(Reading time: 21 - 41 minutes)

தெப்படி தெரியாம போச்சு?”, என்று உடன் வந்த பவதாரிணியிடம் கேட்டுக் கொண்டே  உள்ளே வந்தாள் அஞ்சனா... அவள் சத்தம் கேட்கவும் அனைவர் பார்வையும் அவள் மீது திரும்பியது...

ஏதோ தன்னைத் தான் கேட்கிறாள் என்று அதிர்ந்து திரும்பிய வருண்... லொட லொடவென்று பேசிக் கொண்டு பேசிக் கொண்டு வருபவளை விழி அசையாது பார்த்தான்!

‘யார் இந்த பொண்ணு? அப்சரஸ் மாதிரி இருக்குதே!’, என்று முதல் பார்வையிலே ஈர்த்து விட,

அவளோ, “இந்த அஞ்சனாவைப் பத்தி இப்பவாவது தெரிஞ்சுக்கோங்க..... நான் சொன்னா தான்... டாக்டர் கண்ணன் இல்லை.. லார்ட் கண்ணனே காட்சி கொடுப்பார்!!”,

என்று பவதாரிணியிடம் சொல்லி விட்டு, கண்ணனைப் பார்க்க.. அவன் சிரித்த படி,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

‘”வாலு!!! நீ தான் தாத்தாகிட்ட சொல்லி வெயிட் செய்ய வைத்ததா...”, என்று கேட்க...

“அப்புறம் பேஷன்ட்டோட அக்கா நான்!!! எனக்காக வெயிட் பண்ணனும் தானே????”, என்று இடுப்பில் கை வைத்து புருவத்தை ஏற்றி இறக்கி கண்ணனிடம் கேட்க...

அவனை முந்திக் கொண்டு வருண் தலை தானாக அசைந்து, “வெயிட் பண்ணலாம் தான்!!!”, என்று வாய் நிறைய பல்லாக சொல்ல... இப்பொழுது தான் அந்த ஜீவனையே கவனித்தாள்..

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வருணின் மீது பார்வை செலுத்த....

‘இவன் ஏன் லூஸ் தனமா சிரிக்கிறான்’, என்று யோசித்தவள்... ‘இருந்தாலும்... நமக்கு ஆமாஞ்சாமி போட்டதை மதிச்சு சிரிச்சு வைப்போம்!’

“ஹி.. ஹி”, என்று சிரித்தவளுக்கு  அதன் பின் அவன் பக்கம் கூட திரும்ப  தோன்றவே இல்லை!

இப்பொழுது ராகவ் அவள் சிரிப்பில் வருண் கவிழ்ந்ததை சொன்னதும்.... ‘ஏன் சிரிச்சு வைச்சோம். முறைச்சு இருக்கணும்.. வர்ற ஸ்பார்க்கும் ஃப்யூஸ் போயிருக்கும்!’, என்று எரிச்சலாக வந்தது!

அப்பொழுது ராகவ்வின் அலைபேசிக்கு பவதாரிணி அழைத்தார்....

“அஞ்சு சமாதானமாகிட்டாளா?”, வருத்தத்துடன் கேட்டார்.

வருண் அஞ்சனாவைப் பெண் கேட்டு, இந்த விஷயம் அஞ்சனாவிற்கு தெரிந்து விட, பவதாரிணியிடம் திருமணம் வேண்டாம் என்று சண்டையிட்டாள்...

“பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் கேட்க தான் செய்வாங்க! எல்லா சரியா வந்த பின்னாலே உன்கிட்ட கேட்கிறேன். அப்போ சொல்லு! இப்போவே எதுக்கு குதிக்கிறே!”

என்று அவர் சொல்லி விட, “நீங்க அப்போ  கேட்டாலும் அதையே தான் சொல்லுவேன்!”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் சென்னைக்கு!! அவளை தடுக்க முடியாதவர் ராகவ்விடம் சொல்ல...

“அது என் பொறுப்பு சித்தி! நான் அவ கூடப் போய் சமாதான படுத்திட்டு வர்றேன்!  நீங்க அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க!”, என்ற உறுதி அளித்து விட்டு தான் கிளம்பினான்...

இப்பொழுது அலைபேசியை எடுத்ததும், அவர் அதையே கேட்க...

“அது.. ஒன்னும் பிரச்சனையில்லை சித்தி!”, என்று மீண்டும் சொன்னவன்.. பின்  

சிறிது நேரம் பேசி விட்டு அலைபேசியை வைக்க.. அஞ்சனா அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்... என்ன செய்தியை சொல்ல போகிறானோ என்று!!

முகத்தில் கவலையும்.. கண்களில் பயமுமாக இருந்த தன் தங்கையைக் கண்ட ராகவ்விற்கு... கல்யாணம் - பெரிய வாழ்க்கை மாற்றம் - அந்த மாற்றத்தை எதிர்கொள்ளவதில் உண்டான பயம் தான் அவளிடம் தெரிகிறது என்று தோன்றியது! அதற்காக கூட தங்கை முகம் வாடுவதை விரும்பவில்லை!!!

“ஹே... குட்டி!!! இன்னும் இரண்டு மாசம் இருக்கு! பாரின் போன நம்ம ஆஸ்தான குடுமி ஜோசியர் லேண்ட் ஆகி அவர் ஜாதகத்தை பார்த்து சொல்றதை வைச்சு தான் அடுத்த ஸ்டெப் எடுப்பாங்க! சோ, இப்பவே எதுக்கு வருத்த படுறே?”

“இன்னும் இரண்டு மாசம்! அறுபது நாள்!!! கவலை எல்லாம் அப்புறமா பட்டுக்கோ! இப்போ என்ஜாய் பண்ணு!!!”, என்றான் சிரித்துக் கொண்டே ராகவ்....

அவன் சொன்னதும்... ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசம் அஞ்சனா முகத்தில்....

“ஹேஏஏஏ!!!!!!!!”, இரண்டு கையையும் உயரத் தூக்கி... குதித்து கொண்டாடியவள்..

‘அதுக்குள்ளே பரணிதரனை காட்டிடு பெல்லி பாய்!!! என்னோட நூற்றி எட்டு தோப்புக் கரணம் மேல சத்தியம்... ஆமா!!!’, என்று மனதிற்குள் மிரட்டினாள் தன் இஷ்ட தெய்வத்தை!

அன்று கல்லூரிக்கு கிளம்பி தயாராகி, செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள் ஷண்முகப் ப்ரியா... அப்பொழுது,

“ஷண்மு!!!!! நில்லு!!!!”, என்று அதட்டலாக வந்த அண்ணனின் குரல் கேட்டு

‘ஏற்கனவே, காலேஜ்க்கு டைம் ஆச்சு.. இவன் எதுக்கு இந்த நேரம் கூப்பிடுறான்’

என்று யோசனையும்.. அந்த அதட்டலில் உண்டான பயத்துடன் திரும்ப

கோபமாக அவளிடம் நெருங்கியவன்.. அவளை ஏற இறங்க பார்த்து..

“இது என்ன??? சின்ன பொண்ணாட்டம் பாவாடை சட்டையை போட்டுகிட்டு

திரியுற!!! தாவணி எங்கே???”,என்று  பல்லைக் கடித்துக் கொண்டு கடிந்து கேட்க...

‘சும்மாவே பட்டிக்காடுன்னு கிண்டல் பண்றாங்க.. இதுலே தாவணி வேற’, தனக்குள் சொல்லிக் கொண்டே,

“இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்? பஸ்ல தாவணியை போட்டுக்கிட்டு அலைய சொல்றியா???”, என்று தான்  அணிந்திருந்த நீளப் பாவாடையையும், சட்டையும் மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு கேட்டாள் அவள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.