மது அமர்ந்தவுடன் டிரைவரிடம் ஏதோ கன்னடத்தில் சொல்லியவன் அவளிடம் திரும்பி புன்னகைத்த படி இயல்பாக பேச தொடங்கினான்.
கிட்டத்தட்ட கார் கிளம்பி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஏதோ காட்டிற்குள் செல்வதை போல இருக்கவும் "கிரண் இன்னும் நாம சிட்டிக்குள்ள போகவே இல்லையே " என்று கேட்க ,
"ஹ்ம்ம் அது இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் " என்றான் கிரண்.
"என்னது ஒரு மணி நேரமா " -மது
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
"ஏன் உனக்கு வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம் செர்துகொள்ளட்டுமா, ரெண்டு மணி நேரம் ஒகே வா ? "-என்று விஷம புன்னகையுடன் கேட்க , மதுவிற்கு இப்போது பயத்தில் வயிற்றில் இருந்து ஏதோ ஒரு உருண்டைவந்து தொண்டையை அடைத்தது போல பேச முடியாமல் அதிர்ந்து போனாள்.
"என்ன... என்ன ... சொல்ற கிரண். ஜோக் தான " -என்று கடைசி துளி நம்பிக்கையை திரட்டி அவனிடம் கேட்க, இப்போது அவனோ டிரைவரிடம் ஏதோ கன்னடத்தில் கூற இருவரும் சேர்ந்து பெருங்குரலெடுத்து சிரித்தனர்.
"ஜோக்கா உன்கிட்டா நான் ஏன் ஜோக் சொல்லணும். நீ என்ன என் பிரெண்டா " என்று நக்கலாக கேட்கவும் மதுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
"ப்ளீஸ் கிரண் எனக்கு பயமா இருக்கு நீ நார்மலா பேசு." என்று சொன்ன மதுவின் கண்கள் குளம் கட்டி உடையட்டுமா என்று நின்றன.
"உன் கிட்ட பிரெண்ட்லியா பேசவா இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை என் கார்ல ஏத்துனேன். நீ புத்திசாலின்னு நெனச்சேன். ஆனா இவ்வளவு முட்டாளா இருக்கியே. அந்த திவ்யா என்னவோ பெரிய இவ மாதிரி உன்கிட்ட பேசவே விட மாட்டேங்கிறா. நீ பெரிய கிளியோபாட்ராவா ? என்னை எப்படி அவமானபடுத்துன. அதுக்கு நான் பலி வாங்க வேண்டாமா? " என்றவன் அவனின் இடக்கரத்தால் அவளின் கன்னங்களை பிடித்து அழுத்தி அவளை அருகே இழுக்க, அவனின் இந்த எதிர்பாராத செயலில் ஒரு கணம் சிலையென நின்றவள் அடுத்து அவன் கூறிய வார்த்தைகளில் தன் பலம் முழுதும் திரட்டி அவனை பிடித்து தள்ளினாள்.
"எவ்வளவு கேவலமான வார்த்தையை சொன்ன நாயே , உன் எண்ணம் இந்த ஜன்மம் முழுதும் நீ முயன்றாலும் உன்னால என்னை தொட முடியாது." என்று அவனின் முகத்தில் தன்னுடைய விரல் நகங்களை கொண்டு கீறினாள்.
அவளின் இந்த தாக்குதலில் அடிப்பட்ட வேங்கையாக அவளின் மேல் பாய்ந்து அவளின் துப்பட்டாவை இழுத்தவன், அவளை இழுத்து அணைக்க முயல அவனிடமிருந்து தப்ப போராடியவள் கைகளில் ஏதோ தட்டுபட்டது. அதை எடுத்து அவன் மீது அடிக்க முயல, அவன் சற்றே விலகியதில் அந்த பீர் பாட்டில் டிரைவரின் மண்டையை பிளக்க, டிரைவர் மயங்கி சரிந்தான். கார் கண்ட்ரோல் இல்லாமல் ரோட்டின் இருபுறமும் கண்டபடி ஓட கையில் இருந்த உடைந்த பாட்டிலை கொண்டு கிரணின் மார்பில் குத்தினாள்.
"ஏய் உன்னை விட மாட்டேன் " என்று மீண்டும் அவளை இழுத்து அணைக்க முயல அதற்குள் கார் இடதுபுறமாக திரும்பி அங்கே இருந்த புதரில் நுழைந்து ஓட திறந்த கதவுகளின் வழியாக கீழே குதித்தாள்.
தொடரும்
{kunena_discuss:945}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.