(Reading time: 11 - 22 minutes)

வித்யா வளைகாப்பு அன்று அவளுக்கு வாங்கின சீர் பொருட்கள் எல்லாம் அடுக்கி, அவள் மாமியார் திருப்தி ஏற்படுமாறு பிரத்யாவும், அவள் மாமியாரும் செய்தார்கள்.

ப்ரத்யா வீட்டாரும் முன்னாடியே வந்து தேவையான உதவிகளை செய்தார்கள்.. அதோடு தங்கள் மகள்கள் நிச்சயத்திற்கும் வித்யா வீட்டாரை அழைத்தார்கள்..

வித்யாவிற்கு வளையல் அடுக்கி முடியவும், அருகில் இன்னொரு பெண்ணிற்கு அடுக்க பிரத்யாவை அமர சொன்ன போது,

வித்யா மாமியார் “அவளை எதுக்கு இப்போ உட்கார சொல்றீங்க... எப்படியும் இன்னும் மூணு வருஷம் கழிச்சுதான் அவ புருஷன் வர போறான்.. இப்போவே வளையல் அடுக்கி என்ன பண்ண போறா ?” என்று கூறவும்,

ப்ரத்யா ஒரு மாதிரி முகம் சுருண்டு போனாள்.. பிரத்யாவின் மாமியாருக்கும் இந்த பேச்சு பிடிக்கவில்லை... அவர் எதிர்த்து பேச போன போது வித்யாவின் கெஞ்சல் பார்வை அவரை அடக்கி விட, ப்ரத்யா அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்..

பிரத்யாவின் அம்மா, அப்பாவிற்கும் கஷ்டமாக இருந்தது... ஆனால் அவள் மாமியாரே பேசாமல் இருக்கும் போது தாங்கள் என்ன செய்வது என்று பேசாமல் போய் விட்டார்கள்,...

வித்யா தன் பிறந்த வீடு வந்து விட்டாள்.. பழைய பிரச்சினை வரவில்லை என்றாலும், வித்யா கணவன் இப்போது எல்லாம் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வித்யாவை பார்க்க வந்து தங்கி விட்டு போனார்.

அவர் வரும்போது ப்ரத்யா மாமியார், பிரத்யாவோடு தங்க ஆரம்பித்தார். அவருக்கு கட்டில் தேவை படுவதால் , அவர் இவளோடு படுத்து விடுவார்,

அப்போது எல்லாம் பிரத்யாவிற்கு, தன் அறையில் மாமியாரை வைத்துக் கொண்டு தன் கணவனோடு பேசுவது என்பது கஷ்டமாக இருந்தது..

பல முறை வெறும் நல விசாரிப்போடு இருவரும் முடித்து விடுவார்கள்.  இதனால் சில சமயங்களில் அவள் தன் கஷ்டத்தையோ, சந்தோஷதையோ பகிர முடியாமல் அவர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது,

ஆதிக்கும் இப்போது அங்கே வேலை விறுவிறுப்பாக நடப்பதால், பாதி நேரம் வேலையிலேயே கழித்தான்.

ப்ரத்யா தங்கைகள் நிச்சயத்திற்கு, வித்யா மாமியார் வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள்.. அவர்கள் பையன் வீட்டினருக்கும் ஏதோ தூரத்து உறவு என்றார்கள்.

பவித்ரா ..அருண் தங்கள் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் மகிழ்ச்சி கொள்ள, அருண் ..தாரிணியோ .. தங்கள் சின்ன சின்ன தீண்டல்கள் மூலம் மகிழ்ச்சி கொண்டனர்,

பிரத்யாவிற்கு தன் கணவனை தேடியது.. இவர்கள் திருமணதிற்கு பின் தங்கள் வீட்டில் நடக்கும் முதல் மற்றும் முக்கியமான நிகழ்ச்சி .. இதற்கு அவரால் வர முடியவில்லையே என வருத்தமாக இருந்தது..

நிச்சயதார்த்தம் கொஞ்ச நேரத்தில் நடைபெற இருக்கும் போது, ப்ரத்யா வீட்டினரை அழைத்த அருண் , அரவிந்தின் அம்மா,

“அம்மா, ப்ரத்யா.. நான் சொல்றேன்னு என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. இந்த நிச்சயதார்த்தம் முடியும் வரை நீ எதாவது ஒரு அறையில் இருந்துக்கோ. மேடைக்கு வரக் கூடாது.. “

எல்லோரும் அதிர்ந்து விழித்தனர். முதலில் சுதாரித்த அருண், அரவிந்த் இருவரும்

“அம்மா, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பேசறீங்க ?” என வினவ,

“இல்லை டா.. ப்ரத்யவோட புருஷன் வெளிநாட்டுலே இருக்கறது தெரியும்.. ஆனால் அவர் நினைச்ச உடனே வர முடியாதாமே.. contract லே போய் இருக்கிறாராமே .. உங்க ரெண்டு பேர் கல்யாணம், நிச்சயம் இதெல்லாம் பார்க்கும் போது அவளுக்கு அவ புருஷன் நினைப்பு வரும்.. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நாம மட்டும் இப்படி இருக்கோமேன்னு மனசு கஷ்டப்படும். உங்க கல்யாணத்துலே அவ கஷ்டத்தோட நடமாடிக்கிட்டு இருந்தா, உங்க சந்தோஷத்தை அது பாதிக்கும். அதுக்குதான் சொல்றேன்.”

“ஏம்மா, கொஞ்சமாவது அறிவோட பேசறீங்களா? அவங்க வரலைன்னால் எங்க மனைவிங்க மனசு கஷ்டப்படுமே அது பரவாயில்லையா? “

“அது அப்படியில்ல டா.. இப்போ அவங்க கண் முன்னாலே இவ நடமாடிக்கிட்டு இருந்தா எல்லாருக்கும் கஷ்டம்.. அவங்க வரலைன்னால் அந்த ஒரு கஷ்டத்தோட போய்டும். இது எல்லாம் நானா சொல்லலே.. நம்ம சொந்தக்காரங்க சொல்றாங்க.. அதோட அவங்க பிரத்யவோட நாத்தனார் வீட்டுக்கரங்க .. அவங்களே அப்படி சொல்லும் போது எனக்கு இன்னும் பயமாயிருக்கு. என்னை பத்தி உங்களுக்கே தெரியும் .. எனக்கு உங்க ரெண்டு பேர் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்.. வேற எதுவும்  தேவையில்லை. “

இடையில் பிரத்யாவின் அப்பா “சம்பந்தி அம்மா, இப்போ நிச்சயதார்த்தம் முடியட்டும். கல்யாணத்தை மாப்பிள்ளை வரும் போது வச்சுக்கலாம்..”

“அதுக்குதான் வழி இல்லை போலேவே.. அவர் நாலு வருஷம் கழிச்சு வர்ற வரைக்கும் என் பசங்களுக்கு கல்யாணம் முடியாமல் இருக்கனுமா?”

“ஏம்மா, எல்லாம் சொல்லிதானே பெண் பார்க்க வந்தீங்க..?”

“அப்போ மாப்பிள்ளை வெளி நாட்டுலே இருக்காருன்னு சொன்னீங்க .. ஆனால் இப்படி இவ்ளோ நாளாகும்ன்னு சொல்லலையே.. கல்யாணம் வரும்போது வந்துருவார்ன்னு நினச்சேன்..”

“இப்போ என்னதான் சொல்றீங்க..?”

அதற்குள் அங்கே நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தையை பார்த்த பவித்ரா, தாரிணி தங்கள் அக்காவின் அருகில் சென்றவர்கள்,

“அப்பா, இன்னும் வரவே வராத உறவுகளுக்காக எங்களோட பிறந்து வளர்ந்த எங்க அக்காவ விட்டு கொடுக்க முடியாது..”

அதற்கு அந்த அம்மாவோ “அப்போ இப்போ நிச்சயதார்த்தம் நடக்காது.. “ என்று கூற.. எல்லோரும் அதிர்ந்து விழித்தனர்.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.