(Reading time: 21 - 41 minutes)

ப்போ சுடிதாரைப் போடு!!!”, என்று அவன் முகம் கடுகடுக்க சொல்ல...

“அதுக்கு பெட் சீட்டையே போர்த்திட்டு போறேன்”, என்று வாயாட ஆரம்பிக்க..

அவளுக்கு லஞ்ச் பாக்ஸை கொடுக்க வந்த அவள் அன்னை கலாவதி இவர்கள் பேசுவதை கவனித்து ஷண்முக ப்ரியாவை நோக்கி,

“அவனையே எதிர்த்து பேசுவியா? உன்னை எவன்கிட்டயாவது பிடிச்சு கொடுக்கிறதை விட்டுட்டு.. என் பிள்ளை ராத்திரி பகல்ன்னு பார்க்காம உழைச்சு... படிக்க வைக்கிறான்லே.. அதான் வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு”,

என்று அதட்ட.... அவளோ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“எப்ப பாரு அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ!!! ஹூம்”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்த படி  கிளம்பியவளை இடை மரித்தான் அவள் அண்ணன்....

“ட்ரெஸ்சை மாத்திட்டு போ!!!!”, என்று அழுத்தமாக சொல்ல...

இயலாமையில் அன்னையைப் பார்த்த ஷண்முகப்ரியாவிற்கு,

“நீயே சொல்லும்மா... அப்படியா கேவலமா போட்டுகிட்டுப் போறேன்!”, என்று  ஆதங்கத்துடன் கேட்க....

தன் மகனிடம் திரும்பிய கலாவதி,

“விடுடா அவளை!!!! பஸ்சை விட்டா... அப்புறம் ஆட்டோக்கு தான் வெட்டிச் செலவு!!! அதுவும் இப்போ இருக்கிற நிலையில்... ”, என்று அவளை அனுப்பி விட...

பணத்தை சொன்னதுமே... கவலை பற்றிக் கொண்டது அவனுக்கு.. இப்பொழுது தான் லோன் போட்டு வீடு வாங்கியிருக்கிறான். அதனால் இழுத்து பிடித்து தான் செலவு செய்ய வேண்டிய நிலை! அது கூட பரவாயில்லை!!! ஆனால், சம்பளமே கிடைக்காமல் போய் விட்டால்!!!!

ஆம், அவனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடை பெறுகிறது.. எந்த சமயம் வேண்டுமானாலும், இவன் வேலை போகலாம் - வேலை தேடி அலுத்து விட்டவனுக்கு.. கடைசி நம்பிக்கை மேக்ஸ் சாஃப்ட்!

‘அந்த ஹச்.ஆர். அடுத்த வாரம் சொல்றேன்னு.. சொன்னாரே! ஒரு கால் கூட வரலை! ஹூம்... இந்த ஹச். ஆர் ங்க இப்படி சொல்லி தானே கழட்டி விடுறாங்க... எதுக்கும் இன்னொரு தடவை கேட்டுப் பார்க்கலாமா?’,

இவன் இந்த யோசனையில் இருக்க... கலாவதிக்கோ தன் மகளின் வருத்தமே பெரிதாக பட...

“அவ எங்கே கண்ணை உறுத்துற மாதிரி போட்டு இருக்கா? அவ காலேஜ் போய் பாரு... ஒவ்வொருத்தியும் எப்படி வாராளுங்கன்னு!!!  நாலு இடம் போகாத எனக்கே தெரியுது.. உனக்கு தெரியாதா? ”

என்றார் கோபத்துடன் தன் மகனிடம். அவன் ஒன்றும் அவளை சங்கடப்படுத்தணும் என்று சொல்லவில்லையே.. அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவள் நடை, உடை, பாவனையில் அடங்கி விடும் என்பது!

பழமை வாதம் அவன் வளர்ந்த கிராமத்து சூழல் கொடுத்தது! அவன் தாய்க்கும் அதுவே! ஆனால், மகள் என்றதும் விட்டு கொடுக்காமல் பேசுகிறார்...

இந்த கார்பரேட் கலாச்சாரத்தில் அவன் பழக ஆரம்பித்தாலும்.. அது அவனது கொள்கையை சிறிதும் மாற்றவில்லை!

“அது இல்லைம்மா!!!! போன வாரம் ஒருத்தி,  இப்படி தான் பாவாடை சட்டையைப் போட்டுகிட்டு.. அதுவும் கோவில்ல வைச்சு.. முன்ன பின்ன ஆம்பிளைங்களையே பார்க்காதது போல என்னை வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருந்தா...”

“இவளும் அதே போல வந்தாளா... அந்த நியாபகம் வந்தது... அந்த எரிச்சல்ல தான்..”

என்று இழுக்க.. கலாவதியின் முகம் அருவருப்புடன் அவன் சொன்ன பெண்ணை பரிகாசித்தது...

“கோவில்லயா.. கண்றாவி.... அவளுங்களுக்கு என்னடா! அப்பன் காசுலே எந்த கவலையும் இல்லாம கொழுக்க வளர்ந்திருப்பாளுங்க!!!”, என்று...

அவன் தாய் சொல்லவும் ‘அவளையும் பார்க்கிறதுக்கு தப்பா தெரியலையே! ஆனா, அவ பார்த்தது தான் பெரிய தப்பா தெரிஞ்சது!!!’

அவன் மனதின் ஓரத்தில் அந்த உண்மை உரைத்தாலும்.. கலாவதியின் பேச்சை தடுக்கவில்லை அந்த பரணிதரன்!!!! - ஆம், அஞ்சனா பார்த்த பரணிதரனே தான்!!!

கலாவதி மேலும்,

“ஆனா, நம்ம சம்மு அப்படியா? எலும்பும் தோலுமா... அதை பாரு பஞ்சத்தில் அடி போட்டது போல இருக்கு! ஹூம்... சத்துணவு சாப்பாட்டுல தானே வளர்ந்தது! நீ தலையெடுத்த பிறகு தான்.. நமக்கு விடிவு காலமே பிறந்திருக்கு!”

என்று சொல்ல.. இவன் மனதில் மீண்டும் வேலையை எண்ணி பயம் வந்தது! மறுபடியும் அதே ஏழ்மையில் சிக்கி விடக் கூடாதே!! எப்பாடு பட்டாவது வேலை வாங்கியே ஆக வேண்டும் என்று மேக்ஸ் சாஃப்ட்டிற்கு சென்று தீர்மானம் எடுத்தான் மனதிற்குள்!!!

ராகவ் அஞ்சனாவை சென்னையில் விட்ட கையோடு... அது வார இறுதியை என்பதால் அங்கே இருந்து விட்டு... திங்கள்கிழமை மதுரைக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தான் ராகவ்...

ஞாயிற்றுக்கிழமை பொழுதை கழிக்க... இருவரும் மாலிற்கு கிளம்பி வந்திருந்தனர். அங்கு ஸ்பா இருப்பதைக் கண்டதும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.