(Reading time: 12 - 23 minutes)

வனை நினைத்து கொண்டே வந்தவள் , கண்களில் ஜீவன் இல்லாமல் தாடியுடன் நின்றவனை பார்த்து காதலுடன் விம்மினாள்... என் பிரிவு உங்களை இவ்வளவு மாற்றியதா கதிர் ? அவன் அன்பில் ஏனோ அவளுக்கு எப்போதும் சந்தேகம் இல்லை . அவனது சோகமான தோற்றத்திற்கு தான் மட்டுமே காரணம் என்று பெரிதும் நம்பினாள்  தர்ஷினி ..

" இனி நமக்குள்ள தடையே இல்லை கதிர் .. குணா இனி குறுக்கே வர மாட்டான் .. என்னை உங்களிடம் இருந்து யாருமே பிரிக்க முடியாது .. " என்று மனதிற்குள் கூறியவள், விசும்பலுடன் ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள் .. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கதிர் .. அவளை விடுவித்து வினவுவதற்கு கொஞ்சமும் வழிவிடாமல் இருக்கமாய் அவனை அணைத்திருந்தாள்  அவள் .. சில நொடிகள் மௌனமாய் இருந்தவள்

" தேங்க்ஸ் கதிர் . நான் ஜெயிச்சுட்டேன் ..எனக்கு என்னுடைய சுதந்திரம் கிடைச்சிருச்சு அதற்கு காரணம் நீங்கதான் .. நான் உங்களை " என்று அவள் தனது காதலை கூற வந்த நேரம் எப்போதும் போல கதவை தட்டாமல் சட்டென அறைக்குள் நுழைந்தான் ரிஷி ..

கதவு திறந்த சத்தத்தில் சட்டென விலகி வாசலை பார்த்தனர் இருவரும் .. ரிஷிதான் என்றவுடன் காவியாவிடம் இருந்து நிம்மதி பெருமூச்சு எழ கதிரின் முகத்தில் கடுமை பரவியது .. ரிஷி ஓரளவிற்கு காவியாவின் காதலை அறிந்து வைத்திருந்ததால் அவர்களின் நிலையை கண்டு சந்தோஷமாய் சிரித்தான் ..

" அஹெம் .... என்னடா நீயும் மாட்டிக்கிட்டியா ? சூப்பர்  காவியா .. வாழ்த்துக்கள் " என்றான் அவன் நிஜமான சந்தோஷத்துடன் .. அவனின் கணிப்பை மறுத்து பேசாமல் மலர்ந்து காவியா சிரிக்க கதிரேசனின் கோபம் இன்னமும் அதிகம் ஆனது ..

" மச்சான் இன்னைக்கு ட்ரீட் "

" ரிஷி!!! "

".."

"முட்டாள் மாதிரி உளறாதே .. நீ பார்த்தது நிஜம் இல்லை.. எப்பவும் நிஜம் ஆகவும் முடியாது ... " என்றவன் காவியாவை ஒரு முறை பார்த்து விட்டு " தேவை இல்லாத ஆசையை வளர்த்துகாதே ! மத்தவங்க மனசுலயும் விதைக்காதே .. இந்த விஷயம் வெளில போனிச்சு அப்பறம் நீ என்னை நண்பனாய் பார்க்க மாட்ட " என்று உறுமினான் ..

" எது தேவை இல்லாதது கதிர் ?" நேரடியாய் அவனை கேட்டாள்  காவியா ..

" காவியா "

" ரிஷி அண்ணா நீங்க சும்மா இருங்க எனக்கு இப்போவே உங்க பிரண்ட் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சாகனும் "

" ரிஷி , உன் தங்கச்சியை கூட்டிட்டு வெளில போ "

" அவர் கிட்ட உங்களுக்கென்ன பேச்சு கதிர் .. நான் உங்க முன்னாடி தானே இருக்கேன் ? எதுவா இருந்தாலும் என்னை பார்த்து பேசுங்க "

" தர்ஷினி இப்போ ஒன்னும் பேச வேணாம் "

" என்ன பேச வேணாம் ??  என் மனசுல என்ன இருக்குனு நான் சொல்லியே தீருவேன் "

" இது பாரு உன் கதைய கேட்க எனக்கு நேரம் இல்லை .. உனக்கு கொஞ்சமாச்சும் சுய கௌரவம் இருந்தால் , விலகி   இரு " என்றான் ...

" டேய் "என்று ரிஷி அதட்ட அவனை மௌனமாய் இருக்கும்படி கை காட்டினாள்  காவியதர்ஷினி .. கோபத்தில் என்ன வார்த்தை சொல்லிவிட்டான் அவன் ? ச்ச !! உண்மையாய் நேசித்ததும் ஒரு குற்றமாகிவிடுமா ? எவ்வளவு ஆசையாய் வந்தேன் கதிர் ? இப்படி என் மனசையே உடைச்சிட்டிங்களே ! தன்னிரக்கத்தில் அழுது விடும் நிலையில்  இருந்தாள்  காவியா ..

" உங்க ப்ரண்ட்  கிட்ட சொல்லிடுங்க ரிஷி அண்ணா ... காவியா செத்துட்டாள்ன்னு .. இனி என் முகத்துல முழிக்க வேணாம் சொல்லிடுங்க " என்றுவிட்டு விடுவிடுவென நடந்தாள் .. கதிரேசன் அவள் போன திசையை அதிர்ச்சியாய்  பார்க்க

" முட்டாளா டா நீ ? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கோபத்துல வார்த்தைய விடாதேன்னு ..காவியாவுக்கு என்னடா குறை ? யானை தன் தலையில மண்ணை வாரி போட்டதா சொல்லுவாங்களே , அது நீதான் கதிர் ! உன் சந்தோஷத்தை நீயே கெடுத்துகிட்ட .. ச்ச " என்றுவிட்டு ரிஷியும் அங்கிருந்து சென்றுவிட்டான் ..

ஷக்தியிடம்  சமாதானம் ஆகிவிட்ட களிப்பில் இருந்தாள்  சங்கமித்ரா .. முகத்தில் சந்தோசம் தவழ வளம் வந்தவளை ரகசியமாய்  ரசித்து கொண்டான் ஷக்தி .. மௌனமாய் அவளை  பார்வையாழ் ஆராய்ந்தவன் ,

" ஆமா எதுக்கு நீ புடவை எல்லாம் கட்டி இருக்க " என்றான் .

" வெளில போகணும்ல ?"

" அதுக்கு ? "

" லூசு மாமா , நான் இனியா வீட்டுக்கு போறேன்ல .. அவங்க அப்பாவை மீட் பண்ணனும் , ஜூனியரா ஜாய்ன் பண்ணனும் .. சுடிதார் போட்டு பார்த்தேன் ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுறேன் .. அதான் புடவை " என்று அவள் விளக்கம் கூறவும் , புரை ஏறும் அளவிற்கு சிரித்தான் ஷக்தி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.