(Reading time: 11 - 22 minutes)

ரவிந்த் “என் கல்யாணம் பற்றி உங்க வீட்டு வரன் வரும் வரை யோசனையே இல்லாமல் தான் இருந்தார்கள்.. தீடீரென்று தான் அவங்களுக்கு இந்த எண்ணம் தோன்றி இருக்கிறது. அம்மா இந்த விஷயத்தில் இவ்ளோ தீவிரமா இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. இப்போ அவங்க மனசுலே எங்க ரெண்டு பேருக்கும் அக்கா தங்கையைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்ற முடிவோடு இருக்கிறார்கள். இப்போ உங்க வீட்டு சம்மதத்தை எதிர் பார்த்துட்டு இருக்காங்க. ப்ளீஸ் நீங்க உங்க அப்பாவ convince பண்ணுங்களேன்”

ப்ரயு “நீங்க சொல்றது புரியது.. சொல்ல போனால் நாங்க பவித்ராவிற்கே வரன் பார்க்க ஆரம்பிக்கவில்லை.. ஒரு சொந்தக்காரங்க மூலம் தான் உங்க வீட்டு வரன் வந்தது.. அவங்க ரொம்ப சொன்னதாலே தான் நாங்க சம்மதிச்சோம்.. கல்யாணம் எடுத்து நடத்தறதே கொஞ்சம் சிரமம் தான்.. ஆனால் அதை விட சின்னவ படிப்ப நிறுத்திட்டு கல்யாணம்னா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. இப்போவே இவ்வளவு யோசிக்கிற உங்க அம்மா, கல்யாணத்துக்கு அப்புறம் அவங்கள படிப்ப முடிக்க விடுவங்களான்னு கேள்வி வருதே?”

அரவிந்த் “இல்ல சிஸ்டர்.. .நான் கண்டிப்பா உங்களுக்கு உறுதி தரேன்.. உங்க தங்கச்சி இப்போ படிச்சிட்டு இருக்கிற course முடிப்பாங்க.. அதுக்கு நான் guarantee”

அருணோ ..”அது மட்டும் இல்லைங்க.. எங்க வீட்டுலேர்ந்து இதை செய்ங்க, அத செய்ங்க என்று எந்த compellsion கொடுக்க விட மாட்டோம்.. உங்களாலே என்ன முடியுதோ அத செய்யுங்க... மற்றபடி எங்க மனைவிக்கு என்ன தேவையோ அத நாங்க பார்த்துக்கறோம்.. “ என்றான்.

அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட ப்ரத்யா , சற்று நேரம் யோசித்தவள் “சரி.. நான் எங்க அப்பா கிட்ட பேசுகிறேன்.. அதே சமயம் நீங்க என் கணவர் கிட்டயும் பேசுங்க.. அவரோட சப்போர்ட் இருந்தா எங்க அப்பாவ convince பண்றது இன்னும் கொஞ்சம் easy ஆ இருக்கும்.. “ என்றாள்

அவர்கள் இருவரும் “உடனே நீங்க நம்பர் கொடுங்க .. நாங்க இப்போவே பேசுகிறோம் “ என்றார்..

அவர்கள் அவசரத்தை பார்த்து சிரித்த ப்ரத்யா “நம்பர் வாங்கிக்குங்க.. ஆனால் இப்போ வேண்டாம் .. நைட் ஒரு எட்டு மணிக்கு மேலே பேசுங்க “ என்றாள்.

அவர்கள் இருவரும் அவளிடம் விடை பெற்று செல்ல, இதை பார்த்திருந்த பிரியா “பிரத்யுஷா.. நீ ரிஸ்க் எடுக்கறையோன்னு தோணுது.. “

“ஏன்.. அப்படி சொல்ற..?”

“இல்ல.. உன் சின்ன தங்கச்சிய நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே.. அத அவங்க அம்மா கிட்ட எடுத்து சொல்லாமல்  அவங்க ரெண்டு பேரும் உங்கள pressure பண்றாங்களோ தோணுது.. “

“ஹ்ம்ம்.. நீ சொல்றதும் சரி தான்.. ஆனால் இதை தவிர அவங்க கிட்ட குறை சொல்ற மாதிரி வேற எதுவும் இல்லை.. அதோட... அவங்க விரும்பி கேட்கும் போது நல்லா பார்த்துப்பாங்கன்னு தோணுது..”

“ஆனால் அவங்க ரொம்ப கண்டிப்பானவங்கன்னு தோணுதே.. “

“ஹ்ம்ம். இருக்கலாம் .. யோசிக்கணும் .. சரி.. வா போகலாம்.. “ என்ற போது அவள் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவள் தன் தங்கை நம்பரை பார்த்தவள், யோசனையோடு எடுத்தாள்..

“ஹலோ.. சொல்லு பவித்ரா...”

“அக்கா .. நீங்க ப்ரீயா..? “

“சொல்லு ... இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கு லஞ்ச் முடிய ..”

“வந்து .. தப்பா எடுத்துக்காதீங்க... இந்த கல்யாணம் அப்பா, அம்மா இஷ்டப்படி முடிவு எடுக்கட்டும்.. ஆனால் இது இல்லைன்னு முடிவானால் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்காவது எங்கள் கல்யாண பேச்சு எடுக்க வேண்டாம் கா.. இத நீங்க அப்பா கிட்ட பேசி permission வாங்கி கொடுக்கணும்..”

“என்னடி.. ரெண்டு பேரும் மிரட்டறீங்களா?”

“இல்லை கா. “ எனும் போதே ..அவள் குரலில் கண்ணீர் கேட்டது.. “எங்க ரெண்டு பேர் மனசும் கொஞ்சம் சமாதனம் ஆக டைம் கேட்குறோம்.. ப்ளீஸ் “

கொஞ்சம் அமைதியை இருந்த பிரத்யுஷா “சரி.. கவலைபடாதீங்க .. நல்லதே நடக்கும்னு நம்புவோம்..” என்று வைத்தாள்.

ப்ரியாவை பார்த்து பெருமூச்சு விட்டவள் , அவர்கள் பேசியதை சொல்லியவள் “இதைதான் நான் எதிர் பார்த்தேன்.. இதற்காகத்தான் நான் இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று நினைக்கிறன்.. பார்க்கலாம் “ என்று அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

ரவு பேசிய ஆதியும், அருண் அரவிந்த் பேசியதை கூறியவன் பிரத்யாவின் அப்பாவிடம் பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கியதாக கூறினான்.

அதற்கு பின் இருவர் வீட்டிலும் பேசி நிச்சயத்திற்கு நாள் குறித்தனர்...

இதற்கு இடையில் ஆதி தங்கை வித்யாவிற்கு வளைகாப்பு நெருங்கியது.. அந்த வைபவத்திற்கு எல்லாரும் சென்றனர்.. வளைகாப்பு முடிந்த உடனே வித்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதால் அதற்கு ஏற்ற படி தயார் செய்தார்கள்.

பிரத்யாவிற்கு லீவ் நாட்களில் தன் தங்கைகள் நிச்சயத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்க அவர்களோடு அலைய சரியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.