(Reading time: 10 - 20 minutes)

ல்ல விஷயம் தான்.. அவள் படிப்பு முடிந்து விட்டதா?”

“இந்த மாதத்தோடு முடிகிறது.. நம் சொந்தக்காரர் ஒருவரின் மூலம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் கேட்ட போது, நல்ல தெரிந்த இடம் என்பதால் நம்மை முன்னிறுத்தி பேசியிருக்கிறார். உடனே பொருத்தம் பார்த்து அவர்கள் பதில் சொல்லி விட்டார்கள்..”

“சந்தோஷம்.. பொருத்தம் இருக்குன்னா பண்ணலாமே.. சம்பந்தி..”

“அதுலே.. என்ன விஷயம்னா அந்த அம்மாவிற்கு இரண்டு பையன்கள்.. இரண்டு பேரும் பவித்ரா , பவதாரிணி போல் ஒரு வருட இடைவெளி.. பவித்ரா ஜாதகத்தில் குடும்ப விவரம் பார்த்தவர்கள், இப்போ பவதாரிணியை அவர்கள் இரண்டாவது பையனுக்கு கேட்கிறார்கள்..”

“ஒஹ்.. ஆனால் இன்னும் சின்னவளுக்கு படிப்பு முடியவில்லை இல்லையா ?”

“ஆமாம் .. அதுதான் யோசனையாக இருக்கிறது.. photo பார்த்து விட்டு பிடித்திருக்கிறது என்று விட்டார்கள்.. இனி நேரில் பெண் பார்க்க வருகிறோம் என்கிறர்கள்.”

“சரி வரட்டும்.. பேசி பாருங்கள்... ஒத்து வந்தால் முடித்து விடுங்க. காலா காலத்திலே செய்தால் உங்கள் பொறுப்பு குறையும்.. “ என்றவர்,

“ப்ரத்யா.. நீ அவங்களோடு பேசி கொண்டிரு.. நான் எதாவது லேசாக tiffen செய்கிறேன்” என்று சென்று விட்டார். அதில் எல்லாம் அவரை எந்த குறையும் சொல்ல முடியாது.. இங்கிதம் அறிந்து நடப்பவர்தான்..

ப்ரத்யா “என்ன அப்பா.. ? இரண்டு பேருக்கும் என்றால் உங்களால் முடியுமா?”

“அதான் யோசனையா இருக்கு.. இந்த வாரம் அவர்கள் நேரில் வரும்போது பேசிக் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.”

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு tiffen சாப்பிட்டு கிளம்பினார்கள்..

கிளம்பும் போது .. “சம்பந்தி அம்மா, நீங்களும் பிரத்யாவும் இந்த ஞாயிறு கிழமை வந்து விடுங்கள்.. அவர்களிடம் நேரில் பேசி, பையனையும் பார்க்கலாம்..” என்றார்.

“நான் எதற்கு.. ? பெண் பார்க்கும் நிகழ்ச்சி தானே.. ப்ரத்யா வரட்டும் .. பிறகு விசேஷங்கள் வரும் போது கலந்து கொள்ளலாம்..” என்று முடித்தார்.

“முடிந்தால் வர பாருங்கள் . .நாங்கள் இன்றே நம் மாப்பிள்ளையிடமும் பேசி விடுகிறோம்,’ என்று கிளம்பினார்கள்.

ன்று இரவு ப்ரயு பேசும் போது

“ அப்பா, அம்மா வந்தார்கள் ஆதிப்பா” என்றாள்

“என் கிட்டயும் பேசினாங்கடா”

“ஹ்ம்ம்.. வர்ற பையன் வீட்டுக்காரங்க கிட்ட பேசி பார்க்கணும்..ரெண்டு கல்யாணம் இப்போ பண்ண முடியாதுன்னு...”

“ஏண்டா.. நல்ல இடமா இருந்தா பேசி முடிக்க சொல்லு பிரயும்மா.. உங்க அப்பா, அம்மா பொறுப்பும் நல்ல விதமா முடியும்.. ஆனால் உன் ரெண்டு தங்கச்சிகளுக்கும் பையன பிடிச்சிருந்தா மட்டும் proceed பண்ணுங்க..”

“ஹ்ம்ம்.”

“ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்திலே முடியாதுன்னா, சின்னவளுக்கு நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழிச்சு பண்ணுங்க. நல்ல இடமா இருந்தா விட வேண்டாம்.”

“நீங்க சொல்றது சரிதான்.. அவங்க கிட்ட பேசி பார்க்கிறோம் ..” என்று முடித்தவள்.. வேறு பேச்சை ஆரம்பிக்க, வழக்கம் போல் அவளிடம் வம்பு செய்துவிட்டு வைத்தான்.. ஆதி.

அந்த வாரம் ஞாயிறு அன்று காலையிலேயே அவளை அனுப்பி விட்டார் அவள் மாமியார்.

தன் வீட்டிற்கு சென்று, பெற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தவள், தன் தங்கைகளின் அலங்காரத்திற்கும் உதவி செய்தாள்.

மாலை மூன்று மணி அளவில் அவர்கள் வர, முதலில் உபசாரங்கள் முடிந்து, பெண் அழைத்து வர சொல்ல , இருவரும் அழைத்து வர பட்டனர்..

வந்திருந்த பையன்கள் இருவருக்கும் பெண்ணை பிடித்து போக, தங்கள் சம்மதத்தை பெற்றோரிடம் கூறினர்.

பிரயுவின் தங்கைகளும் தங்கள் விருப்பத்தை ஜாடையாக பிரயுவிடம் கூற, அப்போது பையனின் அப்பா,

“சார், உங்கள் பெண்கள் இருவரோடும், என் பிள்ளைகள் தனியாக பேசட்டும்.. அதற்குள் நாம் பெரியவர்கள் பேசி விடலாம்..” என்றார்.

அவர் மனைவிக்கு அதில் அதிகம் பிடித்தம் இல்லாதது போல் இருந்தது.. ஆனால் மறுத்து ஒன்றும் சொல்ல வில்லை.

இருவரையும் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு அனுப்பினர். அந்த காலத்தில் கட்டிய வீடு.. அவர்கள் வீட்டை சுற்றி மரங்கள் இருந்ததால் மாடியில் நிழலாக தான் இருக்கும்.

இரு ஜோடிகளும் மாடிக்கு செல்ல, கீழே பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

பவித்ராவின் ஜோடியான அருண் அவளிடம்,

“ஹாய்.. நான் அருண்.. xxxx கம்பனியில் HR executive ஆகா இருக்கிறேன்..” என்று தன்னுடைய விவரங்கள் கூறினேன்.. அவளை பற்றிய விவரங்களும் கேட்டு கொண்டான்.

“பவித்ரா.. நான் ஒருமையில் கூப்பிடலாமா?” என்று கேட்க, அவள் சம்மதமாக தலையசைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.