(Reading time: 19 - 38 minutes)

'ப்படித்தான் அம்மா டெய்லி சொல்லுவாங்க டாடி, நான் லீவில் அம்மா மடியில் படுக்கும்போது, நீங்க உங்க அம்மா மடியில் அப்படித்தான் படுப்பீங்களாம், அம்மா சொல்லிட்டே இருப்பாங்க,' என்று மகன் கூற, ருத்ரா சித்ராவை திரும்பி பார்த்தான், அவள் கண்களில் தண்ணி குளமாகியது, அவளுக்கு பழைய ஞாபகம் வந்தது, வீடு எங்கே என்று கேட்டான், அவள் தங்கள் வீட்டை காண்பித்தாள், அவர்களை இறக்கிவிட்டு, காரை பார்க் பண்ண போனான், அங்கு ஆடோகாரர்கள் அவனுக்கு ஹெல்ப் செய்தார்கள், ரூபேஷ் எல்லோரிடமும், 'எங்க டாடி ஊரிலிருந்து வந்து விட்டார்,'  என்று கன்னடத்தில் சொல்லிக் கொண்டிருந்தான், இவன் வந்ததும், 'டாடி மீட், ' என்று ஒவ்வொரு பேரையும் சொல்லி அறிமுகப் படுத்தினான், ருத்ராவும் ஒவ்வொருவருக்கும் கை குலுக்கி ஹலோ சொன்னான், அங்கிருந்த எல்லா ஆட்டோகாரர்களுக்கும் ஒரே சந்தோஷம், கன்னடத்தில் சொன்னார்கள்,’ இப்பதானே தெரியுது அப்பா மாதிரியே பையன் என்று,’ அவர்கள் பேசிகொண்டிருந்தார்கள், அதை பெருமையுடன் அப்பாவுக்கு தமிழில் மொழி பெயர்த்து சொன்னான் மகன், அவன் சிரித்துக் கொண்டே மகனின் தோளில் கை போட்டுக் கொண்டு உள்ளே போனான்,' வாங்க டாடி இதான் எங்க வீடு ,' என்றான்,

'நம்ம வீடு, சொல்லணும் டாடிகிட்ட, மத்தவங்க கிட்டதான் எங்க வீடு சொல்லணும் புரிந்ததா,' என்று அவனை திருத்தினாள் சித்ரா,

'இந்த அப்பாவே ஸ்ட்ரேஞ்சர்தானே அவனுக்கு, இப்பதானே சொல்லியிருக்கே இனிமேதான் அவன் புரிஞ்சுப்பான்,' என்று குத்தினான்  

அவன் மனதில் இருக்கும் கோவத்தை, இப்படி ஏதாவது சொல்லி தீர்த்துப்பான்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

ரூபேஷ் தன் ரூமுக்குப் போய் குளித்து விட்டு, டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தான், அதே மாதிரி சித்ராவும் குளித்து விட்டு வந்தாள், ருத்ராவையும் கேட்டாள், ‘நீங்கள் குளிக்கனுமா?’ என்று, அதற்கு அவன், அவளைப் பார்த்து கண்ணடித்து நிறைய தடவை குளிக்கணும், அதனால் அப்புறம் குளிக்கிறேன் என்றான், அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள், மகனுக்கும், ருத்ராவுக்கும் பால் காய்ச்ச சமையல் ரூமுக்கு போனாள், அந்த நேரம் அவன் உள்ளே வந்தான், ‘என்ன இந்த மாதிரி முகம் சிவக்க என்னை கிளப்பிவிட்டு, தனியா விட்டு வரியா’, என்று அவள் பின்னே போய் அவளைக் கட்டிக் கொண்டான்,

அவள் தன்னை இழந்துக் கொண்டிருந்தாள், ‘ரூப் இருக்கான், வந்திடுவான்,’

‘ வரட்டும் பரவாயில்லை, என்னால் உன்னை விட முடியாது,’ என்று அவளைக் கொஞ்சினான்,

‘ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க ரெண்டு பேருக்கும் பால் கொண்டு வரேன்,’ என்றாள் அவள்,

கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து அவள் ரூமிற்கு போனான்,அங்கே பாத்ரூமிற்குள் போய் குளித்தான் தன் பாகிலிருந்து டவல், லுங்கி எடுத்து வைத்திருந்தான், குளித்து மாற்றிக் கொண்டு வெளியே வந்தான், அவனை அந்த உடுப்பில் பார்த்த சித்ரா அவனை ஏதோ முதல் முறையாக பார்க்கிற மாதிரி பார்த்தாள், அவள் உடம்பு நடுங்கியது, அவனை கட்டிக் கொள்ள ஆவல் தூண்டியது, அவளுக்கு பொறுமை குறைந்துகொண்டே போனது, அவளைக் கட்டுப் படுத்திக் கொண்டாள், அவன் அவளை பார்த்துக் கொண்டே மகனின் பக்கத்தில் உட்கார்ந்தான் 'தினம் இப்படித்தான், படுக்கப் போகும்போது, குளித்துவிட்டு படுப்பாயா,' என்று கேட்டான் ருத்ரா,

'எஸ் டாடி, நானும் அம்மாவும் ஒரே நேரத்தில் குளித்துவிட்டு, ஒரே நேரத்தில் வெளியே வருவோம்,’

அவனுக்கு சித்ராவின் மேல் கொஞ்சம் பொறாமையாக இருந்தது, எவ்வளவு அருமையா, தனியாக இருந்து இவ்வளவு நல்லா வளர்த்திருக்கா, அவள் எவ்வளவு என் பையனுடன் ஒவ்வொரு நிமிடமும் என்ஜாய் பண்ணியிருக்கா, என்னை ஒதுக்கிட்டாளே, என்று இருந்தது, அங்கே வந்த சித்ரா அவன் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்டாள்,

'ரூப் கண்ணா கோ டு பெட், டைம் ஆயிடுத்து பார்,'

'அம்மா டாடி இருக்கார், கொஞ்ச நேரம் கழிச்சு போறேனே,'

'இல்லை, டாடி நாளைக்கு இங்குதான் இருப்பார், நீ போய் படு,'

'குட் நைட் டாடி, குட் நைட் மாம்,'

'குட் நைட், ரூப்,' என்று இருவரும் சொன்னார்கள்,சிரித்துக் கொண்டே தன் ரூமுக்குப் போனான்

'நீங்க, வாங்க ரூமுல படுங்க,' என்று அவனைக் கூப்பிட்டாள், 'நாம நாளைக்கு பேசலாம், நீங்க படுங்க,' என்று அவள் தனக்கு ஒரு பெட் ஷீட்டும், ஒரு தலைகானியையும், எடுத்துக் கொண்டாள், அவன், அவள் கையைப் பிடித்து எங்கே ஓடுற, இங்கே வா, நான் என்ன உனக்கு புதுசா, ஏன் இப்படியெல்லாம் பண்றே, இங்கேயே என்னோடு படு, உன்னோடு நான் பேசவேண்டும்,’ என்று அவளை இழுத்து தன்னோடு அணைத்தான், அவள் உடம்பை தழுவினான்,

அவள் தன்னை மறந்தாள், அவனுடன் ஒட்டினாள், தன்னை இழந்தாள் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள், ‘ தப்பு பண்ணிட்டீங்க, உங்க மனைவிக்கு துரோகம் பண்ணலாமா,'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.