அவன் செய்கை புரியாத விழித்த அஞ்சனா.. ஹர்ஷ்ஷை சொல்கிறான் என்றதும்,
“என் குதிரைக்கு நான் என்ன செய்தாலும் பிடிக்கத் தான் செய்யும்!”, என்று சொன்னதைக் கூட அவன் கவனித்தானோ.. என்னவோ...
அதன் பின், காபடேரியாவிற்கு வந்த ஆர்யமன், அவனுக்காகவே காத்திருந்த தினேஷ் கலவரத்துடன் அவன் பார்ப்பதை கண்டதும்.. அந்த சமயம் எதுவும் கேட்கவில்லை! நீண்ட வரிசையில் நின்று உணவை தட்டில் எடுத்து வந்து அமரும் வரை பொறுமை காத்த ஆர்யமன்.. பின்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மனோவின் "பூ மகளின் தேடல்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“என்ன டென்ஷனா இருக்கே? ”, என்று கேட்டான் தினேஷ்ஷைப் பார்த்து..
“விஷயத்தை கேட்டா நீ டென்ஷனாகிடுவியோன்னு தான் டென்ஷனா இருக்கிறேன்!”, ஹிந்தியிலே பேச ஆரம்பித்தான்...
“என்ன விஷயம்? எமோஷனலாகி மதர் டங்ல பேசுற! உன் காக்டெயில் மிக்ஸ்லே சொல்லு...”, என்று அவனைச் சொல்ல தூண்டினான்...
“தூனே... கோக் மே க்ரஷ்... ஆபிஸ் மே போகுது காசிப்”, என்றான் தினேஷ் ரகசியமாக..
“வாட்????”, என்றான் அதிர்ந்து
“சப்கோ.. பேசுறாங்க.. இதை தான் ”, என்று அவன் சொன்னதும்...
முந்தைய நாள் அஞ்சனாவிடம் உளறியது சட்டென்று நினைவிற்கு வரவில்லை! தன் மீது என்ன தவறிருக்கும் என்று தான் யோசித்தான்.
‘எல்லாரும் பேசுற அளவுக்குன்னா.... நாம அப்படி ஒன்னும் கோக்கை சைட் அடிக்கலையே! எவ்வளவு நல்ல பிள்ளையா இருந்தோம்’, என்று தான் முதலில் தோன்றியது அவனுக்கு!
ஆனாலும், பின்னே அன்று காலை அவன் வாய் முணுமுணுத்ததை... கேட்டு கோகிலா திரும்பியதை நினைவு கூர்ந்தவன்.. அது வேற யார் காதிலும் விழுந்து.. ஹாட் நியூஸ்ஸா ஆகிடுச்சோ!’
‘ப்ச்.. அதைக் கூட ஃப்ரண்ட்லியா எடுத்துகிட்ட கோக்.. இந்த நியூஸ் கேட்டா என்னை என்ன நினைப்பா!’, என்று உள்ளுக்குள் கவலை தோன்ற... அதை மறைத்தவனாக,
“காசிப் தானே... கண்டுக்காம விட்டா, கொஞ்ச நாள்ல மறந்திடுவாங்க”, என்றான் இயல்பாக...
“நேத்து நான் சொன்னப்போ டென்ஷனானே! இப்போ கூலா இருக்கே”, என்று திகைத்தவனாக தினேஷ் அவனைப் பார்க்க...
“உன் வாயை அடைக்கலாம்.. ஊர் வாயை அடைக்க முடியாது!”, என்று சிரித்துக் கொண்டே ...
“முகத்துக்கு நேர கேட்க தைரியம் இல்லாம, முதுகுக்கு பின்னாலே பேசுற பேச்சுக்கு எமொஷனாகுறதுக்கு பதிலா என்ஜாய் செய்துட்டு போயிடலாம்!”
என்று வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டவன்...
‘கோகிலாகிட்ட பேசணும்’, என்று மட்டும் நினைத்து கொண்டு அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு..
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் தினேஷ்... எங்க டீம்மிலே ஒருத்தவங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு! ”, என்று வேறு விஷயத்தை ஆரம்பித்து அந்த நபரின் தேவையை சொல்லி முடிக்க..
அதைக் கேட்டுக் கொண்ட தினேஷ், “சோ பிட்டி! அது கோன் (யாரு)”, என்று கேட்க...
“அவங்க யார்க்கிட்டயும் டிஸ்க்ளோஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.. நீ செய்தே ஆகணும்!”,
‘அது கொஞ்சம் கஷ்டமாச்சே!’ முதலில் யோசித்த தினேஷ், பின் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்!
மதிய உணவை முடித்து விட்டு அவர்கள் கிளம்பும் பொழுது...
“லுக் அஞ்சனா!!!! ஷி இஸ் லைக் டப்பாவாலா”, என்று கிண்டலடித்த தினேஷ்ஷின் பார்வையைத் தொடர்ந்த ஆர்யமன்,
சசி மற்றும் முகுந்த்திடம் பேசிய படியே கையில் பெரிய டிஃபன் கேரியருடன் எதிர் திசையில் வந்தவளைப் பார்த்ததும்...
‘ஹய்யோ!!!! இந்த லூசு கண்ணுலே பட்டுடக் கூடாதே.’,
என்ற பயம் வந்த பொழுது... அவன் முன்னே எதிர்பட்டான் சுகுமார்.
அவனைக் கண்டதும்... நேற்றைய விழாவை மிகச் சிறப்பாக நடத்திய அவனது லீடர்ஷிப் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! நேற்றே பேச நினைச்சு அதற்கு சந்தர்ப்பம் அமையாமல் போக...
இன்று அவனைக் கண்டதும், அது பற்றி பேச ஆரம்பித்தவன்.. அஞ்சனாவை மறந்தே போனான். அவளுமே சசி, முகுந்த்துடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்ததால், இவனை கவனிக்காமல் சென்று விட்டாள்..
சிறிது நேரம் பேசி விட்டு தினேஷ் விடை பெற்றுச் செல்ல.... ஆர்யமனும் சுகுமாரிடம் பேசிக் கொண்டே தங்கள் தளத்திற்கு வந்தனர்.
எதையும் தெளிவாக பேசும் சுகுமாருக்கு, அன்று காலை லிஃப்ட்டில் நடந்த விஷயத்தை பற்றி ஆர்யமனிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. இருந்தாலும்.. அவனிடம் அதை எப்படி கேட்பது என்ற தயக்கம். அவனால் இயல்பாக பேச முடியவில்லை..
எப்பொழுதும் தன்னிடம் ஆர்வத்துடன் பேசும் சுகுமாரின் உடல் மொழியில் ஒரு தயக்கம் ஒட்டியிருப்பதைக் கண்ட ஆர்யமன்,
“ஏதோ நெகடிவ் ஃபீட் பேக் சொல்லணும்ன்னு நினைக்கிறீங்க! அதுக்கு என்ன சொல்வேனோன்னு பயம்! நினைச்சிட்டா சொல்லிட வேண்டியது தானே?”, அவன் மனதில் ஓடுவதை அனுமானித்தவனாக அவன் கண்களைப் பார்த்து ஆர்யமன் கேட்க..
அவன் கேட்ட விதத்தில்.. தயக்கம் சற்றே மறைந்து... தொண்டையைச் செருமிய சுகுமார்,
“அது ப்ராஜெக்ட் பத்தி இல்லை தல.. கைன்ட் ஆஃப் பெர்சனல்.. “, என்று நீட்டியவன்....
“அது... அஞ்சனாகிட்ட நீங்க கோக் பத்தி எதுவும் சொன்னீங்களா?”, என்று குட்டை உடைத்தான்
தொடரும்
{kunena_discuss:922}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.