(Reading time: 14 - 27 minutes)

congrats Harsh...”, பெரிய எழுத்துக்களில்... அந்த சொற்கள் மேக்ஸ் சாஃப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் முகங்களால் உருவாக்கப் பட்டு இருந்தது -

3D யில் வடித்திருந்த விதம் தான் அத்தனை அழகாய்!!

ஆக, அவன் அதிக பங்குகளை வாங்கியதற்கு வாழ்த்து சொல்லும் இரு சொற்கள்.. கம்பெனியின் சார்ப்பாக அவனுக்கு அளிக்கப் படும் ராட்சத வாழ்த்து அட்டை என்பது புரிந்த அஞ்சனா, ஆர்யமனை அழைத்தாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஞ்சனாவிடம் பேசி விட்டு மீட்டிங் அறைக்குள் நுழைய போனவனுக்கு... கொடுத்த வேலையை அவள் அரை மனதாக ஒத்துக் கொண்டாளே என்ற பயம் -  அதாவது இவள் முன்பு போல மற்றவர்களை வேலை பார்க்க விடாமல் செய்து விடுவாளோ என்ற பயத்தினால்,

“ஏதாவது சந்தேகம் இருந்தால் பிங் பண்ணு.. வேற யாரையும் டிஸ்டர்ப் செய்யாதே!”, என்ற செய்தியை அவளுக்கு அனுப்பி விட்டு அந்த “மன்திலி ரிவ்யூ மீட்டிங்”கிற்கு வந்தான் ஆர்யமன்.

அது உயர்மட்ட மானேஜர்களுக்கான  மீட்டிங்.  அவன் வந்த சமயம்.. அந்த மீட்டிங் அறையின் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருக்க... அவனின் போதாத காலமோ என்னவோ..  முகுந்த் அருகில் உள்ள இருக்கை மட்டுமே காலியாக இருந்தது.. அதில் சென்று அமர்ந்தவன் மறந்தவாக்கில் கையில் இருந்த அலைபேசியை எதிரே இருந்த கண்ணாடி மேஜையின் மீது வைத்தான்!!!!

அதன் பின் மீட்டிங் துவங்கியது. புது தலைமை அதாவது  ஹர்ஷ் பிரதான பங்குதாரராக ஆன பின்பு நடக்கும் முதல் மீட்டிங் அது. CEO அந்த அறிவிப்பை வெளியிட்டார்.  - அவர்கள் அலுவலக அமைப்பு மாற்றி அமைக்கப் படுகிறது என்றும்

“அதில் முதல் வேலையாக  டெக்னிகில் டைரக்டர்ங்கிற பதவியே வேண்டாம்ன்னு மேலிடத்தில் முடிவு செய்திருக்காங்க”, என்றும்  அறிவிக்க... அத்தனை பேருக்கும் திகைப்பு!!!! ஆர்யமனைத் தவிர!!!!

டெக்னிகல் டைரக்டர் முகத்தில் ஈயாடவில்லை...  முகுந்த்திற்கோ மிக வருத்தம். அவனுக்கு ஒரு கையை இழந்தது போலாகி விடுமே என்ற கவலை.. அவனால் நம்பவே முடியவில்லை...

‘இந்த ஆர்யமனை கேள்வி கேட்க இருந்தவரும் போயிட்டாக்க... என்ன ஆகுறது.?’

என்று அவனுக்குள் பொறாமைத் தீ பற்றி எரியும் பொழுது,  கண்ணாடி மேஜையில் வைத்திருந்த ஆர்யமனின் செல் ஃபோன் வைப்ரேட் ஆக.... கண்ணாடி மேஜை அதன் அதிர்வை பல மடங்காக்கி  அனைவர் கவனத்தையும் ஈர்த்தது...

அதைக் கண்டதும், “ஊப்ஸ்...ஸாரி”, என்று எல்லாரையும் பொதுவாக பார்த்து சொல்லிய படியே... வேகமாக அழைப்பை துண்டித்து. அலைபேசியை பாக்கெட்டில் போட்டான்...

அவன் அருகில் அமர்ந்திருந்த முகுந்த்தின் பார்வைக்கு அது தப்பவில்லை - அஞ்சனாவின் அழைப்பு என்பது!

அதைத் தொடர்ந்து CEO பேச ஆரம்பித்தார்.

அடுத்த சில நொடிகளில் குறுந்தகவல் வந்து சேர்ந்தது... இப்பொழுது அதிர்வின்  சத்தம் மற்றவர் கவனத்தை ஈர்க்கவில்லை.. ஆனால், ஆர்யமனை கவனிப்பதையே கவனமாக இருந்த முகுந்த்திற்கு தெளிவாக கேட்டது..

‘இந்த அரை லூசு.. எதுக்கு என்னை கூப்பிட்டதுன்னு தெரியலையே..’, என்று யோசித்துக் கொண்டிருந்த ஆர்யமன்.. குறுந்தகவல் வந்ததும் மெல்ல தனது அலைபேசி தகவலைப் பார்த்தான்..

‘ஹே..நீங்க சொன்னது போல எனக்கு இந்த வேலை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!!! மாஸ்டர் பீஸ் ஆர்ட் வொர்க்லே என்னையும் இன்வால்வ் செய்தது தேங்க்ஸ்!’

என்ற செய்தியை படித்ததும், மெலிதாய் புன்னகைத்து விட்டு மீண்டும்  மீட்டிங்கில் கவனத்தை செலுத்தினான்....

முகுந்த்தோ,

‘இங்க CEO எவ்வளோ பெரிய விஷயம் பேசிகிட்டு இருக்கார். அதை பத்தி கவலைபடாம.. கூலா மெசேஜ் பார்த்துகிட்டு இருக்கிறான்’, என்று கொதித்தவன்.....

ஆர்யமன் அஞ்சனாவின் செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனத்திற்குள் பதித்தான். நம்மை நாம் இனம் காணும் முன்னே.. நம் எதிரி அதை அறிந்திருப்பான் - ஆர்யமனும் அதில் விதி விலக்கல்ல!!! முகுந்த்தின் எண்ணங்களை அறியாது போனான்..

“நிர்வாக அமைப்பும் மாற்றி அமைக்க படுது! அதாவது பதவி மாற்றம் மட்டும் தான்... பதவி நீக்கம் இல்லை! நம்ம டெக்னிகல் டைரக்டர் இனி ரிசெர்ச் & டெவலப்மெண்ட் டைரக்டரா மாத்த படுவார்!”

“நம்ம மேனேஜ்மெண்ட், வேலை நீக்கம் செய்ய மாட்டோம்ன்னு  உறுதியளித்திருக்காங்க! அதனாலே பயம் வேண்டாம்”

என்று CEO மேலும் விளக்க... அங்கே சற்றே நிம்மதி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.