(Reading time: 19 - 38 minutes)

'நீ என் மனைவி இல்லையா, உனக்கு காருல வச்சு செயின் போட்டேனே அதாண்டி தாலி, நீ என் மனைவி, என் மகனை இந்த வயத்துல சுமந்தியே நீ என் மனைவி இல்லையா,' அதைக் கேட்ட அவள் கண்ணீர் விட்டாள், சொல்லுடா என்ன நடந்தது நீ ஏன் என்னை கூப்பிடவில்லை, எதுவானாலும் நான் கூட இருக்கமாட்டேனா, என் மேல் நம்பிக்கை இல்லையா அந்த அளவுக்கு?'

‘இல்லை, உங்களுக்கு தெரியாது வந்தது யாரென்று,’ என்று ஆரம்பித்து, நடந்தது எல்லாத்தையும் சொன்னாள், ‘நான் டாக்டரிடம் அம்மாவுடன் போனேன் டாக்டர் நான் ப்ரெக்னன்ட்ன்னு சொன்னவுடன் அம்மாவுக்கு இன்னொரு அட்டாக் வந்து அங்கேயே என்னிடம் சென்னைக்குப் போகாதே என்று சொன்னார்கள், உடனே  இறந்து விட்டார்கள், எங்களை ஆதரித்த அந்த ஆண்டி தான் எனக்கு இந்த வாழ்வு இந்த வீடு எல்லாத்தையும் கொடுத்து இதெல்லாம் இந்த ராஜாக்குதான் என்று கூறி, என்னிடம் கொடுத்தார்கள், எனக்கு தெரியாமலே எல்லாவற்றையும் என் பேரில் மாற்றி விட்டார்கள் அந்த ஆண்டி, சின்ன டிபன் கடையை ஹோட்டலாக மாற்றினேன், உங்கள் நினைவு தினம் என்னைக் கொன்றது, உங்களை பார்க்க வரலாமென்றால் பயம், அந்த சுரேந்தர் உங்களை ஆளை வைத்து ஏதாவது பண்ணிவிடுவானோ என்ற பயம், என் அம்மா சென்னைக்கு போகாதே என்று சொன்னதும் அந்த காரணத்துக்காகத்தான், நம் இருவருக்குமே ஒன்றுமாகக் கூடாது என்றுதான் நான் உங்களை காண்டக்ட் பண்ணலே,’

'அப்படி பண்ணி என் வாழ்க்கையை பாழாக்கிட்டேயே, நம் பிள்ளையின் குழந்தை பருவத்தை நான் அனுபவிக்காமல் பண்ணிவிட்டாயே,’ என்று வருத்தப் பட்டான்,

'இல்லை, சுரேந்தர் உங்களை ஏதாவது பண்ணிவிட்டால், என்னால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் ஏதாவது ஆனால், அதை என்னால் தாங்க முடியுமா,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

'நீ என்ன சொன்ன, உங்கள், உங்கள் குடும்பமா, நம் குடும்பம் என்று சொல்ல தோணலியா,'

'இல்லைங்க, அது என் குடும்பம், என் குடும்பத்துக்கு ஒண்ணுன்னா அதை காப்பாத்த வேண்டியது என் கடமையில்லியா,'

‘இரு தாத்தாவிடம் சொல்றேன், அப்புறம் பேசலாம்,” என்று தாத்தாவுக்கு கால் பண்ணான், ரெண்டு ரிங்குல போனை எடுத்துட்டார், என்ன தூங்கலியா தாத்தா,’ என்று கேட்டான்

‘அது எப்படி நீதான் திரும்பி கால் பண்றேன்னு சொன்னே ஏதோ அர்ஜெண்ட் வொர்க், நீ கால் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிண்டிருக்கேன், சொல்லு'

'தாத்தா குட் நியூஸ், என்ன சொல்லுங்க பார்க்கலாம்,'

'உன் சந்தோஷத்தை பார்த்தால், நம் சித்ரா கிடைச்சுட்டா போல இருக்கு, ரொம்ப நாளாச்சு கண்ணா, உன் பழைய குரலை இப்போதான் கேட்கிறேன், உன் முகத்துல இருக்கிற சந்தோஷத்தைப் பார்க்கணும் போலிருக்குடா ராஜா,’

'ஆமாம் தாத்தா, ஆனா விஷயத்தை எல்லாம் இப்ப சொல்ல முடியாது, இப்போதைக்கு அம்மா அப்பாக்கு மட்டும் சொல்லுங்கள், அவர்களை யாருக்கும் சொல்லவேண்டாமென்று, சொல்லிவிடுங்கள், இதோ பேசுங்க உங்க பேத்தியிடம்,’

'அவள் கண்ணிலிருந்து கண்ணீர், தாத்தா, என்று கதறினாள்,

'இத பாரு செல்லம் அழக் கூடாது, நான் ஒன்னும் கேக்கல, நீ கிடைச்சதே பெரிய சந்தோசம், நீ எப்படியிருக்கே கண்ணு,'

'நான் நல்லாயிருக்கேன் தாத்தா, நீங்க, பாட்டி, அத்தை, மாமா, எல்லாம் எப்படியிருக்கீங்க,'

'நல்லாயிருக்கேண்டா செல்லம், நீ இல்லாம என் ராஜா எப்படி ஒடிஞ்சு போயிட்டான் தெரியுமா, இப்பதான் அவன் குரலில பழைய சந்தோஷத்தை கேக்குறேன், ராஜாத்தி ஒரு மறுப்பும் சொல்லாமால் இந்த தாத்தா வை நீ மதிக்கிறது உண்மையா இருந்தா, என் மேல் உண்மையா பாசம் இருந்தா அவனோட கிளம்பி நாளைக்கே வா, நீ வரலேன்னா என் மேல் பாசமில்லைன்னு அர்த்தம் புரிஞ்சுதா, என் பேரன்கிட்ட போனை கொடு,'

'ராஜா, அவளைக் கூட்டிக் கொண்டு நாளைக்கே வந்துடு மத்ததை நேரிலே பேசிக்கலாம்,'

'சரி தாத்தா, ஆனா ஒன்னு, நாங்க வரச்சே ஆரத்தி கரைச்சு வையுங்க,' என்றான் சிரித்துக் கொண்டே,

'என்னடா விசேஷம், எங்களுக்குத் தெரியாம சாந்தி முஹுர்த்தம் முடுசுட்டியா, 'என்று வேட்டு சிரிப்பு ஒன்னு வெடித்தார்,

'அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுது, இன்னும் பெரிய விஷயம்,' என்று ஹஹஹ, சிரித்தான், 'சரி தாத்தா போனை வைக்கிறேன் நல்லா தூங்குங்க,'

சித்ராவுக்கு முகம் சிவந்தது, முகத்தை திருப்பிக் கொண்டாள்

'ஐயோ, தாத்தாவிடம் என்ன பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா,'

‘அது கரெக்ட்தான், ஆனா நம்ம பையோனோட நாளைக்கு போவோமே அப்பவும் இதே விவஸ்தையும், அவஸ்தையும் தான், சரி நாளைக்கு வர ரெடி தானே,'

'வேற வழி, ஆனா உங்க பாமிலி இருப்பாங்களே, அவங்க கிட்டே என்னை எப்படி அறிமுகப்படுத்துவீங்க,’

'அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நீங்க கவலைப் படாதீங்க, நீங்க வாங்க அது போதும் அதுவும் தாத்தா நம்ம பையனைப் பார்க்கனும், நம் குடும்பத்துலே எல்லோரும் பார்க்கனும்,' என்றான்

Episode # 17

Episode # 19

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.