக்கியா?”

வித்யாவிற்கோ திருடனுக்கு தேள் கொட்டிய  நிலைமை.. அவள் கணவன் யாருக்கும் தெரியாமல் முதல் நாள் இரவு அவளுக்கு பரிசு கொடுத்து இருந்தான். இப்போ அவளால் அவள் அண்ணிக்கு சப்போர்ட் செய்து பேச முடியவில்லை..

வித்யாவின் கணவர்தான் நிலைமையை சமாளிக்கும் விதமாக “சரி .. சரி ..வந்த வேலையை பார்ப்போமா ?” என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார்.

சற்று பின்தங்கிய வித்யா, அவள் அம்மாவும் பிரத்யாவிடம் “ஏன் அண்ணி.. இதை நீங்க இன்னிக்குதான் கட்டிட்டு வரணுமா... ? இங்கே வரீங்கன்னு தெரியுமில்ல.. ? அவங்க ஏதாவது பேசற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?” என,

வித்யா அம்மாவோ “உன் நினைப்பு தவிர வேற எதுவுமே ஆதிக்கு தோணாதா? அம்மா இருப்பாங்களே? தங்கச்சி பார்ப்பாளே .? அவ புகுந்த வீடு இருக்கே.. எதுவுமே அவனுக்கு நினைப்பு இல்லை.. அவன்தான் அனுப்பி வைச்சான்னா, நீயாவது அதை வேற எப்பவாவது கட்டியிருக்கலாம். இன்னிக்கே இதை கட்டி இந்த அம்மா முன்னாடி என் மானத்த வாங்குறதே ரெண்டு பேரும் வேலையா வச்சிருக்கீங்க” என்று திட்டினார்.

பிரத்யா அவர்கள் இருவரையும் நேராக நோக்கி “இது என் புருஷன் தானே எனக்கு எடுத்து கொடுத்தார்.. எதுக்காக இதை மறைச்சி வச்சி கட்டனும்? அதோட நான் சும்மாவே கூட புதுசு போட்டாலும் அதில் அவங்களுக்கோ, உங்களுக்கோ என்ன பிரச்சினை ?” என்று அவள் கேட்டாள்.

“என்ன பிரச்சினை? இது எதுக்காக ஆதி கொடுத்தான்னு அவங்க கிட்ட நேரா சொல்ல முடியுதா? ஏன் உங்க அம்மா கிட்ட உன்னால சொல்ல முடியுமா?”

“அவங்க முன்னாடி தலைமுறை ... அதானாலே அவங்க கிட்ட தயக்கம் இருந்தது.. உங்ககிட்டையும், எங்க அம்மாகிட்டயும் கூட என்னாலே அவர் எடுத்து கொடுத்தார்னு மட்டும் தான் சொல்ல முடியும்.. ஆனால் என் வயதில் உள்ள யாரும் இதை அதுவும் புருஷன் எடுத்துக் கொடுப்பதை தவறாக எண்ண மாட்டர்கள்.. அதோடு நான் எதற்காக மற்றவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.. ?”

“உங்கள் கொண்டாட்டங்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.. இனிமேல் எங்கள் மாதிரி பெரியவர்கள் எதிரில் கொஞ்சம் அடக்கியே வாசிங்கள்.. “

அதற்கு பதில் அளிக்கும் முன், சரவணன் மீண்டும் கூப்பிடவே எல்லோரும் அங்கே சென்றனர்.

காலையில் இருந்த உற்சாகம் அப்படியே வடிந்து விட்டது  பிரத்யாவிற்கு.. மனதினுள் இவர்கள் எல்லோருக்கும் மருமகள் என்றால் இவர்களை மாதிரியே இருக்க வேண்டுமா? காலம் மாறுவது தெரியவில்லையா? பிரத்யாவிற்கு நன்றாக தெரிந்தது .. சரவணன் வித்யாவிற்கு ring பரிசளிதிருப்பது.. அதை கையில் அவளும் போட்டிருக்கிறாள்.. இதை வித்யாவின் மாமியார் கண்டு கொள்ளவில்லை.. தன்னை பற்றி பேச வந்து விட்டார்கள்.

பிரத்யாவின் மாமியாரவது அவளை விட்டு கொடுக்காமல் பேசியிருக்கலாம்.. அவர்கள் பேசவில்லை என்றாலும் முகத்திலேயே காண்பித்து விட்டார்கள்.. அதை அந்தம்மா பார்த்த பின்பு இன்னும் நிறைய பேசுகிறார்கள்.

தன் மகள் கையில் உள்ள மோதிரத்தை வந்தவுடனே கவனித்த மாமியார், தன் மகளிடம் கண்ணாலே கேட்டு கொண்டதை ப்ரத்யா கண்டு கொண்டாள். இருவரும் ஜாடையில் பேசியது பார்த்து புரிந்து கொண்டாள்.

அதே தன் மகன் மருமகளுக்கு செய்யும் போது மட்டும் இவர்களுக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது? அவர் இயற்கையிலேயே தன்னை பிடிக்காதவராக இருந்தாலும் பரவாயில்லை.. நன்றாக இருப்பவர், தன் மகளுக்கு பிரச்சினை ஏற்பட நேரடியாகவோ மறைமுகமாகவோ ப்ரத்யா காரணம் என்று தெரிந்தால் மாறி விடுகிறார். அவள் பக்கத்துக்கு நியாயத்தையோ, உணர்வுகளையோ அவர் மதிப்பதில்லை.

இந்த விஷயம் பிரத்யாவிற்கு உறுத்தலாக இருந்தது. ப்ரத்யா பட்டும் படாமலும் இருக்க, ஒரு வழியாக வித்யா வளைகாப்பிற்கு தேவையான எல்லாம் வாங்கினர். தன் மகன் அனுப்பிய பணம் எல்லாம் எடுத்து அவளுக்கு செலவு செய்தார்.

வித்யா மாமியார் “சம்பந்தி அம்மா .. கல் வளையலாக பார்த்து விடலாம்” என்று அந்த பிரிவிற்கு போக,

ப்ரத்யா மாமியார் முழித்தார்.. தன் மகன் அனுப்பிய பணம் தங்க வளையல் வாங்கதான் சரியாக இருக்கும். அவர் எண்ணியதை விட புடவை மற்றும் வெள்ளி சாமான்கள் விஷயத்தில் ஏற்றி விட்டு விட்டார் வித்யா மாமியார். அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. வித்யாவும் ஒன்றும் கவனிக்க வில்லை, அவள் தன் கணவனோடு அவர் தேர்ந்தெடுக்கும் எல்லாவற்றிற்கும் சந்தோஷமாக தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் வித்யா மாமியார் காட்டியதை, சரவணனும் ஓகே சொல்ல, வித்யாவும் தலையாட்டினாள்.

இதை கவனித்த ப்ரத்யா , அவர் கையில் இருந்த பில்லை வாங்கியவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.