“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ உன்னிடம் இருக்கிறது..
அதை அறியாமல் விடமாட்டேன்
அதுவரை உன்னை தொடமாட்டேன்..
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..
கூந்தல் முடிகள் ... நெற்றி பரப்பில்
கோலம் போடுதே ...அதுவா (2)
சிரிக்கும் போது ...கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே ...அதுவா (2)
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...
முல்லை நிறத்தில் ...பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே ...அதுவா ...(2)
சங்கு கழுத்தை ...பாசி மணிகள்
தடவுகின்றதே ...அதுவா (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும்
புன்னகை செய்வாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன்...”
இதுவேறயா…. டேய் ராம் ஆனியே புடுங்க வேணாம் படுத்து தூங்கிருடா என்று தன்னையே எச்சரித்து கொண்டு தூங்கியும் போனான்..இவ்வாறாக நாட்கள் நகர அடுத்து வரும் பொங்கலுக்காக மகி ஊருக்குச் செல்ல தயாரானாள்..டின்னரில் அவர்கள் இருவரிடமும் கூறிய போது.,பரணி,மகி லக்கேஜ்லா என்ன பண்ணுவ ஹாஸ்டல் போய்ட்டு போவியா?
இல்ல நா எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துருவேன் கீழே பேக்கேஜ் ரூம்ல போட்டுருவேன்..
ஒ அதொட எப்படிடா பஸ் ஸ்டாப் போவ,சரி நாளைக்கு எப்போ கிளம்பனுமோ சொல்லு நா பக்கத்துல பஸ் ஸ்டாப்ல விட்டுறேன்..
அதெல்லாம் எதுக்கு நா ஐ வில் மேனேஜ்,அதுவும் போக உங்ககிட்ட எங்க வண்டி இருக்கு?
ஏய் பாட்டி ரொம்ப பேசாத ப்ரெண்ட் பைக் இருக்கு...ஒன்னும் பி.ரச்சனையில்லை..
மறுநாள் மதியம் கிளம்பியவள் பரணியை அழைக்க அவனிடத்திற்குச் சென்றாள்,அவனோ தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்..
அண்ணா…
ஹே சாரிடா..திடீர்நு இந்ந மேனேஜர் லூஸூ என்ன ஒரு ட்ரெய்னிங்ல போட்ருச்சுடா இப்போ போகனும்..செமயா சண்டை போட்டு வந்துடேன்..
அய்யோ பரவால்லைநா நா போய்க்குவேன்..
நோ மகி..அது நல்லா இருக்காது..சும்மா இருந்த உன்ன நா தான் கெளப்பிவிட்டேன்..கொஞ்சம் இரு நா ராம்-அ கொண்டுவந்து விட சொல்றேன்..
அண்ணா!!!!!அதெல்லாம் வேணாம் நீங்க பேசாம வேலைய பாருங்க,
அவள் பேசி கொண்டிருக்கும் போதே ராம் அங்கு வந்து சேர்ந்தான்..என்ன வேண்டாம்??என்னாச்சு பரணி??
அவன் நடந்ததைக் கூற இதுல என்ன இருக்கு மகி வாங்க ட்ராப் பண்றேன்..டேய் சாவி குடு என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டான்..வேறு வழியின்றி மகியும் பரணியிடம் விடைபெற்று அவனை பின் தொடர்ந்தாள்..பரணியோ உச்சகட்ட ஆச்சரியத்தில் இருந்தான்..பொண்ணுங்கனாலே தெரிச்சு ஓடுவான்,இப்போ என்னடாநா வண்டில ட்ராப் பண்றேன்நு சொல்றான் பையன் லவ்ல சிக்கிட்டான் போல இருக்கே பாப்போம் என்னதான் நடக்குதுநு…அங்கு மகிக்கோ உச்சகட்ட படபடப்பு..இவர்கூட பைக்லயா..ப்ரெண்ட்ஸ் யாராவது பாத்தாங்க நா செத்தேன் கடவுளே என்ன ஏன் இப்படி சோதிக்குற..இன்னொரு மனமோ அப்போ ப்ரெண்ட்ஸை நெனச்சுதான் பயப்படுற உனக்கு பிடிச்சுருக்கு அப்படிதான என்று கிண்டல் செய்தது..தன் மனவோட்டத்தை எண்ணி அதிர்ந்தாள்..அப்போ எனக்கு இவர்கூட போறதுக்கு பிடிச்சுருக்கா?நா ஏன் வர மாட்டேன்னு சொல்லல..அவர் ஏதோ ஹெல்ப் பண்றாரு நா என்ன கண்டதெல்லாம் நெனச்சுட்டு இருக்கேன் மகி இது சரியில்ல..என்று அதட்டிவிட்டு பார்க்கிங்கில் ராமிற்காக வெயிட் செய்தாள்..ராம் அவளை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடவும் கோயம்பேடு செல்வதற்கான பஸ் வரவும் சரியாக இருந்தது..வண்டியிலிருந்து இறங்கியவள் அவனின் கண்களில் என்ன கண்டாளோ பார்வையாலேயே விடைபெற்றுச் சென்றாள்..பஸ்ஸில் அமர்ந்தவுடன் மொபைலையெடுத்து ராமிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்..
Page 5
ராம்..தங் யு சோ மச் ஃபார் யுர் ஹெல்ப்..:)
நோ ப்ராப்ளம் மகி..அஸ்ஸ ப்ரெண்ட் இஎது கூட பண்ணமாட்டேனா..டேக் கேர்..ஹவ் அ சேவ் ஜர்னி..:)
மகியின் மனதினுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் காரணம் ஏனோ விளங்கவில்லை..அதே உற்சாகத்தோடு தன் பயணத்தை தொடர்ந்தாள் தூத்துக்குடியை நோக்கி..இரவு நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவள்.,ஏதோ சலசலப்பு உணர்ந்து கண்விழித்தாள்..பஸ் ஓரிடத்தில் நின்றிருக்க என்னவென்று அருகில் விசாரித்தவள் பஸ் ப்ரேக் டவுண் என்று அறிந்தாள்..மணி இரவு 12 ஐ காட்டியது..
அதே நேரம் ராம் தன்னறையில் மொபைலை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அதில் மகியின் எண்..குறுஞ்செய்தி அனுப்பலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்..மகிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..சரி பரணி அண்ணாக்கு கால் பண்ணுவோம் என்று அவனை அழைத்தாள் ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை..தூங்கிட்டாரு போல என்ன பண்ணலாம் திவ்யாவையும் இந்த டைம்ல கூப்பிட முடியாது..என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ராமிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது..ஹாய் மகி எங்க இருக்கீங்க இப்போ..சாப்ட்டாச்சா?
அதை பார்த்தவளுக்கு மனதில் இனம் புரியா தைரியம் பிறந்தது..இதுபோன்ற இரவு நேர பயணங்கள் அவளுக்கு புதிது,அதுவும் இப்படி அர்த்த ராத்திரியில் நடு ரோட்டில் பேருந்து நிற்கும் போது உள்ளுக்குள் வெலவெலத்து தான் போனாள்..ஆனால் இப்போதோ ஏதோ ஒரு தைரியம்..சாய்ந்து பதுங்கிக் கொள்வதற்கு ஒரு தோள் கிடைத்த நிம்மதி..குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினாள்..
ராம்..தூங்கலயா நீங்க இன்னும்..தங்க் காட்..யாருக்கு மெசெஜ் பண்றதுநு நெனச்சுட்டு இருந்தேன்..
என்னாச்சு மகி எனி ப்ராப்ளம்..நீங்க தூங்கலயா..- ராம்
இல்ல ராம்..பஸ் ப்ரேக்டவுண் ஆயிடுச்சு..நடு ரோட்டுல நிறுத்தி பாத்துட்டு இருக்காங்க..
ஓ காட்..பி சேவ் மகி..பஸ் கிளம்பற வர எனக்கு மெசெஜ் அனுப்பிட்டே இருங்க..
தங்க்ஸ் ராம்..அப்புறம் சொல்லுங்க..
ஏன் மகி இவ்வோளோ ரிஸ்க் எடுத்து இங்க வரனுமா நீங்க..என்னவோ எனக்கு இதெல்லாம் புதுசா இருக்குக..
அப்படி வந்ததுநால தான உங்களலா மீட் பண்ண முடிஞ்சுது ராம்..அண்ட் ப்ளீஸ் இந்த வாங்க போங்கலா வேணாமே..வா போனே கூப்பிடுங்க..
ம்ம்ம் அது எல்லாரையும் அப்படி கூப்பிட்டு பழகிடுச்சு இனி மாத்திக்குறேன்…
குட்..:)
இப்படியே நேரம் செல்ல 2 மணி அளவில் பேரூந்து புறப்பட்டது..
ஹைய்யாயா ராம் ஒரு வழியா பஸ் எடுத்துட்டாங்க..
க்ரேட் மகி..சரி பத்திரமா போய்ட்டு வா,அகெய்ன் எதாவது ப்ராப்ளம்நா எனி டைம் கால் பண்ணு..ரீச் ஆன உடனே மெசெஜ் பண்ணு,.
கண்டிப்பா பண்றேன் ராம்..குட் நைட்..
ராமிற்க்கோ ஒரே கவலை அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம ஊருக்கு போகனும் கடவுளே என்று மனமாற வேண்டினான்..மறுநாள் எழுந்தவுடன் முதல் வேலையாக மொபைலை பார்த்தான் மகியிடம் இருந்து மெசெஜ் வந்திருந்தது..நிம்மதியாய் உணர்ந்தான் ராம்..
மகியும் ராமும் இப்படியே மெசெஜ்லயே கதைய முடிச்சுருவாங்க போல இருக்கே...ம்ம்ம்….சரியில்லயே… அடுத்த எபிசோட்ல மாத்திருவோம்..
தொடரும்
{kunena_discuss:952}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.