டேய் மச்சி இன்னைக்கு மகி நம்ம கூட டடின்னர் வரா…
மகிகோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை அய்யோ லூஸு அண்ணா இப்படி பண்ணிட்டியே என்று மனதினுள் அர்ச்சனையை வாரி வழங்கி கொண்டு இருந்தாள்..
ஓ கேரேட்..வெல்கம் மகி.. – ராம்..
தங்க்ஸ் ராம்..
மூவருமாக கேன்டீனில் சென்று அமர்ந்தனர்..மகிக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது..என்னதான் நண்பர்களாக பழகினாலும் ஏனோ மனம் கேட்கவில்லை..அவளின் முக பாவத்திலேயே ஏதோ உணர்ந்தவன் பீல் பீரீ மகி..இங்க இதெல்லாம் சகஜம்..நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நல்ல பசங்க தான்..நம்பி சாப்டுங்க..-ராம்
அய்யோ அப்படிலா ஒன்னுமில்லை வேற ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்..என்று மழுப்பினாள்..
விடு மகி அவன் அப்படி தான்..சரி உன்னபத்தி சொல்லு..அப்பா அம்மா கூட பொறந்தவங்க,.- பரணி
நா ஒரே பொண்ணுதான் அண்ணா..அம்மா ஒர்க் பண்றாங்க தூத்துக்குடில இருக்காங்க..
அப்பா?? பரணி ராம் இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்..
ஹி ஸ் நோ மோர்..நா 10வது படிக்கும் போது தவறிட்டாரு..என்றாள் மென் புன்னகையுடன்..
இருவருக்குமே என்ன சொல்வது என்றே தெரியவில்லை..பரணி தான் சமாளித்துக் கொண்டு சாரிடா..அப்புறம் ஏன் அம்மாவ தனியா விட்டுட்டு இங்க வந்த...
என்னனா பண்றது பொண்ணா பொறந்துடேனே..அம்மாக்கு நா பீ.ஜி படிக்கனும்நு தான் ஆசை வேலைக்கு அனுப்ப இஷ்டமேயில்லை பட் அதுக்கு செலவு பண்ணி அடுத்து மேரேஜ் எவ்ளோதான் தனியா செலவு பண்ணுவாங்க அதான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்...ஆனாலும் அம்மா ஆசைப்படி இங்க எம்.பி.எ ஜாய்ன் பண்ணிருக்கேன்..வீக்கெண்ட் க்ளாஸஸ் போய்ட்டு இருக்கு..
ஏனோ தன் முன் இருப்பவளை பிரம்மிப்பாய் பார்க்கத் தோன்றியது இருவருக்கும்..சூப்பர்டா குட்டி பொண்ணு உன்ன குழந்தைநு நெனெச்சேன்..பெரிய பெரிய வேலைலா பண்ற போ..என்று மனதில் இருக்கும் நெகிழ்ச்சியை மறைத்து விளையாட்டாய் கூறினான் பரணி..ராமோ வாயே திறக்கவில்லை..அவன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்..என்ன பெண்ணிவள்..இவ்வளவு சிறிய வயதில் பேச்சில் எத்தனை முதிர்ச்சி..எண்ணங்களில் எத்தனை தெளிவு..ஆச்சரியமாய் உணர்ந்தான்..
இவையெதையுமே உணராத மகியோ என்னபத்தின டீடெய்ல்லா இருக்கட்டும் உங்க ரெண்டு பேரையும் பத்தி நா கேள்விபட்டவர சரியான சாமியார்நு சொன்னாங்க என்றாள் சிரிப்பை அடக்கியபடியே..அப்படியா சொன்னாங்க ஒரு வேளை இதுனால தான் பொண்ணே கிடைக்கலநு நெனைக்குறேன்..மொதல்ல லுக்க மாத்தனும்..என்ன பண்றது இந்த வீணா போனவன் கூட சேர்ந்தே இப்படி ஆயிட்டேன் என அலுத்துக் கொண்டான் பரணி..தனக்கும் இதுக்கும் சமந்தமேயில்லை என்பதுபோல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் ராம்..பாத்தியாடா எப்படி கமுக்கமா இருக்கான் பாரு,.முன்ன பின்ன பொண்ணுங்களோட ப்ரெண்ட்ஸ் ஆனாதான..நீ தான் எங்க கூட்டணில சேர்ந்த மொத பொண்ணு..அதிசயமா நீ வரதுக்கு சார் பெர்மிஷன் குடுத்துடாரு என்று கூறி முறைப்பை பெற்றுக் கொண்டான்..
என்ன ராம் அண்ணா இப்படி சொல்றாரு..
அதெல்லாம் ஒன்னுமில்ல மகி..இதுவர யாரும் ப்ரண்ட் ஆகல..அவ்ளோதான்..இவன் சும்மா ஓவர் பில்டப் குடுக்குறான்..
இவ்வாறாக டின்னரை முடித்துக் கொண்டு கேபிற்கு சென்றனர்..வீட்டிற்குச் சென்றவுடன் பரணி மகிக்கு அழைத்தான்..
ரீச் ஆயிட்டியாடா பர்ஸ்டே இந்த ஷிப்ட்ல வர்ரறியே கேப்லா ப்ராப்ளம் இல்லல..
இல்லணா,.ராம் என்னோட கேப் தான் நா சோ ப்ராப்ளம் இல்ல..
சிறிது நேரம் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தவன் நண்பனின் செயல்களில் குழம்பினான்..பையன் சரியில்லையே ஆரம்பத்திலிருந்தே மகி விஷயத்துல பிடி குடுக்காம இருக்கானே பாத்துக்கலாம்..
அடுத்த நாளும் குரூப் சேட்டில் மகியை டின்னருக்கு பரணி அழைக்க,ராம் மறுப்பு கூறுவான் என்று எதிர்பார்த்தவனுக்கு அவனது அமைதி ஆச்சர்யத்தை அளித்தது..மகிக்கோ அய்யோ இந்த அண்ணா இப்படி பண்றாறே தனியா கேட்டாவாவது எதாவது சொல்லி சமாளிக்கலாம் குருப் வேற..இவளுங்ககிட்ட வேற வசமா மாட்னேன் கலாய்ச்சே கொன்னுடுவாங்களே..என்ன சொல்வது என்று தெரியாமல் திவ்யாவிடம் வந்து நின்றாள்..
திவி..
ம்ம்ம்ம்ம்
திவ்யா
என்னடி ரொம்ப நல்லவளா வந்து நிக்குற என்ன மேட்டர்?
இல்ல இன்னைக்கும் டின்னர் அவங்களோடயே போறேன் அதான்…
யாரோட போற?
பரணி அண்ணா & ராம் கூட தான்..