(Reading time: 13 - 25 minutes)

து வரை தரைவழி போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்தும் இயங்காது என அரசு அறிவித்தது.

ஆதர்ஷ் நிலை கொள்ளாமல் தவித்தான். அவனின் மனம் முழுதும் பிரயுவின் நினைவுகளே.. கடவுளே. .நிச்சயத்தின் போதே அந்த அம்மா அப்படி பிரயுவை பேசினார்களே.. இதற்கு என்ன சொல்வார்களோ என்று .. வருத்த பட்டான்.. அதோடு அவனால் யாரையும் தொடர்பு கொள்ளக் கூட முடியவில்லை.

அவன் நிலவரம் இவ்வாறிருக்க, பிரயுவின் நிலைமையோ அதற்கு மேல்..

வித்யா டெலிவரிக்கு இன்னும் குறைந்த பட்சம் ஒருவாரம் இருக்கிறது என்று டாக்டர் கூறியிருந்ததை நம்பி , வித்யாவின் மாமியார் வழியில் ஏதோ ஒரு துக்கத்திற்காக வித்யா கணவர், மாமியார் எல்லோரும் சென்றிருந்தனர். கல்யாணத்திற்கு முதல் நாள் அவர்கள் வருவதாக இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

மறுநாள் காலையில் ப்ரயு வீட்டில் எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், ப்ரயு மட்டும் நேராக மண்டபத்திற்கு வந்து விடுவதாக பேசி வைத்திருந்தார்கள்.. அன்று பாத்ரூம் சென்று வந்த வித்யா , தெரியாமல் ஈரத்தில் கால் வைத்து வழுக்கி விட, நல்ல வேளை அடி எதுவும் பலமாக இல்லாத நிலையில், பிரசவ வலி ஆரம்பித்து விட்டது.

இரவோடு இரவாக டாக்டரிடம் பேசி விட்டு டாக்ஸி வைத்து பிரயுவும், அவள் மாமியாரும் hospital அழைத்து சென்றனர். வித்யா கணவருக்கு தகவல் சொல்லி விட, அங்கேயோ காலையில் தான் கிளம்ப முடியும் என்ற நிலை.

இடையில் பிரயுவிற்கோ ஆதி flight ஏறி விட்டானா என்று தெரியாத நிலை.. அவனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் நாட் ரீச்சபல் ... என்று வந்தது. தன் வீட்டிற்கு தெரிய படுத்தவும் முடியாத நிலை.. மறுநாள் அவர்கள் கல்யாணத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களை அலைகழிக்க விரும்ப வில்லை.

அவள் மாமியாரோ மற்ற எதை பற்றியும் கவலை இல்லாமல், தன் மகளின் வலியை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்.

டாக்டரோ வலி எடுத்தாலும் இன்னும் நேரம் ஆகும் என்று கூறியிருந்தார். அவள் வேலை பார்க்கும் hospital லே என்பதால் முடிந்த வரை நார்மல் ஆக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.

பிரயுவிற்கு அவள் மாமியாரை சமாதான படுத்தவும், தேவையானவற்றை வாங்கி கொடுக்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே பல நாட்களாக அலைச்சல், மன உளைச்சல் .. இந்த நேரத்தில் வித்யா நல்ல படியாக பெற்று பிழைக்க வேண்டுமே என்ற டென்ஷன்... வித்யாவின் கணவர் வந்து, அவரிடம் நல்ல படியாக தாயும், சேயும் ஒப்படைக்கும் வரை அவளுக்கு இந்த டென்ஷன் ஓயாது.

காலையில்தான் வித்யா வீட்டினர் புறப்பட்டு விட்டதாக தகவல் கொடுத்தனர்.  அவர்கள் வந்து சேர எப்படியும் மதியத்திற்கு மேல் ஆகிவிடும் என்றனர்.

இதற்கு இடையில் ப்ரயு மண்டபத்திற்கு எப்போது வருகிறாள் என்று கேட்ட தன் பெற்றோருக்கு அவள் தகவல் தெரிவிக்க, அவள் அப்பா hospital வருவதாக கூறினார்.

அவரை தடுத்த ப்ரயு,

“அப்பா, நீங்கள் இப்போ அங்கே இருப்பதுதான் முக்கியம். இங்கே ஒன்னும் பயமில்லை. நான் வேலை செய்யும் இடம்தானே. நாங்களே பார்த்துகொள்கிறோம். நீங்கள் இப்போதைக்கு யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். எல்லோரும் மண்டபத்திற்கு செல்லுங்கள்.. நான் ப்ரியாவை அனுப்பி விடுகிறேன். அவள் பவி, தாரிணியை பார்த்துக் கொள்வாள்” என்று சமாதனபடுத்தி அனுப்பி வைத்தாள்.

உடனே ப்ரியாவிற்கு பேசியவள், அவள் நிலையை சொன்னவுடன், ஏற்கனவே அவள் லீவ் எடுத்திருந்ததால் உடனே அவள் மண்டபத்திற்கு கிளம்பி விட்டாள்.

பிறகு மீண்டும் ஆதியின் எண்ணிற்கு முயற்சி செய்ய லைன் கிடைக்கவில்லை. சற்று நேரம் யோசித்தவள், அதை பற்றி பிறகு பார்க்கலாம் என்று எண்ணி, மீண்டும் வித்யாவின் அருகில் வந்தாள்.

நல்ல வலி எடுத்த பின், பின் காலை 11 மணி அளவில், ஆண் குழந்தை பிறந்தது. சுக பிரசவமே.. அதன் பிறகு தான் ப்ரயு நன்றாக மூச்சு விட்டாள்.

பிரயுவின் வீட்டில் மண்டபத்திற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் , மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்தனர். அது வரை தங்கள் அக்கா வந்து விடுவாள் .. என்று எண்ணியிருந்த பவியும், தாரிணியும் அதன் பின் அவளுக்கு போன் அடித்தனர்.

ப்ரயு போன் எடுக்க, இருவரும் ஒரே நேரத்தில் “அக்கா, ஏன் இன்னும் வரவில்லை?” என்று கேட்டனர்.

அவள் நிலமையை சொன்னதும், இருவரும் அழவே ஆரம்பித்து விட்டனர். அவர்களை ப்ரயு சமாதனபடுத்த முயற்சி தோல்வியே.. சற்று அதட்டலான குரலில்,

“பவி, தாரிணி .. இப்போ அழுகையை நிறுத்துங்கள்.. மழை பெய்வதும், மக்கள் பிறப்பதும் மகேசன் கையில் என்று தெரியாதா..? நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி அழுவீர்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.