(Reading time: 14 - 27 minutes)

'ப்படி எல்லாம் எதுவும் நடக்காது ..' சட்டென சொல்லிவிட்டு  அபர்ணா நிமிர அங்கே மேலே அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த விழிகளை சந்தித்தன அவள் கண்கள். துறுதுறுவென தவித்தன அவன் கண்கள்.

'யார்??? யாரது???' உடல் மொத்தமும் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது அவளுக்கு.

அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான கண்களை போலவே தோன்றியது. போர்வையினுள்ளே மெல்ல மெல்ல புன்னகையில் விரிந்தன அவனது இதழ்கள். அது அவன் கண்களிலும் பிரதிபலித்திருக்க வேண்டுமோ??? சட்டென கண்களை தாழத்திக்கொண்டாள் அவள். '

'யாரிவன்????' அவனை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு. தோழிகள் மூவரும் அவளையே பார்த்திருக்க சமாளித்துக்கொண்டு சொன்னாள் அபர்ணா

'அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அப்படியே... அப்...ப....டியே  இந்.. இந்....த..... க...ல்யா....ணம் ந.. நடக்..கலைன்....னாலும்... ' நிறுத்திவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் அவள். சில நொடிகள் கழித்து அவளே தொடர்ந்தாள்......

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

'கல்யாணம் நடக்கலைன்னாலும்.... நான் வேறே யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். வாழ்கையிலே காதல்ங்கிறது ஒரு தடவை தான் வரும். ஒரு தடவை தான் வரணும். அது எனக்கு வந்தாச்சு... என்ன ஆனாலும் அது இனிமே மாறாது அவ்வளவுதான்.'  நிரம்பி விட்டிருந்தன அவள் விழிகள்.

'கண்ணீரா. அவள் கண்களில் கண்ணீரா???' பதறி துடித்தது அவன் இதயம்.

அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை காட்டிலும்... தனது காதல் நிறைவேறுமா என்ற தவிப்பை காட்டிலும்.... அவள் கண்ணீரே அவனுக்கு பெரிதாக பட்டது. அப்படியே இறங்கி சென்று அவளது கண்களை துடைத்து விட தவித்தன அவன் விரல்கள். அதற்குள் அவள் அருகில் வந்து அமர்ந்து விட்டிருந்தாள் ப்ரியா..

'ஹேய்... லூசு... நான் ஏதோ எனக்கு நடந்ததை வெச்சு பேசிட்டேன். சாரிடா. எனக்கு நடந்ததே உனக்கும் நடக்குமா என்ன??? உனக்கு எல்லாம் சரியா நடக்கும். கூல் பேபி.. அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் கையை அழுத்திக்கொடுத்தாள். மற்ற தோழிகளும் அவள் அருகில் வந்து அமர்ந்து அவளை சமாதன படுத்த முயன்றனர்.

'சரி.... போங்க.. எல்லாரும் போய்... படுங்க போங்க...' யாரையும் நிமிர்ந்துக்கூட பார்க்காமல் சொன்னாள் அபர்ணா.

'சாரிடா..' என்றாள் ப்ரியா மறுபடியும்.  'ரொம்ப மூட் அவுட் பண்ணிட்டேனா???'

'அதெல்லாம் ஒண்ணுமில்லை போடி...' சின்ன புன்னகை ஓட ஆரம்பித்தது அவள் இதழ்களில். அவனிடம் நிம்மதியான சுவாசம்.

சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து விட்டு, எல்லாரும் படுத்துவிட காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள் அபர்ணா.

காதில் அந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்க ஏதோ ஒரு உந்துதலில் அவள் நிமிர, மறுபடியும் நான்கு விழிகளும் உரசிக்கொள்ள, அவள் இதயம் படபடக்க அவள் காதில் ஒலித்தன அந்த வரிகள்

'எனைத்தான் அன்பே மறந்தாயோ???

மறப்பேன் என்றே நினைத்தாயோ???

'என்னையே தந்தேன் உனக்காக......

'ஜென்மமே கொண்டேன் அதற்காக.........'

ப்ரியா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் கொஞ்சம் ஆழமாக பதிந்திருந்தன. 'திருமணம் என்ற ஒன்று நிகழும் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் தானே??? ஒரு வேளை அவளுக்கும் எனக்கும் முடிச்சு போடப்பட்டிருந்தால்???

தொடரும்......

Episode # 02

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.