(Reading time: 13 - 25 minutes)

"ப்ப என்ன சொல்வறே சாரதா நீ?.. அம்மா சொன்னான்னு நான் ஒன்னை நான் ஒதுக்கி வைச்சி வேற கல்யாணம் செஞ்சிண்டிருப்பேனா?.. நாலாவதும் பொண்ணா இருந்தா என்ன போச்சு?.. நம்ம ப்ராப்தம் அவ்வளவுதான் தான், நான் இருந்திருப்பேன்.. அம்மா ஏதோ ஒரு ஆத்தாமையிலே தனக்கு பேரன் வேணும், நெய் பந்தம் பிடிக்கனும்ன்னு எத்தையாவது சொல்லிண்டு புலம்பிண்டு இருந்தா.. அதை நீ பெரிசா எடுத்துண்டு இவ்வளவு பெரிய பாதகத்தை நம்ம குடும்பத்துக்கு செய்ய துணிவியா?.. நமக்கு முதல் மூணு குழந்தேளும் பொண்ணுதான்.. அதுக்கும் தான் அம்மா, உன்னையும் என்னையும் குறை சொல்லிண்டுதான் இருந்தா.. அதுக்காக நாம என்ன அந்த பசங்களை வளர்த்து ஆளாக்கலையா என்ன?.. இல்லை என் அம்மா தான் நம்ம மூணு பசங்களையும் நீ பிரசவத்துக்கு போனப்போ பார்த்துக்காம விட்டாளா??"

"நாலாவதும் பொண்ணு பிறந்திருக்குன்னு நீ எனக்கு முதல்ல தெரிவிக்கவேயில்லை.. 'நீ கேட்டே அன்னிக்கு, ஏன் எங்கம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கறதே போன் பண்ணி பக்கத்து வீட்டுக்கு சொல்லியும் கூட நான் ஹாஸ்பிடல் பக்கமே வரலேயேன்னு'.. அதுக்கு நானும் பதிலும் சொல்லி விட்டேன்,  கரெக்டா அந்த சமயத்துல எங்கம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து காலை ஒடைச்சிடுண்டா.. என் தங்கைகள் வரதுக்கு வெயிட் பண்ணின்டு இருந்தேன், எப்படி நான் அம்மாவையும், நம்ம மூணு பசங்களையும் விட்டு விட்டு ஓடி வர முடியும்.. உன்னை பெத்தவா பார்த்துப்பான்னு தைரியமா இருந்தேன்?.. நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட நினைக்கலே சாரதா?"  என்றவர்,

"ஒன்னு மட்டும் நன்னை புரியறது சாரதா!! நான் உன் மேலே வைச்சிருந்த நம்பிக்கையை நீ என் மேலே வைக்கலேன்னு.. இதுக்கு மேலே என்ன சொல்லறதுன்னு எனக்கு தெரியலை"  என்று விட்டேறியாக சொல்லிவிட்டு தலையை பிடித்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் பேசாமல் சாய்ந்து விட்டார் ராமமூர்த்தி.

அவர் காலடியில் மீண்டும் அமர்ந்த சாரதா, "நான் தப்புதான்னா பண்ணி விட்டேன்.. நீங்க நினைக்கறா மாதிரி உங்க மேலே நம்பிக்கை இல்லாமல் இல்லை.. என்னதான் உங்களுக்கும் பிள்ளை ஆசையிருந்தாலும், பொண்ணு பிறந்ததுன்னு சொல்லியிருந்தா வேண்டாம்ன்னு எங்களை ஒதுக்கியிருக்க மாட்டேள்தான்"..

"அன்னிக்கு எனக்கு என்ன ஆச்சோ தெரியலை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனதை சொல்ல போன் பண்ணப்போ, உங்கம்மா போன் எடுக்காமல், பையன் பிறந்தால் ஸ்வீட்டோட வரச் சொல்லுங்கோ, இல்லைன்னா அப்படியே அங்கேயே இருக்க வேண்டியதுதான் என்று பக்கத்தாத்து மாமி எங்கப்பாகிட்ட தகவல் சொன்னவுடன் நான் பதறிதான் போயிட்டேன்.. அந்த சமயத்துல, என் பக்கத்து பெட் கமலா அறிமுகம் ஆனாள்.. அவா படற கஷ்டத்தையெல்லாம் கண்ணேதிரே பார்த்தேன்.., டாக்டர் கிட்ட நான் எனக்கும் என் குழந்தைக்கும் விஷம் கொடுக்க சொல்லித்தான் கேட்டேன்.. டாக்டர் யாருக்காவது குழந்தை பாக்கியம் இல்லாதவாளுக்கு, இந்த பெண் குழந்தையை ஏன் கொடுக்கக் கூடாதுன்னு சொன்னவுடன், எனக்குள் ஒரு சின்ன சபலம்.. இந்த பெண் குழந்தை எங்கேயாவது சுகப்படட்டும் என்று தான் நினைச்சேன்.. சமயத்துல கமலாவும் அவ குழந்தை தங்காதுன்னு என்னை மடிப்பிச்சை கேட்ட போது ஏதோ ஒரு வெறியில மனசை கல்லாக்கிண்டு தூக்கி கொடுத்துட்டேன்னா.. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ  தடுத்துத்தான் பார்த்தா"

ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர், பைரவியும், வசந்த்தும், மஹதியுமே அவர் காலடியில் அமர்ந்து கொண்டனர்.

"மாமா, என்னை மன்னிச்சிடுங்கோ... இதுக்கெல்லாம் நான் தான் காரணம்.. நான் இங்கே வராமலே இருந்தா யாருக்குமே ஒன்றும் தெரிஞ்சிருக்காது.. பாவம் சாரதா மாமி.. அவாளை நீங்க மன்னியுங்கோ.. நான் உங்க குடும்பத்துல மீண்டும் வந்து குழப்பம் பண்ணரதுக்கு வரலை.. வசந்த் தான் உங்க பையன்.. நான் என்னிக்குமே உங்களுக்கு பைரவி மட்டும் தான்.. எப்படி உங்களுக்கு வசந்த் பையனோ, நானும் எங்க கமலா அம்மாவுக்குத்தான் பொண்ணு.. அது எந்த நாள்லையும் மாறாது.. அதை நான் மாத்தறதையும் விரும்பலை.. நீங்கள் என்னை நம்பலாம்"

"அம்மாடி பைரவி, நீயும் என்னோட பொண்ணுதான்மா.. ஏம்மா நீ இப்படி எல்லாம் பேசறே?.. எங்காத்துக்காரர் நான் செஞ்ச காரியத்தை மன்னிக்கலைன்னாலும் பரவாயில்லை.. நீ என் வயித்துல பொறந்த பெண்தான்" என கதற,

"அப்ப நான் யார்ம்மா உனக்கு.. உன்னை நான் அம்மான்னு இனி கூப்பிட முடியாதா?" என வசந்த் அழ தொடங்க,

"வசந்த், ராஜா.. என்னடா பேசறே.. நீயும் என்னோட பிள்ளைதான் டா.. பைரவியை நான் வயிற்றிலே சுமந்து பெற்றேன் தான்.. ஆனா, அவளை நான் கமலாவுக்கு அன்னிக்கே என் முழு மனசோடத்தான் தானமா கொடுத்து விட்டேன்.. இப்ப வேணா என் மனசு அவளை பார்த்ததுக்கு பிறகு துடிக்கிறது? அது பெத்த மனசுடா கண்ணா.. பைரவியை பார்த்த அந்த ஷணத்திலேயே நான் கண்டு பிடிச்சிட்டேன்.. அவளுக்கும் நான் யார்ன்னு தெரிஞ்சிருக்கும்.. ஆனாலும், ஏன் நாங்க இரண்டு பேரும் வாயை மூடிண்டு இருந்தோம் தெரியுமா?... இதோ இப்படி தேவையில்லாமல் குழப்பம் வந்து எல்லார் மனசும் புண்பட வேண்டாம்ன்னு தான்..

"உங்க அப்பா மனசு எனக்கு நன்னா தெரியும்.. இத்தனை வருஷமா உன் மேலே ஒரே பிள்ளைன்னு ரொம்ப பாசம் வைச்சிட்டார்.. அதை நான் கலைக்க வேண்டாம்ன்னு என் மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு புதைச்சி வைச்சிண்டேன்.. என்னை பெத்தாவாளும், எனக்காக இந்த உண்மையை மறைச்சி, குற்ற உணர்ச்சியோடுதான் போய் சேர்ந்தா..  ஏற்கனவே, அவா அவளோட புள்ளையை பிரிஞ்சி இருந்தா.. இதுல நானும் வேற வாழா வெட்டியா பிறந்தாத்துல போய் உட்கார்ந்து இருந்தா, அன்னிக்கே உயிரை விட்டு இருப்பா.. எல்லாருக்காகவும் பார்த்து தான் நான் இப்படி செஞ்சேன்.. அது இன்னிக்கு என் தலையிலே வந்து விடிஞ்சிருக்கு"  என்று சாரதா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.