(Reading time: 14 - 27 minutes)

14. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 14

ஞ்சனா, ஆர்யமன் சொல்லிச் சென்ற ‘கன்’, எண்ணும் வார்த்தையில் உறைந்து தான் போயிருந்தாள். எங்கே அந்த ஃப்ராண்டிங் மேனேஜர் வந்து விடுவாரோ என்று, அவருடன் பேசுவதைத் தவிர்க்க... வேகமாக பயிற்சிக்கு தேவையான ஒலி வடிவத்தை தன் ஹெட் ஃபோன் மூலமாக  கேட்க ஆரம்பித்தாள்...

அடுத்த சில விநாடிகளிலே அந்த ப்ராண்டிங் மானேஜரும் அங்கு வர.... அவளைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே,

“ஹாய்... ஐ எம்...”, என்று கை குலுக்க நீட்ட...

Puthir podum nenjam

அவளோ அவனை மிரண்ட பார்வை பார்த்தவள்..

“அதெல்லாம் வேண்டாம்... என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க.”, என்றாள் பதட்டத்துடன்..

‘ஏன் பேயைப் பார்த்தது போல நடுங்குது இந்தப் பொண்ணு?’, என்று அவன் அவளை விநோதமாக பார்த்து,

“ஹட் ஃபோனை கழட்டுங்க... சொல்றேன்!!”, என்றான்...

அவன் சொல்வது சரி வர கேட்கவில்லை.. என்றாலும் அவன் சொல்ல வருவது என்னவாக இருக்கும் என்பதை யூகித்தவளாக.

..

“ட்ரையினிங் ஆடியோவை மிஸ் பண்ண முடியாது... ”, என்று காதில் உரைத்த சத்தத்தையும் மீறி பொறுப்பு பொன்னம்மாவாக ஒலித்தவளின்  குரலும் அனிச்சையாக உயர்ந்தது...

அவள் மேலும், “எதுன்னாலும் சைன் லாங்குவேஜ் ப்ளீஸ்”, என்றாள்  கும்மிடு போடாத குறையாக - ஹெட்ஃபோனே ‘கன்’, பற்றிய பேச்சிலிருந்து தன்னை காத்துக் கொள்ளும் கவச குண்டலமாக நினைத்தவளுக்கு  அதை கழட்டி வைக்கும் எண்ணமே இல்லாமல் இப்படி சொன்னதும்,

‘சே... பொண்ணு பார்க்க நல்லாயிருக்கு! பேச சான்ஸே கொடுக்க மாட்டேங்கிதே!’, என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டவன்... தன்னைத் தொடர்ந்து வருமாறு வேறு அறைக்கு அழைத்துச் செல்ல...

Related: You might also like...

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

Don't miss it... 

அவனுடன் அந்த அறைக்குள் நுழைந்தவள்.. அவன் காட்டிய அந்த ராட்சத அட்டையைப் பார்த்தாள் தான்... ஆனால், மனம் ஒரு வித படபடப்பில் இருந்ததால், அதை கருத்தூன்றி பார்க்கவில்லை.

காதிற்குள் அவள் ட்ரையினிங் ஆடியோ ஓதிக் கொண்டிருக்க.... அதையும் தாண்டி அந்த ப்ராண்டிங் மேனேஜர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முயன்றாள்.

ஒரு பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு... அதாவது அந்த ப்ராண்டிங் மானேஜரின் பத்து நிமிட சைகை மொழி போராட்டத்திற்கு பிறகு...

“சோ.. பேக் க்ரவுண்ட்ல நான் கொலாஜ் வொர்க் செய்யணும்”

என்பதை புரிந்து கொண்டு அஞ்சனா சொல்ல...

இப்பொழுது தான் மூச்சு வந்தது அவனுக்கு.. ‘கடலை வறுத்த வாய்க்கு வந்த சோதனையா??? ஹய்யோ. இதுக்கே கண்ணைக் கட்டுதே!’,

“ஹப்பாடா.... “, என்று கட்டை விரலை உயர்த்தி காட்டியவன்..

“இங்கே ரெட்”, என்றான்.. அந்த படத்தின் மேல் பகுதியைக் காட்டி...

அஞ்சனாவின் காதில் தெளிவின்றி அது விழ... கண்களில் பயத்துடன், “யாரு டெட்???”, என்று பீதியுடன் கேட்டாள்..

“அய்யோ.. அந்த ஹெட்போனை மாட்டிகிட்டு என்னை படுத்துற பாடு.. “, என்று அவன் வாய் விட்டு கதறி,

சிகப்பு மார்க்கரைக் காட்டி. ”ரெட்”, என்றான்...

“என்ன ப்ளட் டா??”, மொத்த உடலும் நடுங்கிய படி அவள் கேட்க...

அவனுக்கு அவள் பயத்தைக் கண்டு இரக்கப்படுவதா, ஹட்போனை கழட்டாமல் தப்பாக புரிந்து கொண்டவளைக் கண்டு கோபப்படுவதா.. என்று ஆயாசமாக வந்தது..

‘இதை பெத்தாங்களா.. செய்தாங்களா..‘, என்று தலையில் அடித்துக் கொண்டு..

“நான் நோட் எழுதிட்டு போறேன்.. அதை பார்த்து செய்யுங்க...”, என்று மட மடவென்று எழுதினான்.. பாவம், கடலை வறுத்து சாகுபடி செய்தவன் நிலை கோனார் நோட்ஸ் எழுதுவதற்கு தள்ள பட்டதே! அய்யகோ.. என் செய்ய...

அவன் எழுவதைக் கண்ட அஞ்சனா..

“இல்லை... எனக்கு சொல்லிட்டு போங்க”, என்று கேட்க வர...

“அய்யோ.. ஆளை விடும்மா.. இனிமே உன் திசை பக்கம் கூட வர மாட்டேன்!”, என்று ஓடியே விட்டான்.

அவன் சென்ற பின்னும்.. இவள் மனதின் படபடப்பு குறைய சற்றே நேரம் பிடித்தது..  அவன் எழுதி வைத்த சென்ற குறிப்பை எடுத்தாள்.

‘ரீட் பண்ணா மூளை வலிக்குமே! எதுக்கு கஷ்டம்? நம்ம இஷ்டம் போல எதையாவது வெட்டிங்.... ஒட்டிங்.. செய்துடுவோம்.. ’, என்றவளின் பார்வை அனிச்சையாக அந்த ராட்சத அட்டையில் பதிந்து விட்டு திரும்ப... இப்பொழுது தான் மூளையின் மூலையில் மின்னல் வெட்ட.. மீண்டும் அந்த அட்டையைப் பார்த்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.