(Reading time: 12 - 24 minutes)

"ப்பாக நினைக்க வேண்டாம் மாமா.. ஏதேச்சயாக உங்கள் பேச்சை நான் கேட்க நேர்ந்து விட்டது.. அப்போழுதே திரும்பி விடலாமா என்றே நினைத்தேன்.. பேச்சு பைரவியை பற்றியது என்றதால் தயங்கி நிற்க வேண்டியதாக போய்விட்டது.. பைரவி பற்றி பேசினால் மட்டும் நான் கேட்டது சரியா என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்று மாத்திரம் நிச்சயம் சொல்ல முடியும்.. பைரவி இல்லாமல் இனி நான் இல்லை.. பைரவியை என் சொந்தமாகத்தான் நினைக்கிறேன்.. ஒரே வார்த்தையில் உங்கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்றால், அவள் தான் இனி என் வாழ்க்கை"  என்ற ஆனந்தை,

"ஆனந்த்.. நீ என்ன சொல்ல வருகிறாய் .. அப்படியென்றால்..  நீ ஒர் வேளை பைரவியை"...   'விரும்புகிறாயா?'.. தன் நண்பன் என்றாலுமே, எப்படி கேட்பது, இது தனது தோழியுடைய வாழ்க்கையாயிற்றே.. என தயங்கியவாறு அஜய் கேட்க,

"ஆஜய்.. நீ ஏன்டா இப்படி தயங்கி தயங்கி பேசுறே?.. உன்னோட நண்பியை நான் விரும்புகிறேன்.. அவளை திருமணம் புரிந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.. நான் ஏற்கனவே இதை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.. முடிவு அவள் கையில் தான்.. இப்பொழுது அவளது விருப்பமில்லாமல் உங்கள் எல்லோரிடமும் சொல்ல வேண்டியதாகப் போயிற்று?"

சாரதா தவிர இந்த விஷயம் மற்றவர் அனைவருக்கும் இது புதியதாக இருந்தது..

அதற்குள் காப்பியை எடுத்துக் கொண்டு மஹதியுடன் வெளியே வந்தாள் பைரவி.. அனைவருக்கும் காப்பியை கொடுத்து உபசரித்தாள் மஹதி

"என்னம்மா.. பைரவி, ஆனந்த் தம்பி என்னவோ சொல்லராறே?.. இதை பற்றி உன்னை கேட்கறதுக்கு எனக்கு உரிமை இருக்கான்னு தெரியலை.. ஆனாலும், இத்தனை நாளா எங்காத்துல குடியிருந்தே.. எங்காத்து மனுஷியா எவ்வளவோ எங்களுக்கு உரிமையா செஞ்சே?.. நாங்களும் உன்னை பற்றி தெரியரதுக்கு முன்னாலேயே உன்னோட பாசத்தை புரிஞ்சிண்டு அதையெல்லாத்தையும் ஏற்றுண்டோம்.. இப்போ அந்த உரிமையில நானும் கேட்கிறேன்.. உனக்கு சம்மந்தம்ன்னா, நாங்க வேணா மேலே உங்க அப்பா, அம்மாகிட்ட பேசட்டா.. உனக்கு ஆனந்தை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா?.. நீ என் பையன் வசந்தையும், அவர் தங்கை கவிதாவையும் இதுல பார்க்க வேண்டாம்.. உங்க இரண்டு பேர் மனசும் ஒத்து போச்சுன்னா மேலே பேசுவோம்"  என்ற ராமமூர்த்திக்கு,

"வசந்த்ப்பா.. உங்களுக்கு இதை பத்தி பேச எல்லா உரிமையும் இருக்கு.. ஆனாலும், இப்போ என்னை கேட்டா என்னோட பதில் எனக்கே தெரியலை.. என்னடா, இந்த பொண்ணு இப்படி பேசறாளேன்னு நீங்க பார்க்கலாம்.. ஏன்னா என்னோட மனசு இப்ப இதை பற்றியெல்லாம் இன்னும் யோசிக்கவே இல்லை.. அதனாலே நான் ஆனந்தை பிடிக்கலைன்னு சொல்ல வரவில்லை.. இதை பற்றி நான் அவர்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்ன்னு.. அதை அவரும் புரிந்து கொண்டிருப்பார்.. உங்ககிட்ட இதை பற்றி சொன்னது கூட, ஒரு தகவலாத்தான் சொல்லியிருப்பார்",... என்றவள்,

"இந்த நிமிஷத்துல ஆனந்துக்கும் என்னை பற்றி தெரிஞ்சிருக்கும்.. என்னோட பிறப்பு, நான் வளர்ந்தது எல்லாமே தெரியும்.. இனி அவரே யோசிக்கட்டும்.. என்னிக்கு இருந்தாலுமே எப்படி வசந்த் அண்ணா உங்கள் பிள்ளையோ, அதே போலத்தான் இந்த பைரவியும் விஸ்வனாதன் கமலாவோட பொண்ணுதான்.. நாளைக்கு இதை மறைச்சதா இருக்க வேண்டாம்.. நான் அன்னிக்கே ஆனந்த் கிட்ட சில விஷயத்தை பற்றி சம்மந்தப் பட்டவா, பெரிமிஷன் இல்லாமல் சொல்ல முடியாதுன்னு சொல்லியிருந்தேன்.. இப்போ, அவருக்கே எல்லாம் தெரிஞ்சிடுத்து"..

"அதோட நான் வசந்தை பற்றியோ, கவிதாவை பற்றியோ யோசிக்கலை.. ஆனால், ஆனந்தோட பேரண்ட்ஸ், நாளைக்கே என்னை பற்றியும், வசந்தை பற்றியும் தெரிஞ்சிண்டு என்னை தப்பா நினைச்சா என்ன பண்ணறது?"..

"என்னதான் இருந்தாலும், நீங்க என்னோட பெற்ற அப்பா.. உங்க குடும்பத்து மேலே இருக்கற கோபத்துல, என்னை ஏற்று கொள்ள மறுத்தா.. ஆனந்த், அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை.. எல்லாரையும் எதிர்த்துண்டு கல்யாணம் பண்ண எனக்கு இஷ்டம் இல்லை.. எனக்கு எல்லார் சம்மந்தமும் வேணும்.. முதல்ல எங்கம்மா, அப்பா சம்மதம் இல்லாமல் நான் எதையும் கமிட் செய்துக்க விரும்பலை.."

"சோ அதனாலே, இந்த விஷயத்தை பற்றி நாம் ஆறப் போடலாம்..  என்னதான் நான் அமெரிக்காவிலேயே வளர்ந்து இருந்தாலும், என்னோட வேர் இந்தியாவில தான் இருக்கு.. என் அம்மா அப்படித்தான் என்னை வளர்த்திருக்கா.. அவா விருப்பம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்"..

"இன்னொன்று ஆனந்த் எந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாலே, ஒன்னு மாத்திரம் தெரிஞ்சிக்கனும்.. நான் எங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆக மாட்டேன்.. அவாளை என்னாலே தனியா விட முடியாது.. இனி ஆனந்த் இஷ்டம்" என்று முடித்து விட்டாள்.

"தாங்க்ஸ் பைரவி.. இப்பவும் நீ என்னை வேண்டாம்ன்னு மறுக்கலை.. அதுவே போதும் எனக்கு.. உன் எண்ணங்களை நான் மதிக்கறேன்.. நீ கேட்ட எல்லாத்துக்கும் ஒரு தீர்வை கண்டு பிடிச்சிண்டு உனக்காக நான் வருவேன்.. அப்போ நீ என் கையால கட்ட போற மாங்கல்யத்துக்காக காத்திண்டு இருக்கனும்"..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.