(Reading time: 18 - 35 minutes)

சில நொடிகளாய் இருவருமாய் சுற்றி இருந்த மோக வலை அந்த நொடி இருவருக்குமே அறுந்து போய் இருந்தாலும் நிலவினிக்கு இப்பொழுதுமே அவன் மீது எந்த வருத்தமும் நினைவில் வரவில்லை தான்….சந்தோஷம் தான் பாக்கி இருந்தது.

ந்த மலை பாங்கான ஊர் இருகரை ஒரு கிராமம். அந்த ஊர் மக்கள் இவர்கள் திருமணத்தை கொண்டாடும் வண்ணம் அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்….

 யவ்வன் தன் ஃபார்ம் மூலம் சுற்று வட்டாரங்களில் யார் இடத்தில் சிறிதாய் குட்டை போல் நீர் தேக்கம் இருந்தாலும் அங்கு ஷ்ரிம்ப் வளர்க்க ஏற்பாடு செய்து கொடுத்து…..வளர்ந்தவைகளை அவனே மீண்டுமாய் வாங்கி நாட்டின் பிற பகுதிக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறான்…..

இந்த இருகரை ஊர் மண் வாகுக்கு தண்ணீர் இருந்துமே விவசாயம் பெரிதும் லாபமான தொழில் இல்லை….  வறுமையில் வாடிய மக்களுக்கு யவ்வனின் ஃபார்ம் வந்த பிறகு  ஷ்ரிம்ப் வடிவில் வழி பிறந்திருக்கிறதாம்…. அத்தனை பேரும் அவனை இவளிடம் இதையும் இன்னும் அனைத்தையும் சொல்லி சொல்லிப் புகழ… மனம் இனிக்க இனிக்கத்தான் இறங்கி வந்தாள் வினி விருந்து முடிந்து…..

தம்பதியராய் இருவரும் கீழே இறங்கும் பாதி வழியில் தான் பவர் சப்ளை திரும்ப வந்தது. அப்பொழுது வழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த மின் கம்ப விளக்குகள் சிந்திய வெளிச்சத்தில் தான் மலையின் உயரமும் யவ்வன் சொன்ன பாதாள பள்ளமும் தண்ணியும் பார்வைக்கு படுகிறது இவளுக்கு….

மலை என்று சொல்லப்பட்ட அது, அவன் சொன்னது போல் ரொம்பவே பெரியது தான் ஆனால் அந்த பெரிது என்ற சொல் அதன் அகலத்திற்குத்தான் பொருந்தும். விரிந்து அகன்ற பாறை ப்ரதேசமாக அது இருந்தாலும்,  ஊர் மொத்தமும் அந்த பாறை மேல் பரவி இருந்தாலும்….மொத்த மலையின் உயரம் 10 அல்லது 12  அடி இருந்தால் அதிசயம். …பாதை சுற்றி சுற்றி ஏறியதில் இவளுக்கு உயரம் புரிபடாதிருந்திறுக்கிறது…….அதிலும் அந்த தண்ணிப் பள்ளம் அது 2 அடி இருக்குமா?????

இதவச்சு இவள பயம் காட்டி இவன் என்னவெல்லாம் செய்து வைத்தான் இவளை???

திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள். முகத்தில் அழுகையின் சாயல் கூட இடம் பிடிக்கிறது..

யவ்வனோ தன் கைகளால் மன்னிப்பு கேட்கும் வண்ணம் தன் காதுகளை பிடித்திருந்தான் இப்போது. முகம் முழுவதும் குறும்பு..

“நீ என்ன டீஸ் பண்ணலையா…..மேரேஜ்க்கு முன்ன ஃபார்ம்க்கு வந்தது…..நேத்து நைட் என்னை மண்டைய உடைக்க விட்டுட்டு நீ ஒளிஞ்சுகிட்டது….இப்டில்லாம் செய்தல்ல…..அதான் உன்ட்ட விளையாடிப் பார்க்க தோணுச்சு….. ஊர்ல இருந்து நான் சொல்லிதான் நாம மேல ஏறும் போது லைட்டை ஆஃப் செய்துருந்தாங்க…..தப்புன்னா சாரி….”

“……………..”

“பாரு இதுல நான் உன் பயத்தை தப்பா யூஃஸ் செய்துக்கலை….நமக்கு மேரேஜ் ஆகி இருந்தும் நான் கிஸ்பண்ண கூட செய்யலை….ஃஸ்டில் ஐ’ம் எ ஜென்டில்மேன்…”

“………………………..”

“இதெல்லாம் நான் உன்ட்ட விளையாடாம வேற யார்ட்ட விளையாடவாம் ?” கண்சிமிட்டினான் அவன்.

“ஓ வேற யார்ட்டயும் விளையாட கூட தோணுமா சாருக்கு……கொன்னுடுவேன்….”

சொன்னவள் சுற்று முற்றும் ஒரு கணம் பார்த்து, பார்வை தொடும் தூரம் வரை யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வேகமாய் சென்று இறுக்கி அணைத்தாள் தன்னவனை….

“ஐ’ம் சாரி யவி….ஐ லவ் யூ யவி” ஆனந்தமும் அழுகையுமாய் வினி.

Friends due to health reasons இந்த எபிசோட்ல FB கொண்டு வர முடியலை….. கமென்ட்ஃஸும் ரிப்ளை செய்ய முடியவில்லை…. பொறுத்துக் கொள்வதற்கு நன்றி.

தொடரும்!

Episode # 14

Episode # 16

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.