(Reading time: 18 - 35 minutes)

டுத்து அவளுக்கு அது என்ன சத்தம்னு தெரிஞ்சப்ப இவன்தான் வேணுக்கும்னு பயம் காட்டிட்டான்னு தோணி இருக்கும்….. அதனால கோபம் வந்திருக்கும்… அதையும் நேருக்கு நேர இவன்ட்ட சொல்ல தேவையான நம்பிக்கை அவளுக்கு இவன் மேல இருந்திருக்காது…. அதனால அதை அவளே ஹேண்டில் செய்துறுக்கா…

வினி தன் ப்ரச்சனை மற்றும் கோப தாபங்களை இவனிடம் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு…இவன் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதை நம்புமளவுக்கு…. அவளுக்கு இவன் மீது நம்பிக்கை வரும் படியாய் இவன் தான் நடந்து கொள்ள வேண்டும்…. நம்பி வந்து அவளாக சொல்லும் நிலையை இவனேதான் எதோ ஒரு வகையில் கலைத்திருக்கிறான்…..ஆக அதை இவன்தான் இனி எழுப்பி கட்டியும் ஆக வேண்டும்….

அதுவரைக்கும்  இவனிடம் அவள் எதையும் சொல்லவும் மாட்டாள்….இவன் தன் பக்கத்தை சொன்னாலும் காது கொடுத்து கேட்கவும் மாட்டாள்….. ஆக தேவை இப்போது பொறுமை…..  அடுத்த படியா அவன் மனதில் இன்னொன்றும்  தோன்றி இருந்தது.

அவள் கோபத்தை வெளிப் படுத்திய விதம் கொஞ்சம் ஓவர்னாலும்…..ஒரு வகையில் அவனால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை…. இவங்க ப்ரச்சனை இவங்களை தாண்டி வெளிய போகாம….அதே நேரம் தன் பாதுகாப்பையும் பக்காவா கவனிச்சுகிட்டு…..எந்த ரிஸ்கும் எடுக்காம…..இவனை கண்ணுல விரலைவிட்டு ஆட்டிடா தானே…. அதோடு அன்னைக்கு ஃபார்ம்க்கு அவள் வந்த கோலம்…..

சரியான வாலு….. கண்டிப்பா அவ கூட விளையாடிப் பார்க்கனும்…… அவளை மாதிரியே….

அடுத்தும் பயம் வந்தா தயக்கமே இல்லாம இவனை வந்து பிடிச்சுக்கிற அளவு அவ மனசுக்குள்ள இவன் மேல அன்யோன்யம் இருக்குதான…. அப்படின்னா சின்ன சின்னதாய் சீண்டலாம்…. கல்யாணம் ஆகிட்டே தப்பில்ல….

ப்படி ஒரு முடிவோடு இருந்தவன் அன்று மதியம் இரண்டாம் மறுவீட்டிற்கென தன் வீட்டிற்கு  போக கிளம்பி நின்ற வினியை அழைத்துப் போக வாசலில் காத்து நின்றது தனது பைக்கில்….

இரண்டாம் மறுவீடு என்பது தம்பதிகள் மட்டும் பெண் வீட்டிற்கு சென்று வரும் நிகழ்வு….

“இன்னைக்கே இங்க திரும்பி வந்துடப் போறோம்…பிறகென்ன….. ப்ளீஸ்மா … “ அவனின் அந்த வார்த்தைகளில் அதற்கு மேல் வீட்டில் யாரும் மறுப்பாக எதுவும் சொல்லாமல் நிறுத்திவிட….. வேறு வழி இன்றி  அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் இவள்.

அதுவும் மதியம் ஃபங்க்ஷன் முடியவும் என்பதாலோ என்னமோ அவன் அணிந்திருந்த அதே  வேஷ்டி சட்டையில் கிளம்பி நின்றான் அவன். அவனுக்கென்ன எந்த ட்ரெஸ் போட்டாலும் பைக் ஓட்டலாம்….சேரி கட்டிட்டு பின்னால உட்கார்ற இவளுக்குல்ல இருக்கு ப்ரச்சனை….

ஆக கையில் வைத்துக் கொள்ள முடிந்த ஹேண்ட் பேக்கை தவிர எதையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பினாள் இவள். மத்த நேரமா இருந்தா அதையும் கூட எடுத்துட்டுப் போக மாட்டா…..ஆனா இன்னைக்கு இது கண்டிப்பா வேணும்…..

வீட்டிலும் அம்மா அப்பா இவர்கள் பைக் விஸிட்டை ஒரு கணம் ஒரு விதமாய் பார்த்தாலும் சந்தோஷ சிரிப்புடனேயே இவர்களை வரவேற்றனர்.

அம்மா அப்பா இவள் அவன் இவ்வளவு பேர்தான் இந்த சந்திப்பில்….மாப்பிள்ளை என அவர்கள் அவனை தலையில் வைத்து ஆட….இவள் மெல்ல நழுவி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். பவிக்குத்தான் அத்தனை முறை அழைத்துப் பார்த்தாள். அவள் இவளது அழைப்பை ஏற்றால்தானே….

கட கடவென நேரம் பறக்க “சரி அத்தை நேரமாகுது நாங்க கிளம்புறோம்…..” என அவன் ஆரம்பிக்கும் போது நிலவினியும் கிளம்பும் முகமாக எழுந்தவள்

 “அம்மா என் ஜுவல்லையெல்லாம் என் ரூம் பீரோல வச்சுறுக்கேன்…. மறக்காம எடுத்து லாக்கர்ல வச்சுடுங்கமா…போய்ட்டு வாரேன்மா….போய்ட்டு வரேன்பா” என்றபடி விடைபெற தொடங்கினாள்.

‘கிளம்புறப்ப சொன்னா அம்மா அப்பா ஏன் ஏதுன்னு குடைய மாட்டாங்க…அதுவும் அவன் முன்னால ‘ என்ற நினைப்பில் வந்தவுடன் தன் பேக்கில் அள்ளிப் போட்டு கொண்டு வந்திருந்த அத்தனை நகைகளையும் தன் அறையில் கொண்டு போய் வைத்திருந்தாலும் இப்போதுதான் சொன்னாள் நிலவினி.

அம்மா “ஏன் நிலு?” என சற்று பதறிப் போய் கேட்க

“அங்க இருந்தா சேஃப் இல்லைனு பட்டுது” என வருகிறது பதில் இவளிடமிருந்து.

“ஏல…” என்றார் அப்பா இவளை நோக்கி. இது அதட்டல். யவ்வனை வைத்துக் கொண்டு இவள் இப்படி சொல்கிறாளே என்று இருக்கிறது அவருக்கு….

ஆனால் சட்டென இந்த பேச்சுக்கு முடிவு கொண்டு வந்தது யவ்வன் தான்.

“இல்ல மாமா…..அவ சொல்றது சரிதான்…..வீட்ல பகல் நேரத்துல அம்மாவையும் வினுவையும் தவிர யாரும் இருக்க மாட்டாங்க……அப்டி இருக்கப்ப நிறைய நகை வீட்ல இருக்றது நல்லது இல்லை……அம்மா நகையே எல்லாம் லாக்கர்ல இங்க தூத்துகுடில தான் இருக்கு…வேணும்றப்ப வந்து எடுத்துக்கிறதுதான்….ஒவ்வொரு டைமும் அம்மா ஒன்ன கேட்க நாங்க இன்னொன்ன எடுக்கன்னு குழம்பிடும்….வினுக்குள்ளது உங்கட்ட இருந்தா அவ எதை கேட்கிறான்னு பார்த்து அத்தை சரியா எடுத்துக் கொடுப்பாங்கல்ல….அதான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.