(Reading time: 10 - 20 minutes)

வி, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

அவள் தலையசைக்கவும், “நீ பதில் சொல்லு”

“பிடிச்சுருக்கு.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “ என்றவுடன், அவள் கையை பற்றி முத்தமிட்டான்.

அவர்களுக்கு எதிர்புறத்தில், tank பின் புறம் பேசிக் கொண்டிருந்த பவதாரிணி யின் ஜோடியான அரவிந்த்

“ஹலோ.. நான் இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கலை.. அம்மா தீடிர்நு தான் சொன்னங்க.. சோ .. என்னை பத்தின விவரவங்கள் சொல்றேன்.. பிடிச்சிருந்தா ..நாம proceed பண்ணலாம்..” என,

அவன் பேச்சில் கவரப்பட்ட தாரிணியும் அவனிடம் சம்மதம் சொன்னாள்.

இங்கே அவர்கள் பேசிக் கொண்டிருந்த அரை மணி நேரத்தில், நால்வரும் தங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொண்டதோடு.. அவர்கள் ஜோடி ஜோடியாக selfie வேறு எடுத்து கொண்டனர். நால்வரின் என்னும் அவரவர் ஜோடிகளின் மொபைலில் இடம் பெற்றது.

கீழே, சிறியவர்கள் சென்ற பின்,

“இப்போதான் மூத்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் தான் ஆகுது.. இவங்க ரெண்டு பேரும் படிச்சுட்டு இருக்காங்க.. பவித்ராவது.. முடிக்க போறா.. சின்னவளுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. ஆனால் எங்க சொந்தக்காரர் உங்கள பத்தியும். உங்க குடும்பம் பத்தியும் ரொம்ப நல்லா சொன்னார்.. அதான் நாங்க பவி ஜாதகம் கொடுத்தோம்.” என்றார்.

அப்போ மாப்பிள்ளைகளின் அம்மா “நானும் சின்னவனுக்கு இப்போ பண்றதா நினைக்கலை.. ஆனால் எனக்கு பெண்கள் கிடையாது.. இந்த ரெண்டு பசங்க தான்.. காலம் முழுக்க இவங்க ரெண்டும் பேரும் தான் எங்களுக்கும், அவங்க ரெண்டு பேருக்கும் ஆதரவு. நான் முதல்ல இப்படியெல்லாம் நினைக்கல.. உங்க குடும்ப விவரத்தை பார்த்த பிறகுதான், ஒரே குடும்பத்திலே பெண் எடுத்தா, அக்கா, தங்கச்சிங்க ஒத்துமையா இருப்பாங்க... குடும்பத்தை பிரிக்க மாட்டங்கன்னுதான் கேட்டோம். வயசும் சரி, மத்த விஷயங்களும் எல்லாம் பொருத்தம் இருக்கவே முடிக்கலாம்னு ஆசை படறோம்” என்றார்.

“சரிதான்... ஆனால் தாரிணி படிப்பு .? ஒன்று செய்யலாம் தாரிணிக்கும் உங்க ரெண்டாவது பையனுக்கும் நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழித்து கல்யாணம் பண்ணலாமா?” என்று கேட்க,

“அவள் டிகிரி தானே பண்றா .. கல்யாணம் பண்ணிட்டு தபால் மூலம் தொடரட்டும்” என்றார்.

“இது விஷயம் நான் என் பொண்ணுங்க கிட்ட கேட்கணும்..”

“நீங்க கேட்டுச் சொல்லுங்க.. ஆனால் இங்கே வர வரைக்கும் நினைக்கல, இப்போ தோணுது .. என் ரெண்டு பசங்களுக்கும் இதே மாதிரி பெண்களையே முடிக்கலாம்ன்னு. அதனால் நடந்தா ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்தில் தான் நடக்கும்.” அவர் சொல்லி கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து இறங்கி வந்த நால்வர் பார்வையும் சந்தோஷத்தோடு சந்தித்துக் கொண்டது.

இதை யோசனையாக பார்த்தாள் ப்ரத்யா.

அவர்கள் “நீங்கள் கலந்து பேசி விட்டு தகவல் சொல்லுங்கள் ..” என்று விட்டு கிளம்பினர்.

அவர்கள் சென்றவுடன் ப்ரத்யா அம்மா, அப்பா யோசனையோடு அமர, அவர்கள் அருகில் சென்ற பவி, தாரிணி இருவரும் “என்ன அப்பா?” என்று கேட்டனர்.

அவர்கள் கூறியதை கூற, பவி, தாரிணி முகங்கள் மாறியது.. ஒன்றும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றனர்.

அவர்கள் பின்னோடு சென்ற ப்ரத்யா, இருவரிடத்திலும் தனி தனியாக வினவ, இருவரும் ஒரே போல் .. மாப்பிள்ளைகளை பிடித்த விஷயத்தோடு, அவர்கள் மொபைல் photo எடுத்ததை பற்றிக் கூறினர். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, போனில் sms வர ஆரம்பித்தது. அவர்கள் நம்பருக்கு picture ஆக இரு ஜோடிகளும் எடுத்துக் கொண்ட photo வர.. என்ன செய்ய என முழித்தனர்..

சற்று யோசித்த ப்ரத்யா .. தன் தந்தையிடம் “அப்பா... கல்யாணம் இருவருக்கும் முடித்து விடலாம் .. “ என்றாள்.

“ஏம்மா? எனக்கு கொஞ்சம் யோசிக்கலாம் என்று தோன்றுகிறது”

“ஆனால் என் தங்கைகளும், அந்த பசங்களும் யோசிக்கும் கட்டத்தை தாண்டி விட்டார்கள்.. இனிமேல் நாம் மறுத்தால் நால்வருக்கும் வருத்தம் தான்... மிஞ்சும்.. நீங்கள் இப்போதே அவர்களிடம் சரி என்று விடுங்கள்” என்றாள்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.