(Reading time: 14 - 27 minutes)

துக்கு முன்னாலே இருந்த அதிகாரத்தை பறிச்சிட்டு பல்லு பிடுங்கின பாம்பாக்கிட்டாங்க’, என்ற ஆதங்கம் அந்த டெக்னிகல் டைரக்டருக்கு இருந்தது..

அந்த மீட்டிங் முடிந்ததும், எல்லாரும் அவருக்கு புதிய பொறுப்பில் அமர்வதற்கான வாழ்த்தைத் தெரிவிக்க... மரியாதை நிமித்தம் ஆர்யமனும் வாழ்த்து தெரிவிக்க வந்தவன்,

“It was not destiny that got you this. It was your ability to make your own destiny. Congratulations!”, என்று கை குலுக்கியவன்.. ஏதோ குத்தலாக சொல்வது போல தெரிந்தது  அவருக்கு...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

‘என்கிட்ட வாயைக் கொடுத்தது உன் விதி! அது தான் உன்னை கீழே இறக்கி  விட்டிருக்கு’, என்பதை குறிப்பாக உணர்த்துகிறான் என்பது தான் அவருக்கு  புரியவில்லை!

அந்த மீட்டிங்கை முடித்து விட்டு... தனது வேலையை ஆரம்பிப்பதற்குள் குறைந்தது ஒரு ஐம்பது ஈமெயில்லாவது மெயில் பாக்ஸ்ஸில் குவிந்திருந்தன...

அதில் தினேஷ் நேற்று அனுப்பிய பரணிதரன் ரெஸ்யூமும்.. ப்ராண்டிங் மானேஜரின் அஞ்சனாவைப் பற்றி அனுப்பிய ஈமெயிலும் அடக்கம்.

‘பிஸ்னஸ் சென்சிடிவ் விஷயங்களை மட்டும் பார்ப்போம்’, அவைகளை பின்னுக்கு தள்ளி விட்டான்.. 

அடுத்தடுத்து மீட்டிங்.. மீட்டிங்கிடையே ஈமெயில்களுக்கு பதிலளிப்பது.. என்று நேரம் பறந்தது.. அன்றைய காலை வேலை முடித்து விட்டு டெஸ்க்கிற்கு திரும்பிய பொழுது.. ரிசப்ஷனில் இருந்து அழைப்பு அவன் இன்டர்காம்மிற்கு.. அஞ்சனாவிற்கு லஞ்ச் வந்து விட்டது என்று!

‘இதை எதுக்கு என்கிட்ட சொல்றாங்க’, என்ற எண்ணமே ஓங்க.

“அவங்க ட்ரையினிங் ரூம் இருப்பாங்க!”, என்று இணைப்பை வைக்கப் போனான் ஆர்யமன்..

“அங்க ட்ரை செய்து ரீச் பண்ண முடியலைன்னு தான் உங்களுக்கு சொல்றேன்”, என்று ரிசப்ஷனிஷ்ட் சொன்ன பிறகு தான்.. இவனுக்கு நினைவு வந்தது.. அவள் கொலாஜ் வேலை செய்ய வேறு அறையில் இருப்பது.

‘அந்த  ஃப்ராண்டிங் மானேஜர் வேற ஏதோ ஈமெயில் செய்திருந்தானே’, என்ற யோசனையுடன் அவனை அழைத்து விசாரிக்க...

“ஆர்யமன், நான் அனுப்பிய ஈமெயில் பார்த்தீங்களா? அந்த பொண்ணு ஹட்ஃபோனை மாட்டிகிட்டு என்னை படுத்துன பாடு இருக்கே! கடைசியா நோட் எழுதி வைச்சிட்டு வந்தேன்!”, என்று சொல்ல....

‘ஒழுங்கா சொன்னாலே கேட்க மாட்டா! இதில் அந்த ஆளு எழுதினதை பார்த்து தானா செய்யப் போறா??? எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்குன்னு மெசேஜ் வேற அனுப்பி வைச்சா... என்னத்தை சொதப்பி வைச்சிருக்காளோ...’, என்றவனின் உள்ளம் பதறியது.

பின்னே, இவன் தானே அந்த படைப்பை உருவாக்கியது.. அது குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டால்!!!!

இன்டர்காம்மை வைத்து விட்டு இவன் அவள் இருந்த அறை நோக்கி செல்லும் பொழுது.. தினேஷ் அழைத்தான் அலைபேசியில்...

“ஆர்சி தும்னே சொல்லணும் ஏக் இம்பாடன்ட் மெசேஜ் yaar... தூன் கப் வருவே லஞ்ச்”,

என்றழைக்க, ஐந்து நிமிடங்களில் காபடேரியாவில் இருப்பதாக சொல்லி விட்டு அஞ்சனா இருந்த அறையை  நோக்கி விரைய..

அந்த அறைக்குள் நுழையப் போனவனை...   அவள் சத்தம் பின்னுக்கு இழுக்க.. சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினான்..

அங்கே காரிடரில் அஞ்சனா, “ஓகே பாவா.... ஸ்வீட் பாவா.. க்யூட் பாவா..”, என்று கொஞ்சிய படி.. முத்தமிட்டு கொண்டிருந்தாள் அலைபேசி திரையில்...

மீன் வாயைப் போல.. குவிந்து விரிவதில் ஒரு கணம் லயித்து... பின் தன் பார்வையை மீட்ட அதே நேரம்.... அவளும் அலைபேசியை வைத்து விட்டு... இவனைப் பார்த்து விட காரிடரில் நின்ற படியே...

“ஆர்யா!!!”, என்று உற்சாகமாக அழைத்ததில்..

‘கொடுத்த வேலையைச் செய்யாம அந்த பாவாவை கொஞ்சிகிட்டு இருக்கிறா..’,

என்று ஆர்யமனின் இயல்பிற்கும் மீறிய ஆத்திரம் வர..

“ஃப்ராண்டிங் மானேஜர் சொன்னதை ஏன் கேட்கலை?”, என்றான் கடுமையாக..

அவன் கேட்டதும்.... “அது... அது... “, அஞ்சனாவின் விழிகளில் பயம் வந்து போனது.. பின் தன்னைத் தானே சமாளித்தவளாக...

‘ப்ச்... பேக்க்ரவுண்ட் ஃபில் பண்ணனும்.. அவ்வளவு தானே! அது அவர் சொல்லி தான் செய்யணுமா? நானே என் இஷ்டபடி செய்திட்டேன்!”, என்று

அலட்சியமாக தோளைக் குலுக்கி கொண்டு அவனருகே நடந்து வர...

“உன் இஷ்டத்துக்கா????” என்று அதிர்ந்தவன்.. கோபத்தில் ஏதோ பேச வர..... என்ன நினைத்தானோ.... சட்டென்று கண்களை மூடி.. நெற்றியில் கை வைத்தவன்..

“ப்ச்... அய்ய்யோ...!!!!”, என்று சலிப்பாக நீட்டி முழக்கி... பின்னெட்டு வைத்த படி..

“சரி! என்னத்தையாவது செய்து வை!!! எனக்கென்ன!!! அதை வாங்கிறவன்  தலையெழுத்து!”, சலிப்போடு ஆரம்பித்து.. புலம்பலில் முடித்தவாறு  ஒரு நொடி கூட தாமதியாது அங்கிருந்து அகன்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.