(Reading time: 19 - 38 minutes)

யுக்தாவோ நான் இந்தப் பார்ட்டிக்கு வரவில்லை என்று சொன்னாள்... கல்யாணம் தான் சிம்பிளா நடந்தது... இந்த பார்டிக்கு எப்படியோ மாமாக்கு சம்பந்தப்பட்டவங்க வருவாங்க... அப்புறம் பிருத்வியையும் உன்னோட மனைவி வரலையான்னு கேப்பாங்க... அதனால அங்க வருகிறவர்களுக்கு உன்னை அறிமுகப் படுத்த வேண்டாமா...??" என்று மதி யுக்தாவிடம் பேசி அவளை ஒத்துக் கொள்ள வைத்தாள்...

எல்லோரும் பார்ட்டிக்கு போகப் போறது கன்பார்ம் ஆனதும் பிரணதி யுக்தாவை விடாப்பிடியாக ஷாப்பிங் கூட்டிக் கொண்டு போனாள்... பார்ட்டிக்கு அணிந்துக் கொள்ள யுக்தாவுக்கு புடவையும் அவளுக்கு சல்வாரும் வாங்கி வந்தாள்...

பார்ட்டிக்கு போக வேண்டிய அன்று காலை ஹாலில் உட்கார்ந்து பிருத்வி டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... யுக்தாவோ அங்கே ஒரு மூலையில் அயர்ன் செய்துக் கொண்டிருந்தாள்... அப்போது பிருத்வியின் மொபைல் அடித்தது... இதுவரையில் ஒரு நூறு மிஸ்டுகால்கள் கொடுத்தும் அதை ஏற்கவில்லை பிருத்வி... இருந்தும் மனம் தளராமல் திரும்பவும் அவனை அழைத்திருந்தாள் சப்னா... அவனும் இப்போது அந்த அழைப்பை எடுத்தான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"சொல்லு சப்னா..."

"பிருத்வி எத்தனை முறை ஃபோன் பண்ணியிருப்பேன்... இப்ப தான் என் ஃபோனை உங்களுக்கு எடுக்கனும்னு தோனுச்சா..."

"அதை விடு சப்னா... இப்போ எதுக்கு ஃபோன் பண்ண..."

"பிருத்வி நீங்க எதிர்பார்த்தா மாதிரி பெரிய லெவல் ப்ராஜக்ட் கிடைச்சிருக்காமே.... தாத்தா சொன்னாரு... அப்படி ஒரு ப்ராஜக்ட்க்கு அப்புறம் தான் நம்ம மேரேஜ் பத்தி பேசனும்னு சொல்லியிருந்தீங்க... ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு..."

"சப்னா இதை பத்தி பேச தான் ஃபோன் பண்ணியா..."

"இல்லை பிருத்வி உங்களை கங்கிராட்ஸ் பண்ண தான் ஃபோன் பண்ணேன்... அந்த கம்பெனி எப்பவும் VK கன்ஸ்ட்ரக்‌ஷன்க்கு தான் அவங்க ப்ராஜக்ட்டை கொடுப்பாங்களாமே..?? இப்போ உங்களுக்கு கொடுத்திருக்காங்களே.... அதான் எனக்கு சந்தோஷமா இருக்கு..."

"எக்ஸ்ட்ரா ப்ராஜக்ட் தான் எங்களுக்கு கொடுத்திருக்காங்க சப்னா... அதை நல்லப்படியா முடிச்சுக் கொடுத்தா தான் மத்த ப்ராஜக்ட்ஸும் கொடுப்பாங்க..."

"எனக்கு தெரியும் பிருத்வி... நீங்க பர்ஃபெக்டா உங்க ப்ராஜக்ட்டை முடிப்பீங்க.... இனி உங்க கம்பெனிக்கு தான் எல்லாம் ப்ராஜக்டும் கொடுப்பாங்க பாருங்க...

பிருத்வி அந்த வரூன் ஜெர்மனில இருந்து வந்தாச்சு தெரியுமில்ல... இப்போ VK கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிக்கு வரூன் தான் எம்.டி யாம்... அவங்க அப்பா இல்லையாம்.. "

"ம்ம்... நானும் கேள்விப்பட்டேன்..."

"பிருத்வி வரூன் இப்போ பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு காரணம் உங்களுக்கு போட்டியா வரனும்னு தான்... நீங்க அந்த ப்ராஜக்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சு VK கன்ஸ்ட்ரக்‌ஷன்க்கு கிடைக்கிற ப்ராஜக்ட்டை கைப்பற்றனும்...."

"ரெண்டு கம்பெனியும் எப்பவும் போட்டி போட்டதில்லை சப்னா... இப்பவும் நான் அப்படி நினைக்கல..."

"சரி பிருத்வி.... அந்த கம்பெனி அரேஞ்ச் பண்ணியிருக்க பார்ட்டிக்கு நீங்க வரீங்கல்ல..."

"ஆமாம் பேமிலியோட போகப் போறோம்..."

அந்த பேமிலியில் யுக்தாவும் அடக்கம்னு நினைக்கும் போது சப்னாவுக்கு எரிச்சலாக வந்தது.... இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு... " பிருத்வி... பார்ட்டிக்கு எங்க தாத்தாவுக்கும் இன்விடேஷன் வந்திருக்கு... நீங்க வரீங்கன்னா நானும் தாத்தா கூட பார்ட்டிக்கு வரலாம்னு தான் கேட்டேன்... சரி நாம பார்ட்டில பார்க்கலாம்... ஃபோனை வைக்கிறேன்...." என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

ஏண்டா ஃபோனை அட்டெண்ட் செய்தோம் என்று ஆகிவிட்டது பிருத்விக்கு... ஃபோனை வைத்ததும் யுக்தாவை பார்த்தான்... அவள் சிரத்தையாக அயர்ன் செய்யும் வேலையை செய்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக யுக்தாவை வைத்து ஏதேதோ செய்துக் கொண்டிருந்தாள் பிரணதி....

"பிரணதி நீ என்ன பண்ற... எனக்கு இந்த மேக்அப்லாம் பிடிக்காது... சரி கொஞ்சமா போடப் போறன்னு சொன்னதால ஒத்துக்கிட்டேன்... நீ என்னடான்னா இவ்வளவு நேரம் பண்றீயே..."

"என்ன அண்ணி நீங்க... மேரேஜ்க்கு அப்புறம் பர்ஸ்ட் டைம் அண்ணன் கூட வெளிய போறீங்க... அதுவும் பார்ட்டிக்கு... நீங்க அழகா இருக்க வேண்டாமா..??"

"நீ போட்ற மேக்அப்ப பார்த்தா எனக்கு பயமா இருக்கு பிரணதி....  நான் அழகா இல்லன்னா கூட பரவாயில்லை... அசிங்கமா ஆயிடப் போறேன்..."

"என்ன அண்ணி நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா..?? இந்த மேக்அப்ல... இன்னும் 5 மினிட்ஸ் தான் அப்புறம் கண்ணாடி பாருங்க நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்கன்னு...."

செந்தில், வளர்மதி, பிருத்வி மூவரும் பார்ட்டிக்கு தயாராகி யுக்தா, பிரணதிக்காக காத்திருந்தனர்...

"என்னம்மா ரெண்டுபேரும் என்னப் பண்ணிக்கிட்டு இருக்காங்க... எவ்வளவு நேரமாகுது பாருங்க..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.