(Reading time: 14 - 27 minutes)

வளுடன் வேலை பார்ப்பவன்தான் மறுமுனையில் இருப்பவன். இவளது எண்ணங்களும் அவனது எண்ணங்களும் எப்போதுமே நேரெதிர். அதனால் தானோ என்னவோ அவள் மீது ஒரு ஈர்ப்பு பிறந்தது அவனுக்கு. புன்னகைத்து புன்னகைத்தே மெதுமெதுவாக அவளுக்குள்ளும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினான் அவன். அவளது வீட்டில் அவள் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்.

'சொல்லி விடவேண்டும். அப்பாவிடமும் சீக்கிரமே சொல்லி விட வேண்டும்' நினைத்துக்கொண்டாள் அபர்ணா.

'சரி என்ன டிரஸ் போட்டிருக்கே???'  கேட்டது எதிர்முனை.

'அ... அது... புடவைதான் ஏன்???'

'ஹேய்... சரியான பட்டிக்காடு மாதிரி எப்போ பாரு புடவை. ட்ரைன்லே போகும் போதாவது  ஜீன்ஸ் மாதிரி ஏதாவது போடலாம் இல்ல. மேலே பர்த்திலே ஏறணும்ன்னா என்ன செய்வே???'

அவள் முகம் சட்டென மாற்றம் கொண்டது. 'இல் இல்லை எனக்கு இது.. இது... சௌகரியமாதான் இருக்கு.. நான் லோயர் பர்த்திலே தான் படுக்க போறேன். ' அவள் குரல் தடுமாறியது. அவள் அணியும் உடைகள் அவனுக்கு ஏனோ பிடிப்பதே இல்லை தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அங்கே இருந்த எல்லாருமே அவளையே தான் பார்த்திருந்தனர். மறுமுனையிலிருந்து பதில் வராமல் போக...

'நான் கொஞ்ச நாளிலே என்னை மாத்திக்கறேன். வேறே மாதிரி டிரஸ் பண்ண ட்ரை பண்றேன்...' தயக்கம் நிறைந்த குரலில் சொன்னாள் அபர்ணா.

'யாராம் அவன்??? மிரட்டுகிறானா அவளை??? ராஸ்கல்...' கொஞ்சமாக வாடிப்போன அவளது  முகம் பார்க்க பார்க்க மேலே இருந்தவனுக்கு  சுறுசுறுவென கோபம் ஏறியது.

'சரி பத்திரமாவா. வைக்கிறேன்...' அழைப்பை துண்டித்துவிட்டு தோழிகள் மூவரையும் பார்த்தாள் அபர்ணா.

'ஏன் அபர்ணா.. அவனுக்கு இப்படி பயப்படறே.??? கேட்டாள் அவள் தோழி ப்ரியா...

'பயப்படலாம் இல்லை...' மெதுவாக எழுந்தது அவள் குரல்.

'அபர்ணா.. கோபப்படாதே. நான் சொல்றதை கொஞ்சம் ரைட்டா புரிஞ்சுக்கோ. இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ளே நீ எதுக்கு இவ்வளவு அடங்கி போகணும்??? எங்ககிட்டே சொன்னே இல்ல.... 'எனக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்றேன். இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை??? அப்படின்னு.... அதையே  அவன் கிட்டே கேட்க வேண்டியது தானே???

இடம் வலமாக தலை அசைத்தாள் அவள் 'அதெல்லாம் முடியாது...'

'ஏன் முடியாது.???' அவசரமாக கேட்டாள் இன்னொரு தோழி.

'ஏன்னா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஹிம். நான் அவர் என்ன சொன்னாலும் கண்டிப்பா கேட்டுப்பேன்.... அவருக்காக எதை வேணும்னாலும் விட்டுக்கொடுக்கலாம். விட்டுக்கொடுப்பேன் ' விரல்களை பார்த்தபடியே சொன்னாள் அவள்.

'நான்சென்ஸ். காதலிக்கறது என்ன...  கல்யாணம் ஆனா கூட உன்னோட சுயத்தை நீ விட்டுகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் முழுசா நம்பாதே. டிபெண்ட் பண்ணாதே. நீ படிச்ச பொண்ணு, வேலை பார்க்கிற பொண்ணு அப்புறம் என்ன???'

'இங்கே பாரு ப்ரியா..' என்றாள் தோழியை பார்த்து 'அவர் ரொம்ப நல்லவர். நான் ஒண்ணும் கண்ணை மூடிட்டு முடிவு எடுக்கலை. அவர் கிட்டே எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்கும் நான் தான் எல்லாமே. வேறே எந்த பொண்ணையும் அவர் நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டார் தெரியுமா???' பட பட வென தன்னவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தாள் அபர்ணா.

ரயில் தடதடத்து விரைந்துக்கொண்டிருந்தது மேல் பர்த்தில் இருந்தவனின் இதயத்தை போல!!!!

''எனக்கும் தெரியும்பா. அவன் எனக்கும் நல்ல ஃப்ரெண்ட். அவன் ரொம்ப நல்லவன். ஆனால் அவன் கிட்டே இருக்கிற ஒரே மைனஸ்..... அவன் தான் நினைச்சதுதான் எப்பவும் நடக்கணும்ன்னு நினைக்கிற டைப்' தெளிவாக சொன்னாள் ப்ரியா.

'சரி.. அவர் நினைச்சதே நடக்கட்டுமே இப்போ என்ன???' அழுத்தமாக  சொன்னாள் அபர்ணா.

'இல்லடா உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை. நீ நினைக்கற மாதிரியே அவனும்  நினைக்கணும் அப்போதான் லைஃப் நல்லா இருக்கும். இப்படி கண்மூடித்தனமா லவ் பண்ணாதே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அதுதான் என் ஆசையும். பட் ஏதோ ஒரு சூழ்நிலை இந்த கல்யாணம் நடக்கலைன்னா அப்புறம் என்ன செய்வே???

'ப்ரியா...' தோழியை பார்த்து எகிறியது அபர்ணாவின் குரல் 'வாயை மூடு. ஏதாவது உளறாதே...'

'ப்ளீஸ்... ப்ளீஸ்... அபர்ணா... நான் அவன் மேலே கண் மூடித்தனமா பாசம் வைக்காதேன்னுதான் சொல்ல வந்தேன் அவ்வளவுதான். வேறே எதுவும் இல்லை ..' மெல்ல இறங்கியது தோழியின் குரல்.

பதில் பேசவில்லை அபர்ணா.

'என் வாழ்க்கையிலே நான் இது மாதிரி அனுபவ பட்டிருக்கேன் அபர்ணா. அப்புறம் அதை விட்டு வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன். கல்யாணம் நடந்திட்டா கூட ஓகே. பட் அதுவரைக்கும் என்ன வேணும்னாலும் நடக்கலாம்ங்கிறதுதான் உண்மை. ஒரு வேளை உனக்கும் வேறே யாருக்குமோ முடிச்சு போட்டிருந்தா???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.