என்னது???????பரணி எப்போடி உனக்கு அண்ணா ஆனாரு..கூடவே சுத்துறநு நெனச்சா எனக்கு தெரியாம இவ்ளோ வேலை நடக்குதா..
ஏய் என்ன அப்புறமா கலாய்கலாம் நா போய்ட்டு வரட்டா எதுவும் தப்பா எடுத்துக்காத..அவரே கூப்டாரு நோ சொல்ல முடில..நேத்து மட்டும் அவர்ட்ட ஹெல்ப் கேட்டுட்டு இன்னைக்கு போலனா நல்லா இருக்காதுல டா அதான்…
ஹே மகி உன்ன பத்தி எனக்கு தெரியாதா..போய்ட்டு வாடா..இதுல தப்பா நெனைக்க ஓன்னுமில்லை..யு கேரி ஆன்..நம்ம கேங்க நா சமாளிச்சுக்குறேன்..
தேங்ஸ்டா என்று விடைபெற்றுச் சென்றாள்..
டின்னரில் ராமை நோட்டமிட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பரணி மகியிடம்,உன்ட நேத்தே கேக்கனும்னு இருந்தேன் மகி,உன்ன பாத்தா தனியா சாப்பிட யோசிக்குற ஆள் மாறிலா தெரியல அப்பறம் எதுக்கு எங்களோட வரேன்னு சொன்ன?ராமின் மனதிலுமே இந்த கேள்வி ஒரு நொடியாயினும் எழாமலில்லை..அவனும் மகியை கேள்வியாய் நோக்கினான்..
மகியோ எதையோ சமாளித்தவாறு ஏன்ணா வரக்கூடாதா என்று கேட்டு வைத்தாள்..
சும்மா சமாளிக்காம விஷயத்தை சொல்லு..”-பரணி
அது ஒன்னுமில்லைநா..பீ.ஜி க்ளாஸ் அப்போ ஒரு பையனுக்கு நோட்ஸ் குடுத்து ஹெல்ப் பண்ணேன் கிளம்புற அப்போ தான் தெரிஞ்சுது அவனும் நம்ம கம்பனினு..இங்க வந்த அப்புறம் பாத்தா என் பேர வச்சே நம்ம கம்பனி சைட்ல என் மொபைல் நம்பர் வர எடுத்துட்டான்..நா பேரேக் போற டைம்ல கரெக்ட்டா வந்து உக்காந்து மொக்கைய போடுறான்..நல்ல பையன் தான் பட் ஏனோ எனக்கு பிடிக்கல அதான் இப்போலா தனியா வர்றதே இல்ல என்றாள்..
அடிப்பாவி வந்த மூணு மாசத்துலயே ஃபேன்ஸ் லெவலுக்கு வந்துட்டியா..-பரணி..
டேய் அண்ணா கிண்டல் பண்ணாதத…
சரி சரி கேர்புல்லா இரு..இப்போலா யாரயுமே நம்பமுடியறது இல்ல என்றபடி ராமை ஒரு பார்வை பார்த்தான்..
இப்படியே நாட்கள் நகர மூவருக்குள்ளும் அழகிய நட்பு பூத்திருந்தது..இன்று கிற்ஸ்துமஸ் செலப்ரேஷன்..மகி கேப்பில் வரவில்லை..என்ன ஆச்சுனு தெரியலையே எதுக்கும் ஆபிஸில் இருக்காங்களாநு பார்ப்போம் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான் ராம்..அலுவலகத்திலும் அவளிடத்தில் இல்லை..மனது பொறுக்காமல் மெசெஜ் அனுப்பினான்..
ஆர் யு இன் லீவ் டுடே?ஐந்து நிமிடம் கழித்து பதில் வந்தது..
நோ ராம்..கேம் இன் மார்னிங் ஷிப்ட்..இப்போ உள்ளதான் வந்துட்டு இருக்ககேன்..
மெசெஜ் படித்துவிட்டு நிமிர்ந்தவன் கண்ணிமைக்கவும் மறந்ததிருந்தான்..வெள்ளை நிற அனார்கலியில் அஅதற்கேற்றாற் போன்ற ஆபரணங்களும்,நெற்றியில் வெள்ளை நிற கல் பொட்டும்,தளரவிட்டு விரித்து விடப்பட்டிருந்த கூந்தலுமாய் தன்னிருக்கையில் அமர போனவள் ராம் அவளை பார்ப்பதை உணர்ந்து ஹாய் என்று கையசைத்தாள்..அப்போதுதான் தன்னினைவிற்கு வந்தவன் பதிலுக்கு கை அசைத்து வைத்தான்..சேட் மெனுவை ஓபன் செய்தவன்,
ஹாய் என்ன ஸ்பெஷல் இன்னைக்கு??பர்த்டே?
ஹே இல்ல ராம் இன்னைக்கு செலப்ரேஷன் இருக்குல நா தான் ஏஞ்சல் கரெக்டர் பண்றேன் அதுக்குதான் இப்படி கெட்டப்..:)
ஓ தட்ஸ் க்ரேட்..ஆல் தி பெஸ்ட்..அன்று முழுதும் ராமின் மனம் ஒரு நிலையில் இல்லை..ஏனோ ஒரு ஒரு நாளும் தன் மனம் அவள்புறம் சாய்தைப் போல் உணர்ந்தான்..இரவு கேப் முழுவதும் ஆட்கள் இருந்ததால் இருக்கைகள் சரியாக இருந்தது..ரராம் வேலையை முடித்துகொண்டு வர தாமதமானதால் கடைசியாக வந்தான்,வந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி இருந்தது ஒரு இடம் அதுவும் மமகியின் அருகில்..இதுவேறயா என்றிருந்தது ராமிற்கு..கேப் டிரைவரின் பேச்சில் கனவிலிருந்து மீண்டவனாய் அவள் அருகில் அமர்ந்தான்..கார் புயலென பறந்தது..இரவு 11 மணி,ஆளில்லா ஓ.எம்.ஆர் சாலை,மார்கழி நேர குளிர்காற்று அருகில் மனதிற்கு பிடித்த பெண் தேவதையாய்..ஏனோ அவளின் அருகாமை அவனுக்கு பிடித்திருந்தது..அவன் ஒன்றும் பெண்கள் அருகிலேயே அமராதவன் என்று கூறி விட முடியாது..இந்தகால ஐடி முறையானது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரிடத்திலும் ஒரு நட்பை விதைக்ககூடியது..ஆனால் மற்ற பெண்களிடம் உணராத ஏதோ ஒன்றை மகியினிடத்தில் உணர்ந்தான்..இவனது மனநிலை அறியாத மகியோ ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள்..ஆனால் பாவம் நம்ம ஹீரோக்கு தான் எதுவுமே கேக்கல..அவள் விடுதியில் இறங்கியதும் தான் ராமின் சுவாசம் சீரானது..தனது வீட்டிற்கு வந்து தன் அறையில் படுத்தவனுக்கு ஏனோ மகியின் முகமே அறையெங்கும் தெரிந்தது..
அழகான வட்ட முகம்,பால் போன்ற நிறம்,கதை பேசும் கண்கள்,இடுப்பளவு ஆடும் கூந்தல்,சராசரி உயரத்தை விடவும் சற்று கம்மியான உயரம்..மொத்தத்தில் யார் தூக்கத்தையும் எளிதில் பறித்துவிடக்கூடிய அழகி…என்னாச்சு எனக்கு இதுவரை நா இப்படி இருந்தது இல்லையே..தினமுமே ஏதோ ஒன்று அவள்பால் என்னை ஈர்க்கிறதே..எதுவாக இருந்தாலும் சரி இதை இப்படியே விடுவது சரியில்லை..கூடிய சீக்கீரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என தனக்குத் தானே கூறிக் கொண்டு மொபைலில் எஃப்ம்மை உயிர்பித்தான்..