(Reading time: 19 - 38 minutes)

" ங்க அண்ணனுக்கு என்னை பிடிக்கும்னு ஊருக்கே தெரியும்... உனக்கு இப்பதானே தெரிஞ்சிருக்கு... அதான் சொன்னேன்... சரி பார்ட்டில இருந்து வந்ததும் அத்தை மாமாக்கிட்ட பால் குடிக்கிறீங்களான்னு கேட்டேன்.. அப்புறம் குடிக்கிறேன்னு சொன்னாங்க... நான் அவங்களுக்கு பால் கொடுத்துவிட்டு வரேன்..." என்று எழுந்தாள்..

"அண்ணி நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்... அப்போ அண்ணனுக்கு உங்களைப் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா..??"

"ஒரு சின்ன வயசு ப்ரண்டா உங்க அண்ணனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்... அதை தான் சொன்னேன்... அப்புறம் நீ சொன்ன விஷயத்தையே உனக்கு திரும்பி சொல்றேன்... பிருத்வி மனசுல கோபம் இருக்காதுன்னா... அது வரூன் விஷயத்துக்கும் பொருந்தும்... அதனால நீ பயப்பட வேண்டாம்... சரி உனக்கும் பால் எடுத்துட்டு வரேன்.." என்று அங்கிருந்து கிளம்பினாள்..

"அண்ணி சொல்றதை பார்த்தா ஒரு ப்ரண்டா மட்டும் அண்ணனுக்கு இவங்களை பிடிக்கும்னு இவங்க சொல்றதை நம்ப முடியலையே... இதுல வேற ஏதோ இருக்கு... ஒருவேளை அண்ணன் அன்னைக்கு நைட் போதையில ஏதாவது உளரியிருக்குமோ... அதை தான் அண்ணி அப்படி சொல்றாங்களா..?? எப்படியோ சீக்கிரம் அவங்க ப்ராப்ளம் சரியானா சரிதான்.." என்று நினைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள் பிரணதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவள் அறைக்குச் சென்ற உடனேயே வரூனுக்கு சேட் மூலமா எல்லா விஷயத்தையும் கூறி அவனை யுக்தா சந்திக்க விரும்புவதாக கூறினாள் பிரணதி... அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட வரூன் அவர்களை மறுநாள் மாலை சந்திப்பதாக கூறினான்...

வரூன் கூறியது போலவே அவர்களை சந்திப்பதற்கு முன்பே வந்துவிட்டான்... அதன்பிறகு யுக்தாவும் பிரணதியும் வந்தார்கள்... பிரணதியை பார்த்ததும் கேளிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் வரூன்... " நாங்க பேசிக்கிட்டு இருந்தப்ப நீ நடுவில் வந்து டிஸ்டர்ப் பண்ண போதே நினைச்சேன்... நீ மாட்டிப்ப என்னோட வேலையை ஈஸி ஆக்கிடுவ..." என்று கிண்டல் செய்தான்.

" நான் அம்மா கூப்பிட சொன்னாங்க... அதனால தான் அங்க வந்தேன்... அண்ணி ரொம்ப ஷார்ப் அதான் எல்லாம் கண்டுப்பிடிச்சிட்டாங்க... நானா ஒன்னும் மாட்டிக்கல... என்று கூறினாள்.

பின் யுக்தாவை பார்த்த வரூன்... "ஹாய் யுக்தா... இப்போ நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சா..." என்றான்.

"ம்ம் நீங்க யாருன்னும் தெரிஞ்சுது... நீங்க சொன்ன நம்ம ரெண்டுபேர் நிலைமையும் ஒன்னு தான் என்பதற்கான அர்த்தமும் புரிஞ்சுது... சப்னா விஷயத்துல என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது... இருந்தாலும் நீங்க அப்படி செஞ்சிருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்..."

"தேங்ஸ் யுக்தா... உன் மேல பிருத்வி கோபமா இருந்தாலும் நீ எங்களுக்கு ஹெல்ப் பண்றன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு... என்னடா நீ வா போன்னு பேசறானேன்னு நினைக்காத... நீ பிருத்வியோட வைஃப் எனக்கு தங்கை மாதிரி..."

"கேக்க சந்தோஷமா இருக்கு... எனக்கு ஒரு சிஸ்டர் மட்டும் தான்... எங்க ரிலேடிவ்ஸ் சைட்லயும் அண்ணன் முறையில யாரும் இல்லை... நானும் உங்களை அண்ணனா நினைக்கிறேன்.."

"உன்னோட சிஸ்டர்னா கவி தானே... பிரணா சொல்லியிருக்கா.."

"என்னைப்பத்தி எல்லாம் சொல்லிட்டாளா..?? சரி இந்த லவ்வை உங்க வீட்ல அக்சப்ட் பண்ணிப்பாங்களா..??"

"கண்டிப்பா... அம்மாக்கு பிருத்விக்கும் எனக்கும் சண்டைனு தெரியும்... நான் வேணா பிருத்விக்கிட்ட பேசவான்னு சொல்வாங்க... நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன்... அவங்களுக்கு பிருத்வி மேல கோபமெல்லாம் இல்ல...

என்ன இருந்தாலும் சப்னா ஒரு பொண்ணு அவளுக்கு அப்படி நடந்திடவே பிருத்வி உன்னை தப்பா நினைச்சிட்டான்... அவன் உன்னை புரிஞ்சிப்பான்னு சொல்வாங்க... பிருத்வி தங்கையை தான் நான் லவ் பண்றதா சொன்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க... அப்பாக்கும் செந்தில் அங்கிள் மேல மரியாதை இருக்கு... சோ பிரச்சனையில்லை..."

"அப்போ சரி... நேரம் வரும் போது நான் உங்க விஷயமா அத்தை மாமாக் கிட்ட பேசறேன்..." என்று யுக்தா சொல்லும் போது பிரணதியும் வரூனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... பிரணதி வெட்கத்தில் கண்களை தாழ்த்திக் கொண்டாள்... அதற்குள் பிரணதிக்கு போன் வந்தது... முக்கியமான கால் என்பதால் இருவரிடமும் சொல்லிவிட்டு தள்ளி சென்று பேசினாள்...

பிறகு தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பரிசுப் பொருளை எடுத்து... " யுக்தா இது உங்க மேரேஜ்க்குனா கிஃப்ட்... உங்க ரெண்டுப்பேருக்கும் ஒன்னா கொடுக்கனும்... ஆனா அது எப்போ நடக்குமோ... அதான் உன்கிட்ட தரேன்" என்று கொடுத்தான் வரூன்...

அதை வாங்கிக் கொண்ட யுக்தா... " கவலைப்படாதீங்க வரூன்... உங்க கல்யாணத்துக்குள்ள நீங்களும் பிருத்வியும் திரும்ப பழைய மாதிரி ஆகிடுவீங்க..." என்று ஆறுதல் கூறினாள்...

" உன்னோட நிலைமையும் அப்படித்தான் யுக்தா... ஆனா நீ எனக்கு ஆறுதல் சொல்ற... ஆனா ஒன்னு சொல்றேன் யுக்தா... அந்த சப்னா பிருத்விக்கு ஏத்தவளே இல்ல... உங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் சரி... நீ என்னப் செஞ்சிருந்தாலும் சரி... நீ பிருத்வியை கல்யாணம் செஞ்சுக்கிட்டது எனக்கு சந்தோஷமா இருக்கு... நான் மட்டும் இங்க இருந்திருந்தா என்னவா இருந்தாலும் உங்க மேரேஜை இப்படி சிம்பிளா நடத்தவே விட்டுருக்க மாட்டேன்... அப்படியே கல்யாணம் அப்படி நடந்திருந்தாலும் ஒரு கிராண்ட் ரிசப்ஷனாவது வச்சிருப்பேன்..."

"சரி விடுங்க... எங்களுக்கும் சேர்த்து உங்க ரிசப்ஷனை கிராண்டா வச்சிடலாம்... கவலைப்படாதீங்க..." என்று கூறி சிரித்தாள்.

இப்படி அவள் வரூனுடன் சிரித்துப் பேசியதை தற்செயலாக ஒருவரை பார்க்க வந்த பிருத்வி பார்த்தான்... அதுவரையிலும் பிரணதி அங்கு வரவில்லை... போன் பேச சென்ற பிரணதி இவன் பார்வையிலும் படவில்லை...

அவர்கள் இருவரை மட்டும் பார்த்த பிருத்வி... இவர்கள் சந்தித்தது தற்செயலா..?? இல்லை திட்டமிட்டு சந்தித்தார்களா..?? என்று குழம்பினான்... இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள் திட்டமிட்டு சந்தித்தது போல் தான் இருந்தது...

அவர்களிடம் செல்லலாமா என்று அவன் யோசித்த போது அவன் பார்க்க வந்த நபர் காத்திருப்பதாக அவனது போனுக்கு அழைப்பு வந்தது... சில நொடிகள் அவர்கள் இருவரையும் நின்று பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்... அந்த பார்வையில் தெரிந்தது கோபமா..?? பொறாமையா..?? இல்லை இரண்டுமா..??

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.