“இப்படி French guy லுக்ல உள்ள உங்களை நோ சொல்லுவாங்களா கோக்?? நோ வே!!!”
என்று இடை இடையிடையே ஜஸ் க்ரீமை சுவைப்பதை மறைக்காது செய்துக் கொண்டே அந்த புகைப்படத்தைப் பார்த்து தன் கருத்தை வலியுறுத்துவதிலே குறியாக இருந்தவள்..
அவனைப் பற்றி வர்ணித்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியவில்லை!
ஐஸ் க்ரீம் சில்லென்று இறங்க இறங்க.. குளிரில் விரைத்த நாக்கு.. குளற ஆரம்பித்த பின் தான்... கருத்து சொல்வதை நிறுத்தி விட்டு ஆர்யமனை நோக்கி நிமிர.. அவனோ அமைதியாக இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவன் என்ன?? போட்டோவைப் பார்க்காம.. நம்மளை பார்க்கிறான்???’,
என்று தன்னையே வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…
படிக்க தவறாதீர்கள்...
‘என்ன?????’, என்பது போல அவள் கண்களும், தலையும் அசைய..
அவன் வாய் திறவாமல்... தன் பார்வையாலும்.. விரலாலும் சுட்டினான் - அவள் வாயைச் சுற்றி ஒட்டி இருந்த ஜஸ் க்ரீமை..
அது எப்பொழுதும் நடப்பது தானே!!! ஜஸ் க்ரீம் தான் முதல்ல முக்கியம்!!!!அது முடிச்ச பிறகு தான் துடைக்கிறதெல்லாம்!!!! என்று நினைத்த அஞ்சனா...
“ப்ச்.. அதுவா தேட்ஸ் ஓகே!!!”, என்று அலட்சியமாக பின்னுக்கு தள்ள....
அவனோ, “தேட்ஸ் நாட் ஓகே!!!”, என்றான் பார்வையை அதிலிருந்து அகற்றாமல்...
“ப்ச்.. என்ன ஆர்யா!!கோக் கிட்ட உங்க லவ்வை சொல்லுங்கன்னு சொன்னா.... இதுவா முக்கியம்!!!”, என்று அலுத்துக் கொள்ள...
அவள் பேச பேச... சற்றே கோபம் தணிந்து சமன்பட ஆரம்பித்திருந்த அவன் மனது... கோகிலா பேச்சு வந்ததும்... கோபமும் சேர்ந்து வர...
‘பொறுமை... பொறுமை’, தனக்குள்ளே சொல்லிக் கொண்டவனின் பார்வைக்கு இன்னும் அவள் வாயில் ஒட்டியிருந்த ஐஸ் க்ரீம் உறுத்தலாக இருக்க....
“சொல்றேன்!!!! பட், தி இஸ் நாட் ஓகே! ”, என்றான் விரலால் அதை சுட்டி... அதை சொல்லும் பொழுது.. ஒரு ரசனை அவன் பார்வையில்!
அவன் சொன்னதும் சரியென அவன் சொன்னதை செய்து விட்டு...
“இப்போவாவது கோக் பத்தி சொல்லுங்க!!!”, என்று கேட்க...
‘இனி கோக் பத்தி சொல்லணும்னா.. இனி அவங்களை பத்தி பேச வேண்டாம்ன்னு தான் சொல்லுவேன்!”, என்று சொல்ல..
‘ஏன்??’, என்பது போல அஞ்சனா பார்க்க... அந்த விஷயத்தை அதோட முடிக்க எண்ணியவனாக..
“அவங்களுக்கு ஏற்கனவே ஆள் இருக்குன்னு சொல்லிட்டாங்க!”, என்று
அதைக் கேட்டதும் மேலும் அதிர்ந்த அஞ்சனா.
“வாட்!!! அய்யோ!!! அப்போ உங்க லவ் என்னாகும்??”
என்று அவள் கேட்டதும்..
“ப்ச்... ஒரு பூ ஒரு தடவை தானே பூக்கும்!!!”, என்றான் அவள் இதோடு விட்டு விடுவாள் என நினைக்க... அவளோ...
‘அய்யோ பூவே உனக்காக விஜய் போல ஆகிடுவார் போலவே... இப்படியே விடக் கூடாதே!!!’, என்று இரக்கபட்டு,
“டோன்ட் ஒர்ரி ஆர்யா! உங்களுக்குன்னு ஒருத்தி பிறக்காமலா இருப்பா... நம்ம ஆபீஸ்லே முகுந்த் டீம்ல கூட ஒரு பொண்ணு சூப்பரா இருந்தா!!”, என்று அடுத்த ஜோடி சேர்க்க ஆரம்பிக்க.. இதை எதிர்பார்க்காதவன்....
‘ஹையோ!!!! ‘, என்று தலையைப் பிடித்துக் கொண்டான்..
‘இவளை எப்படி சமாளிக்க??? புத்திசாலியா இருந்தா சொல்லாமலே புரிஞ்சிப்பாங்க கவலை இல்லை... முட்டாளா இருந்தா ஒண்ணுமே புரியாது.. பரவாயில்லை... இது அரை வேக்காடா இருக்கே... இவளுக்கு எல்லாமே தப்புத் தப்பா புரியுதே!!’, என்று தனக்குள் குழம்பியவன்... பின் அவளைப் பார்த்து,
“இங்க பார் காஞ்சனா!! நாம லவ் பண்ற பொண்ணுக்கு லவ் இருந்தா.... எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது... சின்சியரா கடவுள்கிட்ட வேண்டிக்கணும்..... அது ப்ரேக் அப் ஆகணும்ன்னு..”, என்று எடுத்து சொல்ல...
“ப்ரேக் அப் ஆஆஆஆ... எதுக்கு???”, அவள் முழிக்க...
“எதுக்கா??? பிக் - அப் பண்றதுக்கு தான்”, என்றான் கூலாக...
“அய்யோ... கோக் பாவம்!!!”, என்று வருத்தமாக சொல்ல...
“அப்போ நான்???”, என்று இவன் கேட்க. அவனுக்காகவும் இறங்கியது இவள் மனது.
“அதானே!!!! நீங்க???? நீங்களும் பாவம் தான்!!”, என்றவள்..
“அப்போ ஓகே! உங்க சின்சியர் லவ்க்காக கோக் லவ் ப்ரேக் அப் ஆனா பரவாயில்லை!!! ஆனா, ஒரு வேளை அவங்க லவ் ஸ்ட்ராங்கா இருந்தா????”,
என்று அவள் ரஸ்ட் மூளை ரெஸ்ட் எடுக்காமல் கேள்வி கேட்க..
‘ஹய்யோடா... இவ கேள்வி கேட்டே எல்லா நியூரானுக்கும் வேலை வைச்சிடுவா போலவே!!! ‘, என்று தனக்குள் நொந்தாலும்.. அதைக் காட்டிக் கொள்ளாது...
“இங்க தான் தப்பு பண்ற காஞ்சனா!!! நெகடிவ் தாட்ஸ் மட்டும் லவ்ல இருக்கவே கூடாது!!! பாசிட்டிவ்வா இருக்கணும்!!”,
என்று அவன் சொன்னதும்... பெரிதாக தலையசைத்து....
“எஸ்..எஸ்.. அது உண்மை!!!! எனக்கும் கூட அதே தான்... நான்...”,என்று இழுத்து.. பரணிதரன் பற்றி சொல்ல வந்தவள் பின்...
“..... என் லவ் சக்சஸ் ஆகும்ன்னு முழுசா நம்புறேன்!!!! ஆனதும் சொல்றேன்..”, என்று சொல்லி விட்டு.... மீதமிருந்த ஜஸ் க்ரீம்மை முழுவதுமாக முடிக்க...
அதையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
‘அதான் அந்த பாவாக்கு டெய்லி கிஸ் கொடுக்கிறியே.... இன்னும் என்னத்தை சக்சஸ் பண்ணனும்!’ என்று எண்ணிக் கொண்டவனை...
‘அவ யாருக்கு கிஸ் கொடுத்தா உனக்கு என்ன? ஏன் இந்த பொறாமை??!!’, அவனுக்குள்ளே இருந்தவள் கேள்வி எழுப்ப....
‘எல்லாம் உன்னாலே தானே! நீ ஆரம்பிச்சு வைச்சது.. இந்த லூசுகிட்ட வந்து பேச வைச்சிட்டே!!!!’, என்று மானசீகமாக அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டவனின் பார்வை திரையில் ஒளிர்ந்த கோகிலா பதித்தவன் நிரந்திரமாக அழித்து விட்டு நிமிர்ந்தவன்...
“இந்த கோக் விஷயத்தை உளறி வைச்சது போல.. ஹர்ஷ்ஷோட பிஸ்னஸ் பார்ட்னர்ங்கிற விஷயத்தையும் யார்கிட்டயாவது உளறி வைச்சிருக்கியா?”
என்று கேட்க... இது நாள் வரை ஏதோ ஹர்ஷ் பிஸ்னஸ்ஸில் தொடர்புடையவன் என்று மட்டுமே நினைத்திருந்தாள். ஹர்ஷவர்தனின் பிஸ்னஸ் பார்ட்னர் இவன் தான் என்பது இப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு! அதைத் தொடர்ந்து ஹர்ஷவர்தன் பேசியது எல்லாம் நினைவுக்கு வர...
“ஹர்ஷ் சொன்ன சீக்ரட் டீல் முடிக்க மேக்ஸ் சாஃப்ட் வந்தது நீங்க தானா??!!”, என்று வியப்பு பொங்க கேட்க...
‘அடப்பாவமே... இது இன்னும் உனக்கு தெரியாதா? அப்போ உளறினது நானா?? இது என்னடா... ஒரு பிரச்சனையை க்ளோஸ் பண்ண நினைச்சா வேற ஒன்னு தலையை தூக்குது.. இவகிட்ட கட் அன்ட் ரைட்டா பேசிடுறது தான் சரி’, என்று தனக்குள் முடிவெடுத்தவன்....
“ஹே.. பேச்சை மாத்தாதே!!!! சொன்னியா?? சொல்லலையா?? அதை சொல்லு”, என்று மிரட்ட...
“நோ.. சொல்லை!!! அஞ்சனா மேல ப்ராமிஸ்!!!”, என்று சத்தியம் செய்யப் போக... அவனோ...
“உன் கசின் விஷயம்ன்னா உனக்குள்ளே வைச்சுக்க தெரியுதுல??? என்னை பத்தி மட்டும் ஊரு முழுக்க பரப்பி விடுற!!!”, என்றான் அழுத்தமாக...
அவன் சொன்னதும் முதலில் விழித்தாள்... அவள் என்ன எல்லாம் திட்டமிட்டு செய்கிறாளா என்ன? அந்த சமயம் என்ன தோன்றுதோ அதை செய்து விடுகிறாள்.. இப்பொழுது வந்து குறுக்கு விசாரணை செய்தால்??? என்ன சொல்லவென்று திகைத்து பின்,
“அது... அது... அன்னைக்கு ஹர்ஷ்க்கு பிரச்சனை வரும் சொல்லாதேன்னு சொன்னீங்க. ஆனா, கோகிலா விஷயம் நீங்க யார்கிட்டயும் சொல்லாதேன்னு மட்டுமே தானே சொன்னீங்க! பிரச்சனை வரும்ன்னு சொன்னீங்களா?’, என்று லாஜிக் பேச...
“பிரச்சனை வரும்ன்னு சொன்னா தான் தெரியுமா? நீயா உன் சின்ன மூளையை யூஸ் பண்ண மாட்டியா??!! கோகிலா பேரும் சேர்ந்து கெடும்ன்னு தெரியாதா?”, என்று குரலை உயர்த்தவில்லை!! ஆனால், அத்தனை காட்டம் அவன் கேள்வியில்..
உதட்டைப் பிதுக்கியவள்.. “நான் யார்கிட்டயும் சொல்லாதேன்னு தான் சுக்குட்டயும், சசிட்டயும் சொன்னேன்..”
“அதை நீ சொல்றப்போ சுத்தி உள்ளவங்க காதை மூடிகிட்டா இருந்திருப்பாங்க???”, அடக்கப்பட்ட கோபத்தில் அவன் கேட்க...
“ஹாய்யோடா... அதானே!!!”, என்று தலையில் கை வைத்து முழிக்க... அவனுக்கு ஆத்திரம்.. ஆனால், அமைதி காத்தான்..
“இனி எங்க வைச்சும் யார்கிட்டயும் இதை பேசலை!!! ப்ராமிஸ்!!!”, என்று ஆரம்பிக்க.. அவள் பேச்சில் எரிச்சலாகி.....
“எதுக்கெடுத்தாலும்.. இது ஒன்னை செய்திடுவே!!”, என்றவன்..
“இன்னொரு முறை இப்படி என்னை பத்தி யார்கிட்டயாவது உளறி வைச்சே?!!!! ஹர்ஷ்ஷோட பார்ட்னர்ஷிப்பே முறிச்சிட்டு போகவும் தயங்க மாட்டேன்!!! மைன்ட் இட்!!”
என்று மிரட்டி விட்டு அங்கிருந்து அகன்றான்! பாவம், அவனுக்கு தெரியவில்லை. இது ஒரு மாதிரி தான்... இன்னும் நிறைய அவன் பார்க்க வேண்டி உள்ளது என்பதை!!!
அடுத்த நாள்.. காலை எப்பொழுதும் அலுவலகத்திற்கு பைக்கில் வந்த ஆர்யமனை...
“ஆர்யமன் சர்!!!”, என்று செக்யூரிட்டி சத்தமாக அழைக்க... தனது பைக் வேகத்தை மட்டுபடுத்தி திரும்பி பார்க்க.. அவனைப் பார்க்க.. அலுவலக கேட் அருகே இரண்டு வாலிபர்கள் பைக்குடன் நின்று கொண்டிருந்தனர்.
“சர்!! உங்களைப் பார்க்க தான் அரை மணி நேரமா வெயிட் பண்றாங்க”, என்றான் அந்த செக்யூரிட்டி!
‘அரை மணி நேரமா? ஆபிஸ் ஒன்பதுக்கு தான் திறக்கும்ன்னு தெரியாதா?’, என்ற கணிப்பு அவனுக்குள் ஓட... அவர்களுக்கு ஏதோ முக்கியமாக தன்னிடம் தேவைப்படுகிறது என்பது மட்டும் புரிய... பைக்கை நிறுத்தி விட்டு அவர்களை நெருங்கியதும் ...
“நான் பரணிதரன்!!!”, என்று தன்னை அறிமுகம் செய்தான் அதில் ஒருவன்...
தொடரும்
{kunena_discuss:922}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.