(Reading time: 19 - 38 minutes)

'வன் திரும்பி தேங்க்ஸ் டாட்,' என்றான்

'தேங்க்ஸ் டு யு பிக் கை, என் மனைவியை நீ பத்திரமாய் பார்த்துக் கொண்டதுக்கு,'

‘என்ன நீங்க,’ என்று அவள், அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அதை ரூபேஷ் விசித்திரமாக பார்த்தான், அவன் பார்ப்பது புது அம்மாவை, சாப்பாடு வந்தது, ருத்ரா, அதை தன் மனைவிக்கும், மகனுக்கும் ஊட்டி விட்டான், தானும் சாப்பிட்டான், ரொம்ப சந்தோஷமாக இருந்தான், 'சித்து, தாத்தாக்கு போன் செய்து சொல்லவா,' என்று கேட்டான்

'அவள் அவனை முறைத்து பார்த்தாள், சொல்லலாம் ஆனால் உங்கள் மனைவி என்ன நினைப்பாள்,' என்று கேட்டாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவன் சிரித்துக் கொண்டே அதைப் பற்றி என்ன, 'நான் சொல்லப் போகிறேன் அவர் சந்தோஷப் படுவார், என் உண்மையான பாமிலி எனக்கு கிடைத்து விட்டது, அவர் நிச்சயம் சந்தோஷப் படுவார்,' என்றான்

அதுவும் உன் மேல் தான் அவருக்கு எவ்வளவு பாசம், நீ போனதிலிருந்து அவருக்கு மனது மிக வருத்தமாக இருந்தார் , இப்போது நீ கிடைத்து விட்டாய் என்று தெரிந்தால் அவர் மிகவும் சந்தோஷப் படுவார், நீயும் பேசணும், நாம் வீட்டுக்குப் போனவுடன் பேசலாம்,’ என்று கூறி

தன் மகனிடம் ‘உனக்கு தெரியுமா, நமக்கு நிறைய உறவுகள் இருக்கிறது, அதிலும் உனக்கு கொள்ளுத்தாத்தா இருக்கிறார், அவர் பெயர் நீலகண்டன்,'

'அதான் என் பேரும் நீலகண்டன் இல்லையா,’ என்று கேட்டான் அவன் மகன்

'ஆமாம், உன் கடைசி பெயர் அவருடைய பெயர், உன் கொள்ளு பாட்டி பெயர் சிவகாமி, உன் தாத்தா பெயர் ஷிவேஷ், பாட்டி பெயர், கற்பகம், உன் அத்தை பெயர் என்று அவன் சொல்லும்போது ,'

'ம்ம்ம், வித்யா அத்தை, என்ன நான் சொன்னது கரெக்ட் தானே, டாட்’ என்று சொன்னான்,'

'ம்ம், உங்க அம்மா சொன்னாளா, அவளுக்கு வித்யா அத்தையை ரொம்ப பிடிக்கும்,’ என்றான்

'அது ஏன் தெரியுமா டாட், வித்யா அத்தையை உங்களுக்கு ரொம்ப பிடுக்கும் இல்லையா, அதான் அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்குமாம்,' என்றான் மகன்

அவளை நிமிருந்து பார்த்தான் ருத்ரா,' 'சரி சாப்பிட்டாச்சா எல்லோரும் கிளம்பலாம்,' என்று சொன்னாள்

'எல்லோரும் கிளம்பினார்கள், வாசலில் என் கார் இருக்கு அதில் போகலாம் நீ எப்படி போவே,' என்று கேட்டான்,'

'நாங்க ஆட்டோவில் போவோம் எங்களுக்கு தெரிந்த ஆட்டோ ஆளுங்க இருக்காங்க, அவங்க கூட்டிப் போவாங்க அவங்களுக்கு நைட் சாப்பாடு ப்ரீயா கொடுப்பேன், என்னையும் இவனையும் பத்திரமாக கூட்டிக்கொண்டு  போவாங்க, இங்கே இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க, ரொம்ப ஹெல்பிங், அம்மா இறந்தப்ப எல்லாம் இவங்கதான் பார்த்துகிட்டாங்க, இவன் டெலிவரி அப்ப, அவங்களே சாப்பிட எல்லாம் கொண்டு வந்து கொடுப்பாங்க, எங்கே போகனும்னாலும் பத்திரமா, தங்க வீட்டு அக்கா தங்கைகளை எப்படி கூட்டிக்கொண்டு போவாங்களோ, அப்படி கூட்டிப் போவாங்க, ரொம்ப நல்ல மாதிரி,'

அவர்கள் காரில் ஏறியவுடன், ருத்ரா காரைக் கிளப்பினான், ‘டாட் ஐ லைக் யுவர் கார்,'என்றான் மகன் குதூகலத்துடன்

'நோ மை சன் திஸ் இஸ் அவர் கார்,' என்றான் ருத்ரா

சித்ரா, ருத்ராவைப் பார்த்து, 'நீங்க எப்போ ஊருக்கு திரும்பி போகணும்,' என்று கேட்டாள்

'ஏன், சீக்கிரம் திரும்பி போடான்னு சொல்றியா,' என்று கேட்டான் ருத்ரா

'ஐயோ, அப்படி கேக்கலே அது வரை இங்கே எங்களோட இருக்கலாமே, உங்க ஹோட்டல காலி பண்ணி விட்டு இங்கே வந்துடுறீங்களா, அதைக் கேக்கத்தான்,'

'நாம் இதை பத்தி அப்புறம் பேசலாமே,'

'ரூப், சொல்லு உன் ஸ்கூல் எப்படியிருக்கு, உனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்களா,'

'எஸ் டாட், பிரண்ட்ஸ் இருக்காங்க ஸ்கூல்ல, பட் நான் எப்பவும் சீக்கிரமே ஹோட்டலுக்கு வந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டே, என் ஹோம்வொர்க் எல்லாம் பண்ணிடுவேன் மார்னிங் எழுந்து படிச்சுடுவேன், அதனாலே ரொம்ப பிரண்ட்ஸ் கூட விளையாட முடியாது, பட், அம்மா என்னை கிளப்ல டென்னிஸ் சேர்த்து விட்டிருக்காங்க, ஸ்விம்மிங் ரெண்டு வருஷம் முன்னாடியே கத்துகிட்டேன் ஸோ, கிளப்புக்கு விளையாட போச்சே ஸ்விம்மிங்கும் பண்ணுவேன்,' என்றான் மகன் ரொம்ப குஷியாக,

ருத்ரா, சித்ராவிடம், 'ரொம்ப நல்லா வளர்த்திருக்க உன் மகனை,' என்றான் வருத்தத்துடன், அந்த ஒரு சொல்லில் அவளுக்கு அர்த்தம் புரிந்தது,

'நீங்க என்ன என்ன ஆசை படுவீங்களோ, உங்க மகனை, அத்தனையும் சேர்த்திருக்கேன், உங்களுக்கு தெரியுமா, உங்க மகன், எவ்வளவு கெட்டிக்காரனென்று, ஹோட்டலில் வரும் நிறைய பேர் இவனுக்காகவே தினமும் வருகிறார்களாம், அழகாக பேசி, கணக்காக பணத்தை வாங்கி உள்ளே வைத்து, அந்தக் கணக்கை நாங்கள் கிளம்பும்போது பொறுப்பாக என்னிடம் ஒப்படைப்பதில், அவன் அப்பா மாதிரியே கொள்ளை அழகு பார்பதற்கு ஆயிரம் கண் வேண்டும், தெரியுமா,' என்று பேசி அவனைக் குளிர்வித்தாள்,'

ரூபெஷை பெருமையாக பார்த்தான்,

'என்னடா நீ உன் அப்பா மாதிரியா,' என்று அவனைக் கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.