(Reading time: 19 - 38 minutes)

"தான் சொன்னேனே அண்ணி... வரூனை ரிஜக்ட் பண்ண எந்த ரீஸனும் இல்ல... ஆனா இது சரி வராது அண்ணி.... விடுங்க..."

"அப்போ உனக்கு கல்யாணம் செய்ய வீட்டில் மாப்பிள்ளை பார்த்தா ஒத்துப்பியா பிரணதி..."

"அண்ணி.." என்று அதிர்ச்சியாக பார்த்தாள்...

"அப்போ நீ வருனை லவ் பண்ற அப்படித்தானே... " என்று யுக்தா சொன்னதும் தலை கவிழ்ந்துக் கொண்டாள் பிரணதி...

"பிரணதி என்னோட அனுபவத்தை வைத்து ஒரு விஷயம் சொல்லட்டுமா... காதல் மனசுக்குள்ள வந்ததுக்குப் பிறகு அதை மறைத்து வைத்துக் கொள்வதிலேயோ... அதை நேரம் கடந்து சொல்வதிலேயோ எந்தப் பிரயோஜனமுமில்லை... வரூன் அதை உன்கிட்ட சொல்லாததுக்கு காரணம் உன்னோட படிப்பும் வயசும்... ஆனா  ஒரு டிகிரி முடிக்கவும் நம்ம வீட்டில் கல்யாணம் செஞ்சு வைக்க நினைப்பாங்க... அப்போ நீ உன் லைஃபை முடிவெடுக்கும் வயசு வந்துடுச்சு...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இப்பவே வரூன் இதை உன்கிட்ட சொன்ன காரணம் அவங்கம்மா தான்... நாளைக்கு அவங்க அம்மாக்காக வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க வரூன் ஒத்துக்கிட்டா அப்போ என்ன செய்வ..?? மனசுக்குள்ளேயே அந்த ஆசையை மறைச்சு வச்சுக்கிட்டு அம்மா அப்பா சொல்ற பையனை கல்யாணம் செஞ்சுப்பியா...?? அது ரொம்ப கஷ்டம் பிரணதி...

உங்க அண்ணாவை தவிர எந்தப் பிரச்சனையும் இந்த லவ்ல இல்லைன்னா... அதை ஏன் நிராகரிக்கனும்... உன் மேல உங்க அண்ணாவுக்கு அன்பு இருக்குல்ல... அப்போ உங்க அண்ணன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டாரா..??"

"அப்படி நடக்குமா அண்ணி.. அப்படி நடந்தா நான் ரொம்ப லக்கி அண்ணி..."

"நேரம் வரட்டும் அத்தை மாமாக் கிட்ட நானே பேசறேன்... எல்லாரும் ஒத்துக்கிட்டா உங்க அண்ணாவும் ஒத்துப்பாரு.. இதுல இன்னொரு நல்லதும் இருக்கு... உன்னோட கல்யாணத்தால திரும்பவும் வரூனும் பிருத்வியும் ப்ரண்டா ஆவாங்கல்ல..."

"ஆமாண்ணி... இதை நான் யோசிக்கவேயில்ல... ஆனா எங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி உங்க மேல அண்ணன் கோவப்படப் போகுது.."

"அதை அப்போ பார்த்துக்கலாம்...  ஆமாம் என்ன சொன்ன வரூனுக்கும் உனக்கும் மேரேஜ் ஆனா நீ லக்கியா.. நீ மட்டும் லக்கி இல்ல... வரூனும் தான்...

உண்மையிலேயே சப்னா விஷயத்தில் தப்பு செஞ்சது வரூனா சப்னாவான்னு யாருக்கும் தெரியாது... உங்க அண்ணா வந்து வரூன் தான் தப்பு செஞ்சதுன்னு சொன்னாலும் நீ வரூனை நம்பறப் பார்த்தீயா... ஒரு உறவு ஆரம்பிக்கறதே நம்பிக்கையில் தான்... அந்த விஷயத்தில் வரூன் அதிர்ஷ்டசாலி..." என்று யுக்தா சொல்லும் போது அவள் குரல் இறங்கியிருந்தது... ஒரு எமோஷனோடு அதை சொல்லியிருந்தாள்... அதை உணர்ந்த பிரணதி யுக்தாவின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள்...

பின் இயல்பு நிலைக்கு வந்த யுக்தா... "பிரணதி இதை சொல்றதுக்கான தகுதி எனக்கு கிடயாது... இருந்தாலும் இந்த வீட்டு மருமகளா இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு... நான் அத்தை மாமா கிட்ட உங்க மேரேஜ் பத்தி பேசற வரைக்கும்... நீங்க லிமிட்டோட பழகனும்..." என்றாள்.

அதற்கு பிரணதியோ... "என்ன அண்ணி இப்படி பேசறீங்க... நான் லிமிட்டோட தான் வரூன் கிட்ட பழகுவேன்... அண்ணி முடிஞ்சுப் போனதை பத்தி ஏ அண்ணி பேசறீங்க... அண்ணா கோபமெல்லாம் சீக்கிரம் சரியாயிடும் பாருங்க... இன்னைக்கு பார்ட்டில நீங்க வரூன் கூட பேசினதை அண்ணன் ஏன் கோபமா பார்த்துச்சுன்னு நினைக்கிறீங்க..."

"ஏன்..??"

"அண்ணா போக்கிரி விஜய் மாதிரி ஒரு விஷயத்துல முடிவு பண்ணிட்டா அது பேச்சை அதுவே கேக்காது... ஆனா வெளிய கோபமா இருந்தாலும் மனசுக்குள்ள அந்த கோபமெல்லாம் இருக்காது... பொதுவா அண்ணனுக்கு கொஞ்சம் பொஸசிவ்னஸ் இருக்கு... "

இவள் தான் அதை சிறு வயதிலேயே கண்டிருக்கிறாளே... கவியோடு இவள் பேசுவதை பார்த்து அவன் பொறாமை படுவானே... பிரணதி சொன்னதும் ஏனோ அது ஞாபகம் வந்தது யுக்தாவிற்கு...

"அதுவும் அண்ணனுக்கு பிடிக்காதவங்களோட பேசுனா அண்ணனுக்கு ரொம்ப கோபம் வரும்... இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது..??"

"என்ன தெரியுது...?"

"அண்ணனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு தெரியுது.. அதான் வரூன் கூட நீங்க பேசறதை பார்த்து அதுக்கு பொறாமை... அப்புறம் கோபம்..."

"இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா... நீ கொஞ்சம் லேட் பிக்அப்ன்னு சொன்ன இல்ல... அது உண்மைன்னு தெரியுது..."

"ஏன் அப்படி சொல்றீங்க.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.