(Reading time: 12 - 24 minutes)

தெற்கென்ன.. நானும் இதை பற்றி இனி பேசவில்லை. ப்ரத்யா இருக்கிறாளா? அவளிடமும் பேசி விடுகிறேன்.” என்றார்.

“இதோ கொடுக்கிறேன்” என்று பிரயுவிடம் கொடுத்தார்.

“அம்மா.. ப்ரயு.. நான் நேற்று உன்னிடம் நடந்து கொண்ட முறை ரொம்ப தப்பு.. அதை மனசில் வச்சிக்காத.. நீ வந்து உன் தங்கைகள் கல்யாணத்த நடத்தினால் தான் எனக்கும், உன் தங்கைகளுக்கு சந்தோஷம் சரியா ?”

“அய்யோ ... அதை நான் நேற்றே மறந்து விட்டேன்.. நீங்கள் என்னை புரிந்து கொண்டதே போதும். அப்படி ஒரு சம்பவம் நடந்தததை மறந்து விடலாம்” என்றவள், அதற்கு பின் அவரிடம் மேலும் சில நிமிடங்கள் பேசி வைத்தாள்.

இப்போதுதான் பிரயுவிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. என்னதான் நேற்று மாமியார் தன் குடும்பத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை அப்படி நடப்பரா ? என்ற கேள்வி ஏற்பட்டது. மேலும் இன்று காலை அவள் பெற்றோர் வந்த போது அவர் பேசியது வேற அவளை கலங்க அடித்தது, இப்போ தன் தங்கைகளின் மாமியார் பேசியது அவளை கொஞ்சம் ஆசுவாசபடுத்தியது.

ன்று இரவு ஆதி பேசும்போது அன்றைய நடப்பை தெரிவித்தவளின் குரலில் இருந்த மகிழ்ச்சி, ஆதியையும் சந்தோஷபடுத்தியது.

“ரதி.. குட்டி.. இப்போ உன்னோட சந்தோஷம் உன் குரலிலே கேட்கறது எவ்ளோ ஹாப்பி ஆ இருக்கு தெரியுமா? அதை விட்டு நீ நேற்று அழுதது எனக்கு மனசெல்லாம் வலிச்சதுடா கண்ணம்மா.. உன் பக்கத்தில் இருந்து உன்னை ஆறுதல் படுத்த முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தாண்டா தெரியும்.. “

“சாரி.. ஆதிப்பா .. நேற்று உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா?”

“ஆமாம் .. நீ ஒரு இடத்தில், நான் ஒரு இடத்தில இருக்கும் போது நீ அழுறது எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு... எங்கம்மாவோ, என் தங்கச்சியோ இந்த மாதிரி தவிச்சிடக் கூடாதுன்னுதான், உன்னை கல்யாணம் பண்ணி என் இடத்தில் உன்னை வைத்து விட்டு வந்தேன்.. ஆனால் உனக்கே பிரச்சினை என்று வரும்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லையேன்னு தவிச்சு போயிட்டேன்..”

“ஹே.. அந்த தவிப்பு எல்லாம் இனிமே வேண்டாம்.. அப்பா இன்னும் நாற்பது நாளில் நல்ல முகூர்த்தம் வருவதாக பேசினார்.. அன்றைக்கு மண்டபமும் கிடைத்திருக்கிறது என்றார்.. உங்களால் விசா ரெடி பண்ண முடியுமா ?

“இன்னும் ஒரு மாசம் கழித்து என்றால் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன்.. எனக்கு பத்திரிகை அடித்து வந்தவுடன் ஒன்றை மெயில் அனுப்பி விடு.. அதை வைத்து நான் ஆபீசில் லீவ் அப்ளை செய்து விட்டு, விசாவும் ரெடி செய்கிறேன்..”

“சரி.”

“ரதி குட்டி.. இன்னிக்கு உன்னோட சந்தோஷமா மூடுக்கு ஏற்ற மாதிரி ஒரு பாட்டு அனுப்பறேன்.. நீ கேட்டு என்னோட கனவுலே டூயட் பாடு.. அதுக்கு முன்னாடி .. ஸ்ட்ராங்கா எனக்கு ஒரு உம்மா கொடு “ எனவும்..

“சீ.. போங்க.. ஆதிப்பா ...” என்றவள் போனை வைத்தாள்.

தூங்காத விழிகள் ரெண்டு 

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் 

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 

 

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 

பூமகள் மடி மீது நான் தூஙவோ 

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 

பூமகள் மடி மீது நான் தூஙவோ 

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல் 

ராஜனை கையேந்தி தாலாட்டவோ 

நாளும் நாளும் ராகம் தாளம் 

சேரும் நேரம் தீரும் பாரம் 

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக 

நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ 

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் 

காதலில் அரங்கேரும் கதை அல்லவோ 

மாதுளம் கனியாட, மலராட, கொடியாட 

மாருதம் உறவாடும் கலை என்னவோ 

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற 

வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ 

மேலும் மேலும் மோகம் கூடும் 

தேகம் யாவும் கீதம் பாடும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.