(Reading time: 19 - 38 minutes)

'ம்ம், இப்படியான அற்புதமான நாட்களையெல்லாம் வீணடிச்சியேடி, நான் எவ்வளவு மிஸ் பண்ணிட்டேன் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தை, நீ உண்டாகியிருக்கும்போது, உன் வயிற்றை தடவி பார்த்து என் செல்லத்துக்கு இஷ்டப் பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, உனக்கு முடியாத போது என் மடியில் படுக்க வைத்து, இந்த மாதிரி எத்தனை தருணங்கள் எல்லாத்தையும் தட்டி பரிச்சுட்டியே,' அவன் சொல்லும்போதே அவள் கதறினாள்,

'நீங்க மட்டுமில்லை நானும் தான் எல்லாவற்றையும் மிஸ் பண்ணேன், உங்களை, ரொம்ப மிஸ் பண்ணேங்க,' அதைப் பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தது, பாவம் என்ன என்ன கஷ்டப் பட்டிருக்கிறாள், எதுவும் சொல்லக் கூடாது என்று, அவன். நீ போய் முகம் கழுவி விட்டு வா, நான் உனக்காக வெயிட் பண்றேன், நம்ம ரெண்டு பேரும் போய் ருபேஷ்கிட்ட சொல்லுவோம் அப்புறம் உன் வீட்டுக்கு போவோம், யாரையாவது இங்கு பார்த்துக் கொள்ள ஏற்பாடு பண்ணு,'

அவள் போனை எடுத்து,''ராகவேந்திரா ஆபிஸ் ரூமுக்கு வா,' என்று கன்னடத்தில் அவள் பேசிய அழகை பார்த்திருந்தான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

'என்னடி கன்னடதிலெலாம் பேசி  கலக்கற, உன்னை பார்த்தா பெருமையா இருக்கு, இவ்வளவு பெரிய பிசினெசை, தனியாளா ஒரு சின்னக் குழந்தையையும் வைத்துக் கொண்டு எப்பிடி கண்ணம்மா சமாளிச்ச, எனக்கு நினைக்கசேயே பிரமிப்பாய் இருக்கு, என் கண்ணம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்னேண்டி, என்னை நம்பி என்னிடம் ஓடி வந்திருக்கலாம் இல்லையா, எல்லாத்தையும் நான் சமாளிசிருப்பேனே, என்று அவளைக் கட்டிக்கொண்டு சொன்னான்,' அப்போது கதவு தட்டப் பட்டது, 'உள்ளே வா,' என்று, ஒரு கம்பீரமான குரலில் கூறினாள், அதைப் பார்த்த ருத்ரா ஆச்சர்யமாக பார்த்தான், அவனை ஓரக் கண்ணால் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள், அவனிடம் திரும்பி, கண்ணடத்தில்  'ராகவேந்தரா இந்த சார், என் கணவர், ரொம்ப நாள் கழித்து ஊரிலிருந்து வந்திருக்கிறார், நான் வீட்டுக்கு போகணும் நீ பார்த்துக் கொள், எப்பவும் போல், மூடிவிடுங்கள், காஷை எண்ணி கணக்கு எழுதி என் ரூமில் லாக்கரில் எப்பவும் போல் வைத்து விடு, உன்னுடைய சாவி இருக்கில்லையா, நாளைக்குக் கூட நான் வரமாட்டேன், நீயே பார்த்துக் கொள், சீக்கிரம் வந்து விடு, ஏனென்றால் நான் வரமாட்டேன், புரிந்ததா, இப்போது காஷில் நீ உட்கார்ந்து, ரூபேஷை இங்கு அனுப்பு,' என்று கூறி கணக்கு புக்கை உள்ளே வைத்து லாக்கேரில் இருக்கும் காஷை எடுத்து தன் பாகில் வைத்தாள்,

ரூபேஷ் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான், அவனுடைய டிசிப்ளின் பார்த்து ஆச்சர்யப் பட்டான், ஒரு பெண்ணால் தான் இது சாத்தியம், இவனைப் பார்த்தவுடன், 'ஹலோ,' என்றான்

அந்தக் குரலைக் கேட்டு 'ரூபேஷ், அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு,' என்றாள்

ரூபேஷுக்கு ஆச்சர்யம், அப்பா காலில் விழுந்தான், அப்படியே அவனை இழுத்து அனைத்துக் கொண்டான் ருத்ரா, கண்ணில் கண்ணீர், அதைக் கண்ட சித்ராவுக்கும், ரூபேஷுக்கும் கண்ணீர், ஒரு வழியாக எல்லோரும் சமாளித்துக் கொண்டனர், 'சாரி டாட், நீங்க யாருன்னே தெரியாமல் ......' என்றான் சின்னவன்

'கமான், என்ன பேசறே நீ, என் கிட்ட சாரியெல்லாம் கேட்கக் கூடாது,'

'ரூபேஷ், உன்னுடைய காஷ் எங்கே,'

'இதோ மாம்,' என்று காஷை எடுத்துக் கொடுத்தான், அதை கணக்கு பார்த்து வாங்கி தன் பாகில் வைத்துக் கொண்டாள், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான், அவள் எவ்வளவு அழகாக, வேலை பார்க்கிறாள் என்று, யாரோ கதவை தட்டினார்கள், 'உள்ளே வா,' என்று குரல் கொடுத்தாள், 'உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும், உனக்கும் ரூபேஷ்,' என்று கேட்டாள்

'மாம், இன்னிக்கும் நீ இட்லிதான் சாப்பிட போறியா, இன்னிக்கு டாடி இருக்காங்க ஸோ, நீ வேற நல்லதா சாப்பிடு,'

அவள் சிரித்துக் கொண்டே ருத்ராக்கு பிடித்ததெல்லாம் சொன்னாள், 'இது என்ன, எனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுன்னு சொல்லிட்டு, நீயே எல்லாத்தையும் ஆர்டர் பண்ணிட்டே, ஹ்ம்ம்... என்ன ரூபேஷ் இது சீட்டிங் இல்ல,' அவள் கண்ணில் கண்ணீருடன் சிரித்தாள்,

'பரவாயில்ல டாட், பாவம் அம்மா, உங்களையே இத்தனை நாள் நினைத்திருந்தாள் இல்லையா, விட்டுக் கொடுங்கள்,’ என்று, அவன் சொன்னதும் வாய் விட்டு சத்தமாக சிரித்தான், அவன் சித்ரா போனதிலிருந்து சிரிக்கவே இல்லை, இப்போதுதான் சிரிக்கிறான், மனது லேசாக இருந்தது

தன் மகனைக் கண்டு பெருமை கொண்டான், அவனை இப்படி வளர்த்த தன் மனைவியைக் கண்டு பெருமிதம் கொண்டான், தன் மகனை தன்னுடன் அனைத்துக் கொண்டான், தன் மனைவியையும் தன் அருகில் இழுத்து அனைத்துக் கொண்டான் அவள் தன் மகனை கண் காட்டினாள், அவன் விடாமல், மகனிடம் கேட்டான், 'ஏன் ரூப், உங்கம்மாவை பாரு எப்படி வெட்கப் படுகிறாள் என்று,' என்று கேட்டான் , அவனும் 'எஸ் டாட், நான் அம்மாவை எப்போதும் இருக்கமாதான் பார்த்திருக்கேன், இப்படி சிரிப்பது, வெட்கப்படுவது எல்லாம் இப்போதான் பார்க்கிறேன், தேங்க்ஸ் டாட், எங்க அம்மாவை சிரிக்க வைத்ததுக்கு’ என்று அவன் சொல்லும்போது அவர்கள் இருவர் கண்களிலும் கண்ணீர்,

அவனை இழுத்துக் கட்டிக் கொண்டு ‘இனிமேல் உன் அம்மாவை நீ இப்படித்தான் பார்ப்பாய்,' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.