(Reading time: 19 - 38 minutes)

"ருடா ரெண்டுபேரும் ரெடியாகி வரவேண்டாமா..." மதி சொல்லிக் கொண்டிருந்த போதே இருவரும் அறையிலிருந்து வெளியில் வந்தனர்....

பிருத்வியோ யுக்தா மீதிருந்து கண்களை எடுக்க சிரமப்பட்டான்... முதன்முதலில் அவளை புடவையில் பார்க்கிறான்... அவர்கள் திருமணத்தின் போது அவனுக்கு இருந்த கோபத்தில் அவளை எங்கு அவன் கவனித்தான்...

லைட்டும் இல்லாமல் டார்க்கும் இல்லாமல் மீடியமான பீச் கலரில் வொர்க் சாரியும்... அதற்கேற்றார் போல் நகைகளும்... மேலிருந்து இருபுறமும் பின்னலிட்டு மீதி  விரித்திருந்த முடியுமாக அழகாக இருந்தாள் யுக்தா... ஏனோ அவள் அழகு என்பதையே இன்று தான் அவன் உணர்ந்திருந்தான்... மனதை அலைபாய விடாமல்  எல்லோரையும் கூட்டிக்கொண்டு பார்ட்டிக்கு கிளம்பினான்...

காரை விட்டு இறங்கி உள்ளே நுழையும் போதே சப்னா இவர்களை தேடி வந்தாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மனோவின் "பூ மகளின் தேடல்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"ஹாய் ஆன்ட்டி... ஹாய் அங்கிள்.... ரெண்டுப்பேரும் எப்படியிருக்கீங்க...." என்று மதியையும் செந்திலையும் விசாரித்தாள்...

அவளைப் பார்த்து இருவருக்கும் சங்கடமாக இருந்தது... இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

"ஹாய் பிரணா... நீ எப்படியிருக்க... என்று பிரணதியை விசாரித்தாள்... அவளோ " ம்ம்.. இருக்கேன்.." என்று வெறுப்பாக கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள்...

கடைசியாக வேண்டாவெறுப்பாக "எப்படியிருக்க யுக்தா" என்று யுக்தாவை விசாரித்தாள்... அவளும் இன்முகத்தோடு நன்றாக இருப்பதாக கூறினாள்...

பின் பிருத்வியிடம் சென்று "பிருத்வி... தாத்தா கிட்ட நீங்க வருவதா சொன்னேன்...  வாங்க உங்களை அவருக்கு இண்டரட்யூஸ் செஞ்சு வைக்கிறேன்... என்று அவனை அழைத்துச் சென்றாள்...  அவனும் அவளுடன் சென்றான்..

அதை பார்த்துக் கொண்டிருந்த மதிக்கும் செந்திலுக்கும் இப்போது யுக்தாவை நினைத்து தர்ம சங்கடமாகி போனது... சங்கடத்தோடு யுக்தாவை பார்த்தார்கள்... அவளோ அந்த பார்ட்டி நடக்கும் ஹோட்டலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்...

பிருத்வி சப்னாவோடு போனதை பெரிதாக்காமல் இருந்ததுக்கு சந்தோஷப்பட்டாளும்... ஏன் இந்த பொண்ணு இப்படி இருக்கு என்று மதி சலித்துக் கொண்டாள்... அதே சலிப்போடு செந்திலிடம் "ஏங்க இந்த சப்னா இந்த பார்ட்டிக்கு எப்படிங்க வந்தா..."

"அது சப்னாவோட தாத்தா சிமெண்ட் பாக்டரி வச்சிருக்காருல்ல... அதனால இந்த பார்ட்டி நடத்தறவருக்கும் அவருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்... அவரையும் இன்வைட் பண்ணியிருப்பாங்க..."

"ஓ... அப்படியா.." என்று மதியும் ஒத்துக் கொண்டாள்...

சப்னா அவள் தாத்தாவை பார்க்க அழைத்த போது போகலாமா... வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தாலும்... பின் ஒருவேளை இவங்க லவ் பண்ணதை சப்னா அவ தாத்தா கிட்ட சொல்லியிருப்பாளோன்னு பிருத்வி யோசித்தான்... அதனால் அவள் தாத்தாவை பார்க்க அவளோடு சென்றான்...

யுக்தாவை திருமணம் செய்து கொள்ள சப்னாவை வேண்டாமென்று மறுத்தபோது அவளை ஏமாற்றிவிட்டோமே என்ற உறுத்தல் மட்டுமில்லாமல்... எங்கே அவள் தன் குடும்பத்தாரிடம் கூறி பிரச்சனை செய்வாளோ என்று கூட பிருத்வி பயந்தான்.... அதனால் தான் இப்போது அவள் தாத்தாவை பார்க்கவும் செல்கிறான்...

இந்த யோசனையோடு சப்னாவுடன் நடந்து சென்றபோது "ஹாய் பிருத்வி..."

என்று வரூன் அவர்கள் எதிரில் வந்து நின்றான்...

பிருத்வி அவனை கோபப் பார்வை பார்த்தான்.... சப்னாவோ அவனை முறைத்தாள்... ஆனால் அதுக்கெல்லாம் கவலைப்படாத வரூன்... " என்ன பிருத்வி ஒரு ஹாய் சொன்னா திரும்ப ஹாய் சொல்ல மாட்டியா... சரி அதை விடு... VK கன்ஸ்ட்ரக்‌ஷன்க்கு இப்போ நான் தான் எம்.டி அதுக்கு ஒரு கங்கிராட்ஸ் கூட செய்யமாட்டியா..."

"ஏ நீயெல்லாம் ஒரு ஆளு உனக்கெல்லாம் விஷ் பண்ணனுமா...??" என்று சப்னா குறுக்கிட்டாள்...

"என்ன பிருத்வி.... நீ ஒரு அழகான பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டன்னு கேள்விப்பட்டேன்... ஆனா இன்னும் நீ இவக்கூட சுத்திக்கிட்டு இருக்கியா.. உன்னோட கேரக்டர் அப்படியில்லையே... "

"ஹேய்... என்று சப்னா பேச வரும்போது பிருத்வி குறுக்கிட்டு வேண்டாம் என்று தலையசைத்து அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்... வரூனோ கிண்டலாக சிரித்துவிட்டு சென்றுவிட்டான்...

பிருத்வி பயந்தது போல் சப்னா அவள் தாத்தாவிடம் ஒன்றும் சொல்லியிருக்கவில்லை... இப்பொது கிடைத்திருக்கும் ப்ராஜக்ட்க்கு வாழ்த்து சொல்லவும்..... அவர்கள் கம்பெனி சிமெண்ட் வாங்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தார்...

சப்னா அவள் தாத்தாவிற்கு இவனை அறிமுகப்படுத்திவிட்டு சென்றுவிட்டாள்... இவனோ அவள் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தான்... அப்போது இவர்கள் துறை சம்பந்தப்பட்ட இன்னொருவரும் வந்தார்... பிருத்வி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை யுக்தா மீதே இருந்தது... அவளோ அந்த வரூனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.... அதைப் பார்த்துக் கொண்டிருந்த இவன் பார்வையில் கோபம் தெரிந்தது.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:933}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.