(Reading time: 13 - 25 minutes)

13. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ப்ரயு தங்கைகளுக்கு பரிசு கொடுப்பது சம்பந்தமாக தன் அம்மாவோடு ஏற்பட்ட கருத்து மோதலால், அன்று இரவு பிரயுவிடம் பேசிய ஆதி,

“ரதிம்மா.. பவித்ரா, தாரிணிக்கு நம் சார்பாக என்ன செய்யலாம் “ என்று வினவினான்.

ப்ரயு, “அதுதான் நான் பணமாக அப்பாவிடம் கொடுத்து விட்டேனே .. வேறு என்ன செய்ய வேண்டும்?”

“இல்லடா... அது நீ சேர்த்து வைத்ததில் கொடுத்தது .. இது நான் அவர்களுக்கு மாமாவாக செய்ய வேண்டிய முறை இருக்கிறதல்லவா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“நீங்கள் செய்தால் என்ன? நான் கொடுத்தால் என்ன ? அதை பற்றி நீங்கள் ஏன் யோசிக்கீரீகள் ? இங்கே நமக்கே வித்யா பிரசவம், நீங்க வந்து போகும் செலவு எல்லாம் நிறைய இருக்கிறது.. பின்னாடி பார்க்கலாம்.. “ என்றாள்.

“அப்படி சொல்லாதடா.. வித்யா மாதிரிதானே இவர்களும்... நான் பணம் அனுப்புகிறேன். நீ என்ன வேண்டுமோ வாங்கி கொடு..”

“இருக்கட்டும் ஆதிப்பா.. அது நாம் மெதுவாக பார்த்துக் கொள்ளலாம்.. “

“சரி.. நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன்.. வித்யாவிற்கு தேவையானதை என் இடத்தில இருந்து நீதான் செய்ய வேண்டும் ரதிம்மா...” ப்ரயு ஏதோ சொல்ல வரவும் “இரு ... நான் சொல்லி முடித்து விடுகிறேன்.. நான் சொல்லாமலே நீ செய்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. இருந்தாலும் என் திருப்திக்காக இதை சொல்கிறேன்.. அண்ணன் இருந்திருந்தால் நாம் கேட்காமலே இதை செய்திருப்பார் என்று வித்யா எண்ணி விடக் கூடாது.. அதனால் தான் சொல்கிறேன்..”

“கட்டாயம் செய்கிறேன்.. இதை நீங்கள் சொல்லாமலே செய்திருப்பேன் .. நீங்கள் சொல்லி விட்டதால் இன்னும் என்னால் முடிந்த வரை நான் வித்யாவிற்கு மட்டுமல்ல, அத்தைக்கும் அந்த எண்ணம் தோன்றாதவாறு பார்த்துக் கொள்கிறேன்..” என்றாள்..

“தேங்க்ஸ் டா..கண்ணம்மா “ என்றான்.

ப்ரயு தன் தங்கைகளின் திருமண வேலைகளில் கலந்து கொண்டு, அதே சமயம் தன் நாத்தனார் வித்யாவின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவளை செக் up அழைத்து செல்வது, குழந்தை பிறந்த பின் வித்யாவிற்கு, குழந்தைக்கு  தேவையானதை வாங்கி சேர்ப்பது என்று பார்த்து பார்த்து செய்தாள்.

ஆதி மறுநாள் பிரயுவின் அப்பாவிற்கு போன் செய்து என்ன வேண்டும் என்று கேட்க, அவரும் ப்ரயு சொன்னதையே சொல்லவும், இருவருக்கும் வெளிநாட்டில் கிடைக்க கூடிய சில அழகு சாதன பொருட்கள், சில சின்ன சின்ன பொருட்களோடு இருவர் பெயரிலும் ஆளுக்கு rs.25000 கிப்டு செக் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்ப தயாரானான்..

அவன் அலுவலகத்தில் விடுமுறை கேட்ட போது எளிதாக கிடைக்க வில்லை.. வந்து ஒரு வருடம் கூட முழுதாக முடியவில்லை .. என்று ஆட்சேபம் தெரிவித்தனர். ஆதி தன் தங்கையின் நிலை, இந்த கல்யாணங்கள் எல்லாம் எடுத்து சொல்லி கேட்டதால் அரை மனதாக கொடுத்தனர். அதிலும் பத்து நாட்கள் மட்டுமே..

லீவ் மிகவும் குறைவாக இருப்பதால், சரியாக கல்யாணத்திற்கு முதல் நாள் ஊர் வந்து சேருமாறு டிக்கெட் புக் செய்திருந்தான்.

பிரயுவிடம் சொன்ன போது,

“ஏன் ஆதிப்பா , கொஞ்சம் முன்னாடி வர முடியாதா..? நீங்கள் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே “ என்றாள்.

“ஏன்.. ரதிகுட்டிக்கு இந்த ஆதிப்பாவை தேடுகிறதோ ?” என்று கேலியும், தாபமும் நிறைந்த குரலில் கேட்டான்..

பிரயுவோ  மெல்லிய குரலில் “ ஹ்ம்ம்.. “ என்றவள், “திருமணம் முடிந்த பின் அவர்கள் இருவரையும் மறுவீடு அழைக்க, கொண்டு விட என்று சரியாக இருக்கும்.. நாம் இருவரும் அதிகமாக பேசிக் கொள்ள கூட முடியாது..” என்றாள்.

தன் குரலை சரி செய்தவன் “ஹ்ம்ம்.. நீ சொல்வது சரிதான், ஆனால் இவ்வளவு தூரம் வந்து விட்டு வித்யா பிரசவ சமயத்தில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது.. ஏற்கனவே மாப்பிள்ளை.. நான் பொறுப்பில்லாமல் இருப்பது போல் பேசினார்.. இப்பொழுது கல்யாணத்திற்கு வந்து விட்டு, இதற்கு லீவ் இல்லை என்று சொன்னால் நம்மை இன்னும் மட்டமாக நினைப்பார். அதனால் தான் அட்லீஸ்ட் குழந்தை பிறந்து அதை பார்த்து விட்டு செல்லும் அந்த சமயம் வரை லீவ் எடுத்திருக்கிறேன்.. முன்னால் வந்தால் நான் இன்னும் முன்னால் கிளம்ப வேண்டும்..”

“சரிதான்.. ஆதிப்பா.. “ என்று பேசிக் கொண்டனர்.

இருவருக்கும் தெரியும் .. இப்பொழுதும் கல்யாணத்தில் மூன்று, நான்கு நாட்கள், டெலிவரியில் சில நாட்கள் போய் விடும் என்று .. என்றாலும் கடைசி இரண்டு நாட்களாவது தங்களுக்கு செலவளிக்கலாம் என்று எண்ணினார்கள்.

ஆதர்ஷ் நார்வேயிலிருந்து கிளம்புவதற்கு சரியாக முதல் நாள் , ஒஸ்லோ நகரில் மிக பெரிய பனி புயல் ஏற்பட்டது.. யாரும் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத நிலை.. பனிப் புயல் கடக்க குறைந்த பட்சம் மூன்று நாட்களிலிருந்து அதிக பட்சம் ஒரு வாரம் வரை ஆகும் என அவர்கள் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் அறிவித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.