(Reading time: 12 - 24 minutes)

"முதல்ல உன் அம்மா குணமாகட்டும்.. அது தான் இப்போ முக்கியம்.. அதுக்கு நீ என்ன பண்ணனுமோ செய்.. என்ன உதவி வேண்டுமானுலும் நான் உனக்காக செய்ய காத்துண்டு இருக்கேன்.. அதை நீ மனசுல வைச்சுக்கோ.. உனக்காக ஒரு ஜீவன் இங்கே காத்துண்டு நீ தெரிஞ்சுக்கனும்"..

"இப்போ நான் போய் விட்டு வரேன்.. இதுக்கும் மேலே நான் இங்கேயே இருந்தால், நீ என்ன பேச நினைக்கறயோ, அதுக்கு நான் தடங்கலா தெரிவேன்.. நீ ஊருக்கு போறதுக்கு முன்னாலே நான் மீண்டும் சந்திக்க்லாம்"  என்ற ஆனந்த்,.. எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

"ஜெண்டில்மேன்" என்று வாயார பாராட்டினான் அஜய்..

'ஆமாம்' என்று அதற்கு ஒப்புதலாக தலையாட்டிய பைரவி, ஒரு பெருமூச்சை விட்டாள்.

"ஆனந்த் வந்ததினால் நம்ம பேச்சு திசை மாறிப் போச்சு.. இப்போ சொல்லுங்கோ, வசந்த்ப்பா.. நீங்க என் அண்ணாவை என்னோட அனுப்பிவிங்களா??.. ஏற்கனவே என்னோட ராமன் மாமாவும் அவர் பொண்ணும் அங்கே போயாச்சு..யாரோட டிஷ்யுவும் மஜ்ஜையும் மேட்ச் ஆறதுங்கறதை டாக்டர்ஸ் டிசைட் செய்வா..வசந்த் நீ உன்னை பெற்ற அம்மாவை காப்பாற்ற வருவியா??.. உன்னோட தங்கைக்கு அம்மாவை உயிரோடு மீட்டு திரும்பி தருவியா??".. சொல்லுங்கோ?" என பைரவி மீண்டும் கேட்க,...

"அம்மாடி பைரவி... என்னை பற்றி என்னம்மா நீ நினைச்சிண்டு இருக்கே.. அவ்வளவு கல் நெஞ்சக்காரானா நான்.. அங்கே ஒரு உயிர் இத்தனை நாளா துடிச்சிண்டு இருக்கு.. அவாளை காப்பாற்ற என் பிள்ளையாலே முடியும்ன்னா அதுக்கு நான் தடங்கலா இருக்க முடியுமா சொல்லு.. ஆனா அவன் என் மகனாதான் என்னாலே அனுப்ப முடியும்.. எந்த காரணத்தை கொண்டும் என்னால என் மகனை இனி யாருக்கும் கொடுக்க முடியாது"  என்றவர்,

"எனக்கு ஒரே ஒரு தயக்கம் தான்.. நீ இவ்வளவு சொல்லறே.. நாளைக்கே உன்னோட வளர்த்த அம்மா, தன் பெற்ற பிள்ளை பிழைச்சுடுத்துன்னு தெரிஞ்சிண்டால், என்ன பண்ணுவா.. இப்போ உடம்பு சரியில்லாத இருக்கறவா??..உண்மையை எப்படி ஜீரணிக்க முடியும்??.. நீ வசந்தை அழைச்சிண்டு போய் என்னன்னு அறிமுகப் படுத்த போறே??.. இதுக்கெல்லாம் உங்கிட்ட பதில் இருக்கா?? சொல்லும்மா பைரவி??"

பைரவி பதில் சொல்வதற்குள், வசந்த், "அப்பா.. நடுவிலே பேசறதுக்கு என்னை மன்னிக்கனும்.. நான் பைரவியோட அமெரிக்காவுக்கு போறேன்..  ஆனால் ஒரு கண்டிஷனில் தான் போறேன்.. என்னோட பெற்ற அம்மா உயிருக்கு துடிச்சிண்டு இருக்கறப்போ, சக மனுஷாள் யாருமே உதவி பண்ணுவா.. அப்படியிருக்கும் பொழுது நான் இந்த சமயத்துல அவாளுக்கு உதவலேன்னா அப்புறம் அவா என்னை பெற்றதுற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்"..

"நான் பைரவியோட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கிளம்பறேன்.. அங்கே பைரவி அம்மாவுக்கு நான் என்ன பண்ணனுமோ எல்லாம் பண்ணிட்டு உங்க பையனா திரும்பவும் இங்கேயே வந்து விடுவேன்.. கடைசி வரைக்கும், நான் உங்க பையனா இருக்கத்தான் நான் ஆசைப்படறேன்.. என் கூட பிறக்காத இந்த தங்கைக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கேன்"..

“ஏம்மா நான் ஒரு சந்தேகம் கேட்டேனே..உன் கமலாம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?..தன் பிள்ளை உயிரோட இருக்கான்னு?. அப்புறம் பிரச்சனையாயிடப் போறது?”, என்று நிஜ அக்கறையுடன் கேட்ட ராமமூர்த்தியை பார்த்த பைரவி,

“இல்லப்பா அவாளுக்கு தெரியாதுன்னு அப்பா சொல்லி இருக்கார்..வசந்த் பிழைச்சது தெரிஞ்சப்புறம் அதை எதுக்கு சொல்லி ரெண்டு குடும்பத்துலேயும் குழப்பம் பண்ணனும்னு சொல்லாம மறைச்சிட்டார்.. மேலும் அப்போ என்னொட அம்மா ஒரு வித பிரமையில் ஆட்பட்டு தன் குழந்தை சாகலை.. தனக்கு பொண்ணு தான் பிறந்துதுங்கிற எண்ணத்துலே இருந்துருப்பான்னு எனக்கு தோனித்து..  சில சமயம் நம்மை அதிகம் பாதிக்கும் விஷயத்தை நம் ஆழ் மனம் நம்ப மறுப்பது மெடிகல் ஃபீல்டில் இருப்பதால் என்னால் யூகிக்க முடிஞ்சுது..அவாளாலே தன் மகன் வசந்த் போயிட்டாங்கிறதை மனசளவுளே ஏத்துக்க முடியாததாலே தான் சப்ஸ்டிடியூட்டா என்னை எடுத்துண்டாளோன்னு தோனித்து.. இப்போ நார்மலா தான் இருக்கா..மெல்ல யோசிக்கலாம் வசந்த்தை எப்படி அறிமுகப் படுத்தறதுன்னு”, என்று தீர்க்கமாய் முடிவெடுத்த பைரவியை வியப்பாய் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தாள் சாரதா.

"பைரவி என்னை என்ன சொல்லி அறிமுகப்படுத்தறதுன்னு தயங்கவே வேண்டாம்.. பொய் ரொம்ப நாள் வாழாது.. நான் உண்மையை மெல்ல சமயம் பார்த்து சொல்லி அவங்க சம்மதத்தோடவே இந்த டிரிட்மெண்ட்டுக்கு ஒப்புக்க வைக்கறேன்.. நிச்சயம் கமலா அம்மாவும் புரிஞ்சிப்பா.. தன் மகனை உங்களுக்கு அன்னிக்கே முழு மனசோடத்தான் கொடுத்துருக்கா.. அதுனாலே எந்த பிராப்ளமும் வராது.. என்னை நம்புங்கோ.. உங்க முழு சம்மத்தோட என்னை ஆசிர்வத்தித்து அனுப்புங்கோ.. உங்க மகன் உங்ககிட்டே சீக்கிரமே திரும்பி வந்து, கலெக்ட்டராகி ஆகி உங்களை பார்த்துப்பான்.. சரியாப்பா" என தன் பெற்றவர்களின் கால்களில் விழ,

தன் மகனை, அந்த யசோதாவின் கிருஷ்ணனை ஆரத் தழுவி ஆசிர்வதித்தனர் அந்த பாசமிகு தம்பதியர்.. அவர்களுக்கு தங்கள் மகன் மீது நம்பிக்கையிருந்தது..

கண்களில் கண்ணீர் வழிய பார்த்திருந்தாள் பைரவி.

"ஹேய் சிஸ்.. இன்னும் என்ன அழுகை..அதான் உன் அண்ணன் வந்துட்டேனே?.. சீக்கிரம் டிக்கட்டுக்கு ரெடி பண்ணுமா.. என் கிட்ட பைசா கிடையாது!!" என்று சிரித்தபடி பைரவியின் கைகளை பிடிக்க,

"அண்ணா" என்று அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் பைரவி.

அவர்களை பார்த்தவர்கள், மகிழ்ச்சியாக சிரிக்க, அங்கே ஒரு பாசப் போராட்டமே நடக்க ஆரம்பித்தது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Episode 27

Episode 29

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.