(Reading time: 12 - 23 minutes)

" ஹோ , சோ இப்போ நீ பார்க்கறதுக்கு  பெரிய பொண்ணு மாதிரி தெரியுற??" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேலியான குரலில் கேட்டான் .. அவனுக்கு பரிமாறுவதை நிறுத்திவிட்டு தன்னை மேலும் கீழுமாய் பார்த்து கொண்டாள்  சங்கமித்ரா ..

" ஆமா மாமா , நான் பெரிய பொண்ணு மாதிரி தானே இருக்கேன் " என்று அவள் கேட்கவும் தலையில் அடித்து கொண்டான் ஷக்தி ..

" என்னாச்சு மாமா ?"

" ம்ம்ம் கொசு .. அதை தட்டி விட்டேன் .. "  அவன் நக்கலான பதிலுக்கு ஈடு கொடுப்பது போல , அவன் தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு  அவன்

" ஏய் " என்று மிரட்டவும்

" ஐயோ அதே கொசுதான் மாமா , பறந்து வந்து உன் தல மேல உட்காருந்துச்சு " என்றாள் ..

" உப்ப்ப்ப்ப் ... உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது லாயரம்மா " என்றவன்  அவளையும் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தான் .. அவனுடன் கரையும் ஒவ்வொரு நொடிகளையும் அணு அணுவாய் ரசித்தாள்  சங்கமித்ரா ..

உன்னோடு நான்..!

இரு விழிகளுக்கு இடையே தோன்றிடும் இடைவெளி போல

மிகச்சிறிய இடைவெளியில்

உன்னோடு நான் !

பூவை தொட்டு செல்லும் காற்றை போல

உன்னை தொட்டு உரசிட உன்னோடு நான் !

என் தேவைகளை அனைத்தையும் நீ பூர்த்தி செய்வதற்காகவே

உலகம் அறியாத பெண்ணாய் உன்னோடு நான் !

உன் தேவைகள் அனைத்தும் நொடி பொழுதில் உணர்ந்திட

இருளிலும் தொடர்ந்திடும் நிழலாய் உன்னோடு நான் !

இன்னல்கள் ஆயிரம் வந்தாலும்

அதை மாற்றி இன்பம் தந்திட உன்னோடு நான் !

காலம் என்பது எத்தனை அழகென

காதலாய்  வாழ்ந்து காட்டிட உன்னோடு நான் !

- திருமதி சங்கமித்ரா ஷக்தி ..

வழக்கம்போல அவளுக்குள் கவிதை மின்னலாய் வெட்டியது .. அவள் அருகில் அமர்ந்திருந்த ஷக்தி , உணவை முடித்து  பாத்திரங்களை கழுவி விட்டு அவளின்முன் சொடுக்கு போடும்வரை கற்பனையிலேயே லயித்திருந்தாள் அவள் ..

" என்ன டீ .. கனவா ?"

" ம்ம்ம் .. ஒண்ணுமில்ல " அழகாய் வெட்கபட்டு சிரித்தாள் அவள் .. அதை ரசித்தாலும் சலிப்புடன்

" நாசமா போச்சு போ .. சீக்கிரம் வா என் கூட " என்றபடி அவன் அறைக்கு சென்றான் .. அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் குட்டி போட்ட பூனை  போல பின்தொடர்ந்தவளின் கைகளில் சில பைகளை திணித்தான்  ஷக்தி ..

" என்ன மாமா இது ? "

" பிரிச்சு பாரு "

" சொல்லேன் "

" நீயே பாரேன் "

" அடங்கவே மாட்டடா நீ " என்று சலித்தபடி பையை திறக்க அவளுக்காக சில உடைகளை வாங்கி இருந்தான் ஷக்தி .. அவள் வேலைக்கு ஏற்றாற்போல ப்ரொபெஷனலாக அதே நேரம் அவளுக்கும் பிடித்தவரு சில ஷர்ட்டும் , முழங்கால்தொடும் அளவுள்ள ச்கிர்டும் வாங்கி இருந்தான் ஷக்தி .. அவன் தேர்வினை மனதிற்குள் மட்டும் இல்லாமல் வாய்விட்டே பாராட்டினாள்  சங்கமித்ரா ..

" இதெல்லாம் எப்போ மாமா வாங்கின ?"

" நேற்றுதான் "

" எப்படி இப்படி எல்லாம் ?"

" எப்படின்னா ?"

" உனக்கு இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணா பிடிக்காதுன்னு நினைச்சேனே "

" அப்படின்னு நான் சொல்லலியே!"

" டேய் "

" உன் வேலைக்கு நீ சேலை எல்லாம் கட்டிட்டு போன அவ்வளவோ நல்ல இருக்காது மிது .. எல்லாத்துக்கும் இடம் பொருள் ஏவல்  இருக்கு " என்றபடி அவள் தலையில் தட்டினான் ஷக்தி ..

மித்ராவிற்கு அவள் அன்னையின் நினைவு வந்தது ..சித்ராவும் இப்படித்தான் , அவள் எங்கு போவதாய் இருந்தாலும் அவள் உடை தொடங்கி அனைத்து நேர்த்தியாய் இருப்பதை கவனித்து கொள்வார் அவர் .. சக்தியை போலத்தான் அவரும் , அதட்டலில் தான் அன்பினை பொழிவார் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.