(Reading time: 21 - 41 minutes)

பெடி க்யூர், மெனி க்யூர், த்ரெடிங், ஹேர் கட்”, இதையெல்லாம் செய்ய வேண்டும் அவள் பட்டியலிட..

“என்னது?????!!!!!!!”

என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடாத குறையில் கேட்டான் ராகவ்! இதற்கு முன் சென்று மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவம்...

“ராகு!! நீ விசிட்டர் சீட்ல உட்கார்ந்து சைட் அடிக்க நல்ல சான்ஸ்!!!!”, என்று வேறு அவனுக்கு யோசனை சொல்ல...

“நல்லா பாரு! உள்ளே இருக்கிறது எல்லாம் ஆண்ட்டிங்க!!! அவங்க ஹஸ்பன்ட்ஸ்கிட்ட அடி வாங்க விட்டுடுவ!!! நான் சைட்-ஆன்-தி-மூவ் ல செய்துக்கிறேன்! முடிஞ்சதும் கால் பண்ணு...”, என்றவன் மறவாது..

“நான் வர்ற வரைக்கும் ஸ்பாவுலே இரு!”, என்று சொல்லி விட்டு சென்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஸ்பாவில் தன் வேலையை முடித்து விட்டு... ராகவ்வை அழைக்க வெளியே வந்த பொழுது...  அருகிலிருந்த கோன் ஜஸ் வெண்டிங் மெஷின் இவள் கண்களில் பட்டு ஆசையைத் தூண்ட...  அதை வாங்கிக் கொண்டு திரும்பியவள்... எதிர் திசையில்  கோகிலாவையும், ஆர்யமனையும் பார்த்து விட்டாள் அஞ்சனா...

‘ஹே!!! காபி ஷாப்லே காதலை வளர்க்கிறாரா ஆர்யா!!!!’, என்று குதூகளித்தவள் தன் அலைபேசியில் அவர்களைப் படம் பிடித்தாள்!!!

அப்பொழுது கோகிலா அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தாள்... அவள் சென்றதும்... அதற்காகவே காத்திருந்த அஞ்சனா ஆர்யமனை நோக்கி ஓடினாள்....

“ஆர்யாஆஆஆஆஆ!!!!!”, என்ற சத்தமிட்ட அழைப்பில்.... அவள் பக்கம் திரும்பிய ஆர்யமனுக்கு....

‘இந்த லூசா!!!!’, என்ற திகைப்பு!!!!

ஆனாலும்... அன்று அழுகையுடன் சென்றவளின் முகம்.. இன்று கோடி மின்னல் பிரகாசத்துடன் இருப்பதைக் கண்டதும்.... அவனுக்குள் ஓர் திருப்தி!!!! ஆத்ம திருப்தி!!!

அவள் முகத்தையே பார்த்து இவனுக்குள் இந்த  எண்ணம் ஓடி அடங்குவதற்குள்... மூச்சிரைக்க அவள் தன்னை நோக்கி ஓடி வருகிறாள் என்பதை புரிந்து மூளை எச்சரிக்க.....

அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தான்! வேகமாக!!!!

தன்னைப் பார்த்தும், பார்க்காதது போல... முதுகைக் காட்டி செல்பவனைக் கண்டதும்...  அஞ்சனா.... “ஹே.. ஆர்யா!!! நில்லுங்க!!!!”

சத்தமிட்டுக் கொண்டே.. வேகத்தை கூட்டி அவனுக்கு முன்னே ஓடிச் சென்று அவனை வழி மறித்து தன் அலைபேசியை அவன் கண் முன்னே காட்ட...

அதிலிருந்த படத்தைப் பார்த்து அவன் அதிர்ந்த சமயம்...

“இது வேண்டாமா????!!!!”, என்று அஞ்சனா கண்களை உருட்டி விளையாட்டாக மிரட்ட....

“ஏய்!!!!!!!!!!! என்ன கிறுக்கு வேலை பார்த்து வைச்சிருக்கே???”, என்று பதற்றத்துடன் அதை பறித்து... அந்த படத்தை  டெலீட் செய்யப் போக....

திகைத்த அஞ்சனா,

“ஆர்யா! உங்க லைஃப்ல முக்கியமான பிக்சர்! ஏன் டெலீட் பண்றீங்க!!!!”, என்று  அவன் கையைப் பற்றி தடுக்க...

அவள் கை பட்டதுமே... விருட்டென்று நிமிர்ந்தவன்.. “தொடாதேன்னு சொல்லியிருக்கேன்ல”, என்று அடிக் குரலில் சீறி... உறுத்து நோக்கினான். விட்டால் எரித்து விடுவது போல...

அவன் முறைப்பே உள்ளுக்குள் உதறல் எடுத்தது அஞ்சனாவிற்கு... யாரும் அவளை இந்த அளவிற்கு மிரட்டியது கிடையாது! கையை அவனிடமிருந்து எடுத்துக் கொள்ள..

“நான் என்ன எனக்காகவா சொல்றேன்???”, என்றாள் வருத்தத்துடன்... சொன்னவள் முகமும் வாடிப் போக...

அதை கவனித்தவன்.. தான் போட்ட சத்தத்தில் தங்களை கடந்து போகிறவர்கள் வேடிக்கைப் பார்ப்பதையும் கவனிக்க தவறவில்லை... சற்றே நிதானத்திற்கு வந்தான்...

‘இவகிட்ட ஓவர் ரியாக்ட் பண்ணா உனக்கு தான்டா கஷ்டம்! நிதானமா ஹென்ட்டில் பண்ணு’,

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்..அவளைப் பார்த்து,

“மத்தவங்களுக்கு தெரியாம போட்டோ எடுக்கிறதே தப்பு!!!  இதுல இரண்டு பேரை சேர்த்து வைச்சு எடுத்து வைச்சிருக்கே! விளையாட்டு இல்லை அஞ்சனா!!!! நீ நல்ல எண்ணத்தில் செய்திருக்கலாம்! ஆனா, கோகிலாவைத் பாதிக்க சான்ஸ் இருக்கு! பெட்டர் டெலீட் திஸ்!”, என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல விவரிக்க....

இன்னும் அதில் உள்ள உண்மை புரியாமல்...

“ஏன்? ஏன்? கோக்கை பாதிக்கும்? அவங்க எப்படியும் உங்களை லவ் பண்ணுவாங்க ஆர்யா!”, என்று அத்தனை நம்பிக்கையுடன் ஆர்யமனைப் பார்த்தாள்..

அவன் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காது அப்படியே இருக்க... 

“நீங்களே.. இதோ... இந்த போட்டோல பாருங்களேன்..”, என்று

என்று திரையில் பார்வையைத்  திருப்பி...

“இரண்டு நாள் ஷேவ் பண்ணாம.. லைட்டா வளர்ந்த தாடி.. அலை அலையா ஹேர்.. எல்லாத்துக்கு மேலே.. இதோ... கோக் பார்த்து நீங்க சிரிக்கிறப்போ அந்த  கன்னக் குழி...“

“அப்புறம் நீங்க ஷர்ட்டை மடிச்சு விட்டு இருக்கிற ஸ்டைல்.... பேசுறப்போ நீங்க கையை வேவ் பண்ற ஸ்டைல்! தலையசைக்கிறதுல கூட உள்ள ஜென்டில்னஸ்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.