(Reading time: 19 - 38 minutes)

"ம்ம்... சரி அவ எங்கப்பா..."

"இருடா நானே கூப்பிடறேன்..." என்று மதி யுக்தாவை அழைத்தாள்.

யுக்தா அங்கு வந்ததும்... பிருத்வி அவளிடம்... "யுக்தா இது புதுசா நம்ம கம்பெனிக்கு கிடைக்கறப் போற ப்ராஜக்ட்... அதுக்கு ஒரு நல்ல ப்ளானா  டிசைன் பண்ணி தரனும்.... முடியுமா...??"

"ம்ம்... எப்படின்னு சொல்லுங்க... நான் டிசைன் போட்டு தரேன்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

பின் இருவரும் அந்த ப்ராஜக்ட்டை பத்தி விவாதித்தார்கள்... யுக்தாவை பொறுத்தவரை தன் வேலையில் மட்டுமே கவனம் வைத்து பேசிக்கொண்டிருந்தாளே தவிர  அவள் அருகில் இருக்கும் பிருத்வி அவள் கணவன் என்றோ... அவள் மனம் கவர்ந்த காதலன் என்றோ அவள் சிறிது கூட நினைக்கவில்லை.. இருந்தாலும் அவர்கள் இருவரும் ஜோடியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த மதிக்கும் செந்திலுக்கும் சந்தோஷமாக இருந்தது...

யுக்தா வரைந்து கொடுத்த ப்ளான் அந்த கம்பெனிக்கு பிடித்துப் போய் அந்த ப்ராஜக்ட் பிருத்வி கம்பெனிக்கு கிடைத்தது... அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த தன்னுடைய சேமிப்பிலிருந்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசு பொருள் வாங்கிச் சென்றான்...

"இதெல்லாம் எதுக்கு பிருத்வி... இப்போ தான் ப்ராஜக்ட் கிடைச்சிருக்குன்னு சொன்ன.. அதுக்குள்ள இப்படி காசு செலவு செய்யனுமா...??"

"இல்லம்மா... அதுக்கு நாங்க பணம் வச்சிருக்கோம்... இது என்னோட சேவிங்ஸ்ல இருந்து எடுத்து வாங்கிட்டு வந்தேன்... இதெல்லாம் வாங்கறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட கேட்டுட்டு தான் வாங்கிட்டு வந்தேன்..." என்று சொல்லி தன் தங்கைக்கு ப்ரேஸ்லெட் தன் தாய்க்கு வளையல் என்று வாங்கி வந்ததை அவர்களிடம் கொடுத்தான்..

செந்தில் பொதுவாக அவருக்கு தேவைபடாமல் எதுவும் வாங்கமாட்டார்.... பிருத்வி சொல்லும் போதே தனக்கு எதுவும் வாங்க வேண்டாம் என்று பிருத்வியிடம் சொல்லிவிட்டார்... இவர்களெல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது  யுக்தா அங்கு டீ எடுத்துக் கொண்டு வந்தாள்... அப்போது மதியோ...

"பிருத்வி யுக்தாக்கு என்ன வாங்கிட்டு வந்த..." என்று கேட்டாள்.

"நான் வாங்கிட்டு வந்தா பிடிக்குமோ என்னவோ அதான் எதுவும் வாங்கிட்டு வரல... இதுல பணம் இருக்கு அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு நீங்களே வாங்கிக் கொடுங்க..."

"அவ போட்டுக் கொடுத்த ப்ளான்ல தான் உனக்கு இந்த ப்ராஜக்ட் கிடைச்சுது... அவளுக்கே எதுவும் வாங்கிட்டு வரலையா... அதுக்கு நீ மொத்தமா பணமா குடுத்திருந்தா எங்களுக்கு தேவையானதை நாங்களே வாங்கிப்போம்ல..."

"அம்மா பிரணாக்கு நான் செலக்ட் பண்றது தானே பிடிக்கும்... உங்களுக்கும் நான் வாங்கிட்டு வந்தா பிடிக்கும் தானே...??"

"அது முன்ன பிருத்வி... இப்போ நாங்க மட்டும் வீட்டில் இல்லை... யுக்தாவும் இருக்கா... நீ எது வாங்கினாலும் முதலில் அவளுக்கு தான் வாங்கனும்.."

"அதான் நான் வாங்கிட்டு வரல இல்ல.. விடுங்களே" என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு போய்விட்டான்..." அதுவரையிலும் யுக்தா அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

"இப்பல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போதே அவன் பாட்டுக்கு போறான்... இதெல்லாம் சரியே இல்லங்க... என்னங்க வாங்கறதுக்கு முன்னாடி உங்கக்கிட்ட கேட்டானே... இதெல்லாம் நீங்க சொல்லமாட்டீங்களா...??"

"நான் வீட்டுக்கு கிஃப்ட் வாங்கிட்டு  போகட்டுமாப்பான்னு கேட்டான்... எனக்கு எதுவும் வேண்டாம்... மத்தவங்களுக்கு வாங்கிட்டு போன்னு சொன்னேன்... அவன் இப்படி செய்வான்னு எனக்கு தெரியுமா என்ன??"

"என்னவோ போங்க... யுக்தா இந்த வளையல் உனக்கும் நல்லா இருக்கும் நீயே போட்டுக்கம்மா..."

"இல்லம்மா... அந்த வளையலை விட இந்த ப்ரேஸ்லெட் தான் அண்ணிக்கு நல்லா இருக்கும்... அண்ணி இதை நீங்க எடுத்துக்கங்க..."

"ரெண்டுப்பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா... இது பிருத்வி உங்களுக்காக ஆசையாய் வாங்கிட்டு வந்தது... அதை நீங்க தான் வச்சிக்கனும்..."

"சரி யுக்தா அப்போ கடைக்கு போலாம் வா... உனக்கு பிடிச்சது ஏதாவது வாங்கிக்கோ..."

"இல்லை அத்தை எனக்கு ஜ்வல்ஸ் போடுவது அவ்வளவா பிடிக்காது... மேரேஜ் அப்போ அம்மா வாங்கிக் கொடுத்ததே ஜ்வல் பாக்ஸ்ல அப்படியே இருக்கு... அதனால எனக்கு எதுவும் வேண்டாம் அத்தை..." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

பின் இரண்டு நாள் கழித்து அலுவலகத்திலிருந்து வந்த பிருத்வி.... புது ப்ராஜக்ட் கொடுத்த கம்பெனி எதோ பார்ட்டிக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க... எல்லோரும் போகனும் என்று சொன்னான்... மதியோ யுக்தா வந்தால் தான் நாங்களும் வருவோம் என்று கூறிவிட்டாள்...

இந்த பார்ட்டிக்கு யுக்தாவையும் கூட்டிட்டு தான் போகப் போகிறோம்... அந்த பிளானை போட்டுக் கொடுத்தது யாருன்னு எல்லோரும் கேக்கறாங்க... அதனால் அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கனும் என்று பிருத்வி கூறினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.